MAY 2024 -TODAY CURRENT AFFAIRS IN TAMIL 02.05.2024

TNPSC PAYILAGAM
By -
0

 

TODAY CURRENT AFFAIRS IN TAMIL 02.05.2024

சூப்பர்சோனிக் ஏவுகணை சோதனை :Supersonic Missile-Assisted Release of Torpedo (SMART)

  • டார்பிடோ அமைப்பு  சூப்பர்சோனிக் ஏவுகணை 01/05/2024 ஒடிசா கடற்கரையில் உள்ள டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் தீவில் இருந்து வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. 
  • ஸ்மார்ட் (Supersonic Missile-Assisted Release of Torpedo (SMART) ) என்பது அடுத்த தலைமுறை ஏவுகணை அடிப்படையிலான இலகுரக டார்பிடோ விநியோக அமைப்பாகும். இது இந்திய கடற்படையின் நீர்மூழ்கி எதிர்ப்பு போர் திறனை மேம்படுத்துவதற்காக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் (டிஆர்டிஓ) வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது.
  • இந்த ஏவுகணை அமைப்பு பல மேம்பட்ட துணை அமைப்புகளைக் கொண்டுள்ளது. அதாவது இரண்டு-நிலை திட உந்துவிசை அமைப்பு, எலக்ட்ரோ மெக்கானிக்கல் ஆக்சுவேட்டர் அமைப்பு, துல்லியமான வழிசெலுத்தல் அமைப்பு போன்றவை இதில் இடம் பெற்றுள்ளன. இந்த அமைப்பு மேம்பட்ட இலகுரக டார்பிடோவை பேலோடாகவும், பாராசூட் அடிப்படையிலான வெளியீட்டு அமைப்பாகவும் கொண்டு செல்கிறது.
  • இந்த ஏவுகணை தரையில் இருந்து ஏவப்பட்டது. சமச்சீர் பிரிப்பு, வெளியேற்றம் மற்றும் திசைவேகக் கட்டுப்பாடு போன்ற பல அதிநவீன வழிமுறைகள் இந்தச் சோதனையில் சரிபார்க்கப்பட்டுள்ளன.

46-வது அண்டார்டிக் ஒப்பந்த ஆலோசனைக் கூட்டத்தையும், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான குழுவின் 26-வது கூட்டத்தையும் இந்தியா நடத்த உள்ளது:

  • இந்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகம், துருவ மற்றும் பெருங்கடல் ஆராய்ச்சிக்கான தேசிய மையம் மூலம், 46 வது அண்டார்டிக் ஒப்பந்த ஆலோசனைக் கூட்டமும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான குழுவின் 26-வது கூட்டமும் 2024 மே 20 முதல் 30 வரை கேரளாவின் கொச்சியில் நடைபெறும். அண்டார்டிகாவில் சுற்றுச்சூழல் மேற்பார்வை, அறிவியல் ஒத்துழைப்பு குறித்த ஆக்கபூர்வமான உலகளாவிய உரையாடலை எளிதாக்குவதற்கான இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு ஏற்ப இது அமைந்துள்ளது.
  • அண்டார்டிகா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடான இந்தியா, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, அறிவியல் ஒத்துழைப்பு மற்றும் அண்டார்டிகாவில் அமைதியான செயல்பாடுகளுக்கு அர்ப்பணிப்புடன் உள்ளது.
  • அண்டார்டிக் சுற்றுச்சூழல் மதிப்பீடு, தாக்க மதிப்பீடு, மேலாண்மை, அறிக்கை அளித்தல் ஆகியவற்றில் 26-வது சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான குழுவின் நிகழ்ச்சி நிரல் கவனம் செலுத்துகிறது. பருவநிலை மாற்றத்திற்குத் தீர்வு காணுதல், கடல் சார்ந்த பாதுகாப்பு உள்ளிட்ட பாதுகாப்பு மற்றும் மேலாண்மைத் திட்டங்கள், அண்டார்டிக் பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாத்தல் போன்றவையும் இதில் அடங்கும்.


கடற்படை தளபதி:

  • அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதி கடற்படை தளபதியாக பொறுப்பேற்றதையடுத்து, அவர் வகித்த துணை தளபதி பொறுப்புக்கு வைஸ் அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் நியமிக்கப்பட்டார்.
  • கிருஷ்ணா சுவாமிநாதன்:இதற்கு முன் அவர் கடற்படை தலைமையகத்தில் பணியாளர் பிரிவுக்கு தலைமை தாங்கினார். ஐஎன்எஸ் வித்யுத், வினாஷ், குலிஷ், மைசூர், விக்ரமாதித்யா விமானம் தாங்கி போர்க்கப்பல் ஆகியவற்றின் தலைமை அதிகாரியாகவும் பணியாற்றினார்.
  • கடந்த 1987-ம் ஆண்டு கடற்படையில் சேர்ந்த சுவாமிநாதன், தகவல் தொடர்பு மற்றும் எலக்ட்ரானிக் போர் முறையில் நிபுணத்துவம் பெற்றவர். தேசிய பாதுகாப்பு அகாடமி, அமெரிக்காவின் கடற்படை போர் கல்லூரி உட்பட பல பிரிவுகளில் சிறப்பு பயிற்சி பெற்றுள்ளார். கடற்படையில் இவர் ஆற்றிய சேவைக்காக அதி விஷிஸ்ட் சேவா பதக்கம், விசிஷ்ட் சேவா பதக்கம் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.


நடப்பு நிகழ்வுகள் கேள்வி மற்றும் பதில்கள் ஏப்ரல்-2024:

Current Affairs Question and Answers in Tamil -April-2024:


அதிக வருவாய் ஈட்டும் முதல் 10 ரயில் நிலையங்களில்,முதல் இடத்தை பிடித்துள்ளது

A) சென்னை எழும்பூர் ரயில் நிலையம்

B) சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்

C) கோயம்புத்தூர் ரயில் நிலையம்

D) திருவனந்தபுரம் ரயில் நிலையம்

ANS : B) சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்


Post a Comment

0Comments

Post a Comment (0)