MAY 2024 -TODAY CURRENT AFFAIRS IN TAMIL 16.05.2024 - 17.05.2024

TNPSC PAYILAGAM
By -
0

MAY 2024 -TODAY CURRENT AFFAIRS IN TAMIL 16.05.2024 - 17.05.2024


தொழிலாளர் காலமுறை கணக்கெடுப்பு - காலாண்டு அறிக்கை (ஜனவரி-மார்ச் 2024):

  • நகர்ப்புறங்களில் 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களின்  வேலையின்மை விகிதம் 2023 ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை 6.8% ஆக இருந்த நிலையில் அது 2024 ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம்  வரை 6.7% ஆக குறைந்துள்ளது.
  • நகர்ப்புறங்களில் மகளிரின் வேலையின்மை விகிதம் 2023 ஜனவரி மாதம் முதல்  மார்ச் மாதம் வரை 9.2% ஆக இருந்த நிலையில், 2024 ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை அது 8.5% ஆக குறைந்தது.
  • நகர்ப்புறங்களில் தொழிலாளர் விகிதம் 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினரைப் பொறுத்த வரை 2023  ஜனவரி முதல்   மார்ச் மாதம் வரை 48.5% ஆக இருந்த நிலையில், 2024 ஜனவரி் முதல் மார்ச் மாதம் வரை அது 50.2%  ஆக அதிகரித்துள்ளது.
  • நகர்ப்புறங்களில் பெண் பணியாளர் விகிதம் 2023  ஜனவரி முதல்  மார்ச் மாதம் வரை 22.7% ஆக இருந்த நிலையில், 2024 ஜனவரி  மாதம் முதல் மார்ச் மாதம் வரை அது  25.6% ஆக அதிகரித்துள்ளது. இது LFPR இன் ஒட்டுமொத்த அதிகரிப்பு போக்கை பிரதிபலிக்கிறது.
  • 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய தொழிலாளர்கள் விகிதத்தின் படி, 2023  ஜனவரி முதல்  மார்ச் மாதம் வரை 45.2% ஆக இருந்த நிலையில், 2024 ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை 46.9% ஆக அதிகரித்துள்ளது.
  • நகர்ப்புறங்களில் பெண் தொழிலாளர் மக்கள் தொகை விகிதம் 2023 ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை 20.6% ஆக இருந்த நிலையில், 2024 ஜனவரி முதல் மார்ச் மாதம்  வரை 23.4% ஆக உயர்ந்துள்ளது.

உச்சநீதிமன்ற வழக்குரைஞா் சங்கத் தலைவராக கபில் சிபல் தோ்வு:

  • உச்சநீதிமன்ற வழக்குரைஞா் சங்கத்துக்கு (எஸ்சிபிஏ) புதியத் தலைவரைத் தோ்வு செய்வதற்கான தோ்தல் 16.05.2024  நடைபெற்றது. 
  • இதில் 6 போ் போட்டியிட்டனா். அவா்களில் கபில் சிபல் 1,066 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றாா். அவரை எதிா்த்துப் போட்டியிட்ட மூத்த வழக்குரைஞா் பிரதீப் ராய் 689 வாக்குகள் பெற்றாா். 
  • இதற்கு முன்பாக 1995-96, 1997-98 மற்றும் 2001-02 ஆண்டுகளில் மூன்று முறை எஸ்சிபிஏ தலைவராக கபில் சிபல் பதவி வகித்துள்ளாா்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் 14 பேருக்கு குடியுரிமை :

  • குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ், குடியுரிமை (திருத்த) விதிகள், 2024 (Citizenship (Amendment) Rules, 2024) வெளியிடப்பட்டபின் முதல் தொகுப்பு குடியுரிமைச் சான்றிதழ்கள்  14 பேருக்கு  மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் 15.5.2024 அன்று  வழங்கப்பட்டுள்ளது.சான்றிதழ்களை மத்திய உள்துறை செயலாளர் திரு அஜய்குமார் பல்லா  வழங்கினார். 
  • குடியுரிமை (திருத்த) விதிகள், 2024 (Citizenship (Amendment) Rules, 2024)-ஐ மத்திய அரசு 2024 மார்ச் 11 அன்று  அறிவிக்கை செய்தது. இதன் தொடர்ச்சியாக மதரீதியான துன்புறுத்தல்கள் அல்லது அவற்றால் ஏற்பட்ட அச்சம் காரணமாக பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து 31.12.2014 வரை இந்தியாவுக்கு வந்த இந்து, சீக்கிய, சமண, புத்த, பார்சி, கிறிஸ்தவ சமூகங்களைச் சேர்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
  • தில்லியில் உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு செயல்பாட்டு பிரிவு இயக்குநர் தலைமையிலான அதிகாரம் அளிக்கப்பட்ட குழு உரிய பரிசீலனைக்குப் பின் 14 விண்ணப்பதாரர்களுக்கு குடியுரிமை வழங்க முடிவு செய்தது.

சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழான வழக்கு விசாரணையின் தீர்ப்பு :
  • பண மோசடி புகாா் தொடா்பான வழக்கை சிறப்பு நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட பிறகு, குற்றச்சாட்டுக்கு உள்ளானவரை சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின் (Prevention of Money Laundering Act, 2002) கீழ் அமலாக்கத்துறை கைது செய்ய முடியாது’ என்று உச்சநீதிமன்றம்   தீா்ப்பளித்துள்ளது.  
  • மேலும், ‘இந்த வழக்கில் அழைப்பாணையின் பேரில் குற்றஞ்சாட்டப்பட்டவா் நீதிமன்றத்தில் ஆஜராவதை, காவலில் எடுத்ததாகக் கருத முடியாது. மாறாக, விசாரணைக்காக அவரைக் காவலில் எடுக்க நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை உரிய மனுவை தாக்கல் செய்யவேண்டும்’ என்றும் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டது.உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா, உஜ்ஜல் புயான் ஆகியோா் அடங்கிய அமா்வில் 16.5.2024 அன்று நடைபெற்ற சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழான வழக்கு விசாரணையின்போது இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது. 

இந்தியா ஸ்கில்ஸ் போட்டி 2024 (IndiaSkills Competition 2024):
  • இந்தியா ஸ்கில்ஸ் போட்டி 2024 (IndiaSkills Competition 2024) என்ற பெயரில்  நாட்டின் மிகப்பெரிய திறன் போட்டி  15- 18 மே 2024 தினங்களில் புது தில்லியில் நடைபெறுகிறது.
  • நான்கு நாட்கள் நடைபெறும் இந்தியா ஸ்கில்ஸ் போட்டியில் பங்கேற்பாளர்கள் பாரம்பரிய கைவினைப் பொருட்கள் முதல் அதிநவீன தொழில்நுட்பங்கள் வரை 61 திறன்களில் தேசிய மேடையில் தங்களது மாறுபட்ட திறன்கள் மற்றும் திறமைகளை வெளிப்படுத்துவார்கள். 47 திறன் போட்டிகள் நேரடியாகவும், 14 கர்நாடகா, ஹரியானா, உத்தரப்பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் சிறந்த உள்கட்டமைப்பு கிடைப்பதை மனதில் கொண்டு இணையம் வழியாகவும் நடத்தப்படும். ட்ரோன்-திரைப்படத் தயாரிப்பு, ஜவுளி-நெசவு, தோல்-காலணிகள் தயாரிப்பு போன்ற 9 கண்காட்சி திறன்களிலும் மாணவர்கள் பங்கேற்பார்கள்.
  • இந்தியா ஸ்கில்ஸ் போட்டியின் வெற்றியாளர்கள், சிறந்த தொழில்துறை பயிற்சியாளர்களின் உதவியுடன், வரும் செப்டம்பர் மாதத்தில்  பிரான்சின் லியோனில் நடைபெறவுள்ள உலகத் திறன்கள் போட்டிக்குத் தயாராவார்கள்,

”பீஷ்ம் திட்டம்”:
  • ”பீஷ்ம் திட்டம்” (Bharat Health Initiative for Sahyog, Hita and Maitri (BHISHM)) என்ற பெயரில், அவசர காலங்களில், எடுத்துச் செல்லத்தக்க மருத்துமனை வசதியை முதல் முறையாக  இந்திய விமானப் படை   உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் வெற்றிகரமாக சோதித்துள்ளது.  
  • இந்த சோதனையில், சுமார் 720 கிலோ எடை கொண்ட சிறியமருத்துவமனை  1,500 அடி உயரத்தில் இருந்து பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட பாராசூட் மூலம் உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் முதன்முதலாக தரையிறக்கப்பட்டு வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.  
  • இதற்காக, இந்திய விமானப் படைக்கு சொந்தமான சி-130 ரக விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. இந்த பாராசூட்களை ஆக்ராவில் உள்ள ஏர்டெலிவரி ரிசர்ச் அண்ட் டெவலப்மெண்ட் எஸ்டாபிளிஸ்மென்ட் வடிவமைத்துள்ளது.நாடு முழுவதும் பயன்படுத்தக்கூடிய கையடக்க மருத்துவமனைகளின் திறனை மதிப்பிடுவதை இந்த சோதனை நோக்கமாகக் கொண்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை மத்திய அரசு மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளது: 
  • 1991-ம் ஆண்டு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, எல்டிடிஇ அமைப்பை தீவிரவாத இயக்கம் என மத்திய அரசுஅறிவித்தது. 
  • இந்தியா முழுவதும்அந்த இயக்கத்தின் செயல்பாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டது. 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை அந்ததடை நீட்டிக்கப்பட்டு வந்தது.இந்நிலையில், 2019-ம் ஆண்டு மே மாதம் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது.

பன் திருவிழா' (Cheung Chau Bun Festival)  :  
  • ஹாங்காங்கில் பாரம்பரிய ’பன் திருவிழா’ 16.5.2024 அன்று வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டது. 
  • இது, ஹாங்காங்கில் உள்ள Cheung Chau தீவில் புத்தர் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக  நடைபெறும் ஒரு பாரம்பரிய சீன திருவிழா ஆகும்.   
  • இந்த நிகழ்வில், பன்களால் அலங்கரிக்கப்பட்ட உயரமான கம்பத்தில் ஏறி போட்டியாளர்கள் பன்களைப் போட்டி போட்டுக்கொண்டு பறிக்கின்றனர். அதிக எண்ணிக்கையில் பன்களை பறித்துக் கொள்பவர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.

India International Bullion Exchange IFSC Limited (IIBX) :
  • இந்தியா இன்டர்நேஷனல் புல்லியன் எக்ஸ்சேஞ்சில் (India International Bullion Exchange IFSC Limited (IIBX)) வர்த்தக மற்றும்  கிளியரிங் உறுப்பினராக (Trading-cum-Clearing Member (TCM)) செயல்படும் இந்தியாவின் முதல் வங்கியாக ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா ( State Bank of India (SBI) வங்கி  13 மே 2024 அன்று இணைந்துள்ளது. இதன் மூலம்,  SBIஇன் சர்வதேச நிதிச் சேவை மையம் (IFSC) வங்கிப் பிரிவு (International Financial Services Centre (IFSC) Banking Unit (IBU)) IIBX தளத்தில் வர்த்தகம் செய்ய உதவுகிறது.
  • இந்தியாவின் முதலாவது சர்வதேச புல்லியன் எக்ஸ்சேஞ்ச் (International Bullion Exchange)ஆன இந்தியா இன்டர்நேஷனல் புல்லியன் எக்ஸ்சேஞ்ச் IFSC லிமிடெட் (India International Bullion Exchange IFSC Limited (IIBX))  குஜராத்தின் காந்தி நகரில் உள்ள GIFT சிட்டியில் உள்ளது. 

 இந்தியாவின் முதல் மெய்நிகர் கிரெடிட் கார்டு :
  • ”PIXEL” என்ற பெயரில் இந்தியாவின் முதல் மெய்நிகர் கிரெடிட் கார்டை (virtual credit card) HDFC வங்கி   14 மே 2024 அன்று அறிமுகப்படுத்தியுள்ளது.   
  • தற்போது விசா நெட்வொர்க்கில் PIXEL Play மற்றும் PIXEL Go ஆகிய இரண்டு வகைகளில் இந்த மெய்நிகர் கிரெடிட் கார்டு கிடைக்கிறது.

Satellite In-orbit Third-party Liability Insurance’ பாலிசி:
  • இந்தியாவின் முதலாவது, விண்வெளி வீரர்களுக்கான  ‘Satellite In-orbit Third-party Liability Insurance’ பாலிசியை TATA AIG General Insurance Company Limited  அறிமுகப்படுத்தியுள்ளது. 
  • இது இந்திய விண்வெளித் துறையில் செயற்கைக்கோள் உற்பத்தியாளர்கள் மற்றும் ஆபரேட்டர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய முக்கியமான நிதிப் பாதுகாப்பை வழங்குகிறது.

நடப்பு நிகழ்வுகள் கேள்வி மற்றும் பதில்கள் ஏப்ரல்-2024:

Current Affairs Question and Answers in Tamil -April-2024:

2024 ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம்  வரை நகர்ப்புறங்களில் 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களின்  வேலையின்மை விகிதம்  -------- ஆக குறைந்துள்ளது.?


Post a Comment

0Comments

Post a Comment (0)