MAY 2024 -TODAY CURRENT AFFAIRS IN TAMIL 14.05.2024 - 15.05.2024

TNPSC PAYILAGAM
By -
0

MAY 2024 -TODAY CURRENT AFFAIRS IN TAMIL 14.05.2024 - 15.05.2024


உள்நாட்டு இடப்பெயர்வு பற்றிய உலகளாவிய அறிக்கை:இந்தியா

  • இந்தியாவில் புயல், வெள்ளம், நிலநடுக்கம் மற்றும் பிற பேரிடர்கள் மூலம் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உள்நாட்டினுள் இடம் பெயர்ந்துள்ளதாக ஜெனீவாவைச் சேர்ந்த ‘உள்நாட்டு இடப்பெயர்வு கண்காணிப்பு மையம்’ தெரிவித்துள்ளது. 
  • அந்த மையம் வெளியிட்டுள்ள ’உள்நாட்டு இடப்பெயர்வு பற்றிய உலகளாவிய அறிக்கையில்’, இந்தியாவில் கடந்த 2022-ல் உள்நாட்டில் இடம்பெயர்வோரின் எண்ணிக்கை 25 லட்சமாக இருந்ததாகவும், 2023-ல் அது சரிந்து 5,28,000 இடப்பெயர்வு நிகழ்ந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • மிக அதிகமான இடப்பெயர்வு ஜூன் 2023-ல் ஏற்பட்ட பிபர்ஜாய் புயலின் போது வந்த வெள்ளத்தால் ஏற்பட்டுள்ளது. அறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி, பிபர்ஜாய் புயல் வந்ததற்கு பின்னர் 1,05,000 மக்கள் குஜராத், ராஜஸ்தானிலிருந்து இடம் பெயர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது
  • அதற்கடுத்ததாக, அஸ்ஸாம் மாநிலத்தில் மிகக் கனமழையினால் ஏற்பட்ட வெள்ளத்தினால் 91,000 மக்கள் இடம் பெயரக் காரணமாக இருந்துள்ளது.
  • தில்லியிலும், கடந்தாண்டு ஜூலை 9 அன்று கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவு பெய்த 153 மி.மீ. கனமழை, 27,000 பேர் இடம் பெயரக் காரணமாகியுள்ளது.
  • 2023-ல் வன்முறை மற்றும் கலவரம் காரணமாக 67,000 பேர் இடம்பெயர்ந்துள்ளதாகவும், அதிகமான இடப்பெயர்வு மணிப்பூரில் நிகழ்ந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வெட்டு:
  • வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வள்ளிமலையில் கி.பி. 10-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த இராட்டிரக்கூட மன்னன் மூன்றாம் கிருஷ்ணன் கன்னரதேவனின் இரு கல்வெட்டுகள் சிதிலமடைந்து காணப்படுவதாக வந்த தகவலின் அடிப்படையில், அப்பகுதியில் தொல்லியல் துறையினரும் வருவாய் துறையினரும் ஆய்வு மேற்கொண்டனர். 
  • அப்பொழுது வள்ளிமலை கோயில் அருகில் சிதிலமடைந்த இரண்டு கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டன. 
  • அந்த கல்வெட்டுகளில், கி.பி. பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த மூன்றாம் கிருஷ்ணன் இராட்டிரக்கூட மன்னன் கன்னரதேவனின் வெற்றியைப் பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது. இக்கல்வெட்டுகளில் தமிழிலும், கன்னடத்திலும் ஓரே செய்தியைக் குறிப்பிடுகிறது.
  • தமிழ்நாட்டில் அகழாய்வுகள் கண்டுபிடிப்புகள் தொடர்புடைய செய்திகள் 2024

இளம் பல்கலைக்கழகத் தரவரிசைப் பட்டியல் 2024:
  • லண்டன் டைம்ஸ் உயா்கல்வி நிறுவனத்தால் வெளியிடப்பட்ட இளம் பல்கலைக்கழகத் தரவரிசைப் பட்டியல் 2024-இன்படி ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் அமைந்துள்ள கலிங்கா இன்ஸ்டிடியூட் ஆப் இன்டஸ்ட்ரியல் டெக்னாலஜி(கேஐஐடி பல்கலைக்கழகம்) 168 ஆவது இடத்தையும், இந்தியாவிலிருந்து கலந்து கொண்ட உயா்கல்வி நிறுவனங்களில் 11 ஆவது இடத்திற்கு உயர்ந்துள்ளது.

சூரியப் புயல்:
  • சூரியனின் ‘ஏஆா்13664’ பகுதியில் உருவான சக்திவாய்ந்த சூரியப் புயலின் தாக்கம் இம்மாத தொடக்கத்தில் பூமியில் உணரப்பட்டதாகவும் இதை ஆதித்யா எல்-1 விண்கலம் பதிவு செய்ததாகவும் இஸ்ரோ  தெரிவித்தது.
  • ‘கடந்த 2003-ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை சூரியனில் ஏற்பட்ட மிகவலிமையான புவிகாந்தப் புயலாக இது கருதப்படுகிறது. 
  • 1859-ஆம் ஆண்டு சூரியனில் ஏற்பட்ட அதிசக்திவாய்ந்த சூரியப்புயலைத் (காரிங்டன் நிகழ்வு) தொடா்ந்து காந்தக் கதிா்வீச்சை குறுகிய நேரத்தில் அதிகளவில் வெளியிடும் சூரியனின் பகுதிகள் வரலாற்று ரீதியாக முக்கியத்துவம் பெற்றது.

முறையாக பணியாற்றவில்லை’ என வழக்குரைஞா்கள் மீது வழக்கு தொடர முடியாது: உச்சநீதிமன்றம்:
  • மனுதாரா்களுக்கு உரிய முறையில் பணியாற்றாத வழக்குரைஞா்கள் மீது நுகா்வோா் நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம் என தேசிய நுகா்வோா் குறைதீா்ப்பு ஆணையம் கடந்த 2007-இல் தீா்ப்பு வழங்கியது. 
  • இத்தீா்ப்பை உச்சநீதிமன்றம் 2009, ஏப்ரலில் நிறுத்திவைத்தது. ஆணையத்தின் தீா்ப்பை எதிா்த்து வழக்குரைஞா்கள் சங்கம் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பேலா எம்.திரிவேதி, பங்கஜ் மித்தல் ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்து  அளித்த தீா்ப்பில் கூறியதாவது: 
  • ஒருவருக்காக வழக்குரைஞா்கள் நீதிமன்ற வழக்குகளில் ஆஜராவது அவரின் தனிப்பட்ட பணியாகும். எனவே அதனை நுகா்வோா் பாதுகாப்புச் சட்டம், 2019, பிரிவு 2 (42)-இன்கீழ் குறிப்பிடப்பட்டுள்ள ‘சேவைகள்’ என்ற வரம்புக்குள் கொண்டு வர இயலாது. 
  • முறையற்ற வணிகம் மற்றும் தொழில் நடவடிக்கைகளில் இருந்து வாடிக்கையாளா்களை பாதுகாக்கவே 1986-இல் நுகா்வோா் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்டது. அதில் சில சீா்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு 2019-இல் சட்டதிருத்தம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் எந்த ஒரு பணியாளரையோ சேவைகளையோ கட்டுப்படுத்தும் நோக்கில் அச்சட்டம் இயற்றப்படவில்லை.
  • சட்டப்பணிகளைப் பிற வணிகம் சாா்ந்த பணிகளோடு ஒப்பீடு செய்ய இயலாது. ஏனெனில் வழக்குரைஞா் பணி என்பது பணம் சம்பாதிக்கும் நோக்கத்தையுடையது அல்ல; அது பிறருக்கு சேவைகள் செய்யும் உயா்ந்த பணியாகும்.
  • தன்னுடைய மனுதாரருக்காக நீதிமன்றத்தில் வழக்குரைஞா் வாதாடுகையில் நோ்மை, உண்மை உள்ளிட்ட உயா்ந்த பண்புகளை பின்பற்ற வேண்டும். எனவே, பிற வணிக நீதியான பணிகளிலிருந்து வழக்குரைஞா் பணி வேறுபடுவதால் அவா்கள் மீது ‘முறையாக பணியாற்றவில்லை’ என நுகா்வோா் நீதிமன்றங்களில் வழக்கு தொடர முடியாது என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

கடவுளின் கைகள்( சி.ஜே.4 வால் நட்சத்திரக் கூட்டமை) :
  • தென் அமெரிக்க நாடான சிலியில், கடல் மட்டத்திலிருந்து 7200 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள விக்டர். எம். பிளாங்கோ என்ற தொலைநோக்கியில் உள்ள உயர் தொழில்நுட்ப ‘டார்க் எனர்ஜி கேமரா’, கடவுளின் கைகள் என்றழைக்கப்படும் வால் நட்சத்திரக் கூட்டமைப்பை கடந்த வாரம் (மே 6) படம் பிடித்துள்ளது.
  • தற்போது வெளிவந்துள்ள கடவுளின் கைகள் என்ற சி.ஜே.4 வால் நட்சத்திரக் கூட்டமைப்பின் படம், ’பப்பிஸ்’ என்ற நட்சத்திர கூட்டத்தைக் கொண்ட பால் வெளி அண்டத்தில் எடுக்கப்பட்டதாகும். 
  • அவை, 1,300 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளன. தூசுக்களாலான தலைப்பகுதியும், சுழலும் கைகளை ஒத்திருக்கும் வடிவம் கொண்ட சி.ஜே.4-ன் தலைப்பகுதி 1.5 ஒளியாண்டுகள் நீளம் இருப்பதாகவும், அதன் வால் பகுதி 8 ஒளியாண்டுகள் அளவில் இருப்பதாகவும் ஆரய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். 
  • (ஒரு ஒளி ஆண்டு = தோராயமாக 9.46 லட்சம் கோடி கிலோமீட்டர்) இந்தக் கடவுளின் கைகள் 10 கோடி ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கும் இ.எஸ்.ஓ 257-19 (பிஜிசி 21338) என்ற பெயருள்ள சுழலும் பால்வெளி மண்டலத்தை நோக்கிச் செல்வது போன்ற தோற்றத்தைத் தருகிறது. 
  • வானியலாளர்கள் 1976-ம் ஆண்டு முதன்முதலாக ஐரோப்பாவில் உள்ள ஷ்மிட் (schmidt) தொலைநோக்கியில் இந்த வால் நட்சத்திரக் கூட்டமைப்பை கண்டுபிடித்தபோது அதன் மங்கலான தூசுக்கள் நிறைந்த தோற்றத்தினால், அதனை ஆராயக் கடினமாக இருந்துள்ளது.

மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி :
  • ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க கண்டங்களில் உள்ள நாடுகளில் மஞ்சல் காய்ச்சல் பரவலாக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, இந்தியாவிலிருந்து ஆப்பிரிக்கா, தெற்கு அமெரிக்கா நாடுகளுக்குச் செல்வோரும், அங்கிருந்து இந்தியா வருவோரும் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டுமென மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. 
  • இத்தடுப்பூசி செலுத்திக் கொண்ட 10 நாள்கள் கழித்தே மேற்கண்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளவும், அதேபோல, மேற்கண்ட நாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் நுழையவும் அனுமதிக்கப்படுவர். இதற்காக விமான நிலையங்களிலும் துறைமுகங்களிலும் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சகம்தெரிவித்துள்ளது.

நடப்பு நிகழ்வுகள் கேள்வி மற்றும் பதில்கள் ஏப்ரல்-2024:

Current Affairs Question and Answers in Tamil -April-2024:

சூரியனின் ---------பகுதியில் உருவான சக்திவாய்ந்த சூரியப் புயலின் தாக்கம் இம்மாத தொடக்கத்தில் பூமியில் உணரப்பட்டதாகவும் இதை ஆதித்யா எல்-1 விண்கலம் பதிவு செய்ததாகவும் இஸ்ரோ தெரிவித்தது. ?


Post a Comment

0Comments

Post a Comment (0)