APRIL 2024 -TODAY CURRENT AFFAIRS IN TAMIL -08.04.2024

TNPSC PAYILAGAM
By -
0

TODAY CURRENT AFFAIRS IN TAMIL -08.04.2024


இந்தியாவில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை 2024 :


  • இந்தியாவில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை, 2024 பிப்ரவரியில் 0.38 சதவிகிதம் உயர்ந்து 119.7 கோடியாக அதிகரித்துள்ளது. நகர்ப்புற தொலைபேசி சந்தா 66.37 கோடியாகவும், கிராமப்புற சந்தா 53.13 கோடியாகவும் அதிகரித்துள்ளது. 
  • மொத்த பிராட்பேண்ட் சந்தாதாரர்களின் எண்ணிக்கையும் ஜனவரி மாதம் இறுதியில் 91.10 கோடியிலிருந்து பிப்ரவரி மாதம் இறுதியில் 91.67 கோடியாக அதிகரித்துள்ளது என்று இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ள மாதாந்திர சந்தாதாரர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • முதல் ஐந்து சேவை வழங்குநர்கள், மொத்த பிராட்பேண்ட் சந்தாதாரர்களில் 98.35 சதவிகிதத்தினராக உள்ள நிலையில், 
  1. ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் (52.2 சதவிகிதம்), 
  2. பார்தி ஏர்டெல் (29.41 சதவிகிதம்), 
  3. வோடபோன் ஐடியா (13.80 சதவிகிதம்), 
  4. பிஎஸ்என்எல் (2.69 சதவிகிதம்) 
  5. மற்றும் அட்ரியா கன்வர்ஜென்ஸ் (0.24 சதவிகிதம்) ஆக உள்ளனர்


‘சுவிதா’ வலைதளம் :


  • நாட்டின் 18-ஆவது மக்களவைத் தோ்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து தோ்தல் பிரசாரத்துக்கு அனுமதி கோரி ‘சுவிதா’ வலைதளத்தில் இதுவரை 73,000-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக இந்திய தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 
  • ‘சுவிதா’ வலைதளம் என்பது தோ்தல் பிரசார நடைமுறைகளுக்காக அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களிடம் இருந்து அனுமதிகள் மற்றும் செயல்முறையை நெறிப்படுத்த இந்திய தோ்தல் ஆணையத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஒரு தொழில்நுட்ப தீர்வாகும். வலைதளம் மூலம் அளிக்கப்படும் அனுமதி குறித்த தரவுகள், தோ்தல் செலவினங்களை ஆராய்வதற்கு மதிப்புமிக்க ஆதாரமாகவும் செயல்படுகிறது.
  • "அதிகபட்சமாக தமிழ்நாட்டில் இருந்து 23,239 விண்ணப்பங்களும், அதைத் தொடர்ந்து மேற்கு வங்கம்(11,976), மத்தியப் பிரதேசம்(10,636) விண்ணப்பங்களும், 
  • குறைந்தபட்ச விண்ணப்பங்கள் சண்டிகர் (17), லட்சத்தீவு (18) மற்றும் மணிப்பூர் (20) ஆகிய இடங்களில் இருந்து பெறப்பட்டுள்ளன," என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


புதிய இக்லா-எஸ் வான் பாதுகாப்பு அமைப்பை இந்தியா பெறுகிறது:


  • ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட 24 இக்லா-எஸ் மேன் போர்ட்டபிள் ஏர் டிஃபென்ஸ் சிஸ்டம்ஸ் (Igla-S Man Portable Air Defence Systems (MANPADS)), 100 ஏவுகணைகளுடன், இந்திய ராணுவம் முதல் தொகுதியைப் பெற்றுள்ளது.
  • இந்திய இராணுவத்தின் மிகக் குறுகிய தூர வான் பாதுகாப்பு (VSHORAD) திறன்களை மேம்படுத்துவதற்காக இந்த அமைப்பு வாங்கப்படுகிறது.
  • முதல் தொகுதி ரஷ்யாவிலிருந்து வந்திருந்தாலும், மீதமுள்ள இந்த அமைப்புகள்  ரஷ்யாவிலிருந்து தொழில்நுட்ப பரிமாற்றம் (ToT) மூலம் இந்திய நிறுவனத்தால் உருவாக்கப்படும்.


மவுண்டன் கிளீனிங் பிரச்சாரம் 2024 


  • நேபாள ராணுவம் எவரெஸ்ட் பகுதியில் உள்ள மவுண்டன் கிளீனிங் பிரச்சாரம் 2024 இன் ஒரு பகுதியாக எவரெஸ்ட் சிகரத்தில் கிடக்கும் சுமார் 10 டன் குப்பைகள் மற்றும் ஐந்து உடல்களை சேகரிக்கும்.
  • மேஜர் ஆதித்யா கார்க்கி தலைமையிலான 12 பேர் கொண்ட குழு ஏப்ரல் 14ஆம் தேதி எவரெஸ்ட் அடிவார முகாமில் இறங்கவுள்ளது. 
  • 18 பேர் கொண்ட ஷெர்பா குழு ராணுவத்தின் துப்புரவுப் பயணத்தில் உதவும். 
  • இந்த பயணத்தை நேபாள ராணுவ தளபதி ஜெனரல் பிரபுராம் சர்மா காத்மாண்டுவில் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.



நடப்பு நிகழ்வுகள் கேள்வி மற்றும் பதில்கள் ஏப்ரல்-2024:

Current Affairs Question and Answers in Tamil -April-2024:


நாட்டின் 18-ஆவது மக்களவைத் தோ்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து தோ்தல் பிரசாரத்துக்கு அனுமதி கோரி ‘சுவிதா’ வலைதளத்தில் எந்த மாநிலம் அதிகபட்சமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக இந்திய தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது?

A) சண்டிகர்

B) மத்தியப் பிரதேசம்

C) மேற்கு வங்கம்

D) தமிழ்நாடு

ANS : D) தமிழ்நாடு



Post a Comment

0Comments

Post a Comment (0)