வெஸ்ட் நைல் காய்ச்சல் (West Nile Virus) :
- கேரளாவில் வெஸ்ட் நைல் வைரஸ் (West Nile Virus) என்ற கொசுக்களால் பரவும் வைரஸ் ஒன்றால் காய்ச்சல் பரவி வருவதாக கேரள அரசு சமீபத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளது.
- வெஸ்ட் நைல் வைரஸ் என்னும் இந்த வைரஸ் 1937ஆம் ஆண்டு முதன் முதலில் உகாண்டாவில் உள்ள வெஸ்ட் நைல் என்ற மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- இந்த வெஸ்ட் நைல் வைரஸ் என்பது ‘கியூலக்ஸ்’ என்ற ஒரு வகை கொசுவால் பரவும் நோய் எனவும், இந்த வைரஸ் பறவைகளிடம் இருந்து கொசுக்களுக்கும், பிறகு கொசுக்கள் மூலம் மனிதர்களுக்கும் பரவுகிறது.
- உலக சுகாதார நிறுவனத்தின்படி, வைரஸ் தொற்றுள்ள ஒரு பறவையின் ரத்தத்தில் இருந்து கொசுக்களுக்கு அந்த வைரஸ் பரவுகிறது. கொசுக்களின் உமிழ்நீர் சுரப்பிக்குள் நுழையும் இந்த வைரஸ், பின்னர் அதே கொசு மனிதர்களைக் கடிக்கும்போது அவர்களுக்குள்ளும் நுழைந்து பல்கிப் பெருகுகிறது.
- அதேநேரம் இந்த வைரஸ் வேறு பாதிக்கப்பட்ட மிருகங்களின் ரத்தம் மனிதர்களுக்குள் ஏதோ ஒரு வகையில் செல்லும்போதும் மனிதர்களைப் பாதிக்கலாம். ஆனால், ஒரு மனிதரில் இருந்து மற்றொரு மனிதருக்கு நேரடியாகப் பரவாது. பெரும்பாலும் காடுகள் மற்றும் நீர்நிலைகள் அதிகமுள்ள சூழல்களில் இந்தக் கொசுக்கள் அதிகம் உருவாகி, மக்களைத் தாக்குகின்றன.
19வது காடுகளுக்கான ஐநா மன்றம் (United Nations Forum on Forests (UNFF19)) நியூயார்க்கில் கூடியது:
- 2024 மே 6 முதல் 10 வரை நியூயார்க்கில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் வனங்களுக்கான மன்றத்தின் 19 வது அமர்வில் இந்தியா பங்கேற்றது. இந்த அமர்வின் போது, வனப் பாதுகாப்பு மற்றும் நிலையான வன மேலாண்மையில் நாட்டின் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை இந்தியா எடுத்துரைத்தது.
- இது கடந்த பதினைந்து ஆண்டுகளில் வனப்பகுதியை தொடர்ந்து அதிகரிக்க வழிவகுத்தது. உலகளவில், 2010 மற்றும் 2020 க்கு இடையில், சராசரி ஆண்டு வனப்பகுதியில் நிகர ஆதாயத்தில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.
- பாதுகாக்கப்பட்ட பகுதிகளின் கட்டமைப்பை ஆயிரத்திற்கும் மேற்பட்ட வனவிலங்கு சரணாலயங்கள், தேசிய பூங்காக்கள், புலிகள் காப்பகங்கள், பல்லுயிர் மற்றும் வனவிலங்கு வாழ்விடங்களுக்கு விரிவுபடுத்தியதன் மூலம், பல்லுயிர் மற்றும் வனவிலங்கு பாதுகாப்புக்கு நாடு அளித்து வரும் உயர் முன்னுரிமையை இந்தியா பகிர்ந்து கொண்டது. புலிகள் பாதுகாப்புத் திட்டத்தின் 50 ஆண்டுகள் மற்றும் யானைகள் பாதுகாப்புத் திட்டத்தின் 30 ஆண்டுகளைக் குறிக்கும் சமீபத்திய கொண்டாட்டங்கள், உயிரினப் பாதுகாப்பு மற்றும் வாழ்விட பாதுகாப்புக்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. கூட்டு சர்வதேச முயற்சிகள் மூலம் உலகெங்கிலும் உள்ள ஏழு புலி இனங்களைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட மற்றொரு முக்கியமான படியாக சர்வதேச பெரும் பூனை கூட்டணியை உருவாக்கியதையும் இந்தியா எடுத்துரைத்தது.
உலகின் நம்பர் 1 வீரரான மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்திய இந்தியாவின் பிரக்ஞானந்தா :
- போலந்தின் வாா்ஸா நகரில் சூப்பா்பெட் ரேபிட் மற்றும் பிளிட்ஸ் போட்டியில் இரண்டாவது சுற்றில் உலகின் நம்பர் 1 வீரர் காா்ல்ஸனை இந்திய வீரர் பிரக்ஞானந்தா வீழ்த்தினாா்.
- இத்தோல்வியின் மூலம் தொடருக்கான தரவரிசையில் காா்ல்ஸன் 2ம் இடத்துக்கு தள்ளப்பட்டார். சீனாவின் வெய் இ 20.5 புள்ளிகளுடன் முதலிடத்திலும், காா்ல்ஸன் 18 புள்ளிகளுடன் இரண்டாமிடத்திலும், பிரக்ஞானந்தா 14.5 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனா்.
- இந்தியாவின் அா்ஜுன் எரிகைசி நான்காம் இடத்திலும், டி. குகேஷ் 9.5 புள்ளிகளுடன் பத்தாம் இடத்திலும் உள்ளனா்.
ஜப்பான் நாட்டில் 6ஜி அலைக்கற்றை:
- ஜப்பான் நாட்டில் 6ஜி அலைக்கற்றை உபயோகிக்கக் கூடிய கருவியை சோதித்து பார்த்துள்ளனர். தற்போதுள்ள 5ஜியின் வேகத்தை விட 20 மடங்கு அதிவேகமாக 6ஜி செயல்படுகிறது.
- 6ஜியில் ஒரு நொடிக்கு 100ஜிபி அளவில் தரவு பரிமாற்றம் நடப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
- டோகோமோ, என்டிடி கார்பரேஷன், என்இசி கார்பரேஷன் மற்றும் புஜிட்சூ ஆகிய ஜப்பானின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனங்களின் கூட்டு முயற்சியால் இந்த 6ஜி சாத்தியமாகியுள்ளது.
தங்கப் பதக்கம் :
- நெதா்லாந்தில் நடைபெற்ற தடகள போட்டியில் இந்திய ஓட்டப் பந்தய வீராங்கனை ஜோதி யாராஜி தங்கப் பதக்கம் வென்றாா்.
- அந்நாட்டின் வகட் நகரில் நடைபெற்ற ஹேரி ஷல்டிங் விளையாட்டுப் போட்டிகளில், 100 மீட்டா் தடை தாண்டும் ஓட்டத்தில் ஜோதி 12.87 விநாடிகளில் பந்தய இலக்கை எட்டி முதலிடம் பிடித்தாா்.
- உலகத் தரவரிசையில் தற்போது 26-ஆவது இடத்திலிருக்கும் ஜோதி யாராஜி, பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதிபெறும் நிலையில் இருக்கிறாா்.
உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தை 29-ஆவது முறையாக ஏறி அதிகமுறை எவரெஸ்ட் சிகரத்தை ஏறியவா் :
- நேபாளத்தின் புகழ்பெற்ற மலையேற்ற வீரரான கமி ரீட்டா உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தை 29-ஆவது முறையாக ஏறி அதிகமுறை எவரெஸ்ட் சிகரத்தை ஏறியவா் என்ற தனது முந்தைய சாதனையைத் தானே முறியடித்துள்ளாா்.
- 54 வயதான கமி ரீட்டா 8,848 மீ உயரத்தை 29-ஆவது முறையாக ஏறி சாதனை புரிந்தாா்
- முதல் முறையாக 1994-ஆம் ஆண்டு தனது 24-ஆவது வயதில் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தாா். எவரெஸ்ட் சிகரத்தைத் தவிர கே2 சிகரம், சோ ஓயு, லோட்சே மற்றும் மனஸ்லு ஆகிய சிகரங்களிலும் எறி அவா் சாதனை புரிந்துள்ளாா்.
நடப்பு நிகழ்வுகள் கேள்வி மற்றும் பதில்கள் ஏப்ரல்-2024:
Current Affairs Question and Answers in Tamil -April-2024:
வெஸ்ட் நைல் வைரஸ் என்பது ?
A) விப்ரியோ காலரா என்ற பாக்டீரியாவால் பரவும் நோய்
B) பிளாஸ்மோடியம் என்ற ஒட்டுண்ணியால் பரவும் நோய்
C) கியூலக்ஸ் என்ற கொசுவால் பரவும் நோய்
D) நிமோகாக்கஸ் என்ற பாக்டீரியாவால் பரவும் நோய்
ANS : C) கியூலக்ஸ் என்ற கொசுவால் பரவும் நோய்
நடப்பு நிகழ்வுகள் 2024
- JANUARY 2024 -TNPSC CURRENT AFFAIRS IN TAMIL / ஜனவரி 2024
- FEBRUARY 2024 -TNPSC CURRENT AFFAIRS IN TAMIL / பிப்ரவரி2024
- MARCH 2024 -TNPSC CURRENT AFFAIRS IN TAMIL / மார்ச் 2024
- APRIL 2024 -TNPSC CURRENT AFFAIRS IN TAMIL / ஏப்ரல் 2024
- MAY 2024 -TNPSC CURRENT AFFAIRS IN TAMIL / மே 2024