ஆதித்த கரிகால சோழனின் கல்வெட்டு கண்டெடுப்பு:
- விழுப்புரம் அருகே உள்ள ஏமப்பூர் கிராமத்தில் வேதபுரீஸ்வரர் கோயிலில் திருப்பணியின்போது ஆதித்த கரிகால சோழனின் கல்வெட்டை அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியர் ரமேஷ், பட்ட ஆய்வாளர் இமான் உள்ளிட்ட குழுவினர் கண்டறிந்தனர்.
- இக்கல்வெட்டு 'ஸ்வஸ்தி ஸ்ரீ வீரபாண்டியன் தலை கொண்ட கோப்பரகேசரி' என்று தொடங்குகிறது இவனது நான்காவது ஆட்சி ஆண்டான பொது ஆண்டு 960 பொறிக்கப்பட்ட கல்வெட்டு திரு முனைப்பாடி நாட்டில் ஏமப்பேரூர் நாட்டு ஏமப்பேரூர் என்று இவ் ஊரை அழைக்கிறது. இது ஒரு நாட்டின் தலைமையிடமாக விளங்கி இருக்கிறது.
- ஏமப்பேரூர் என்பதே தற்போது ஏமப்பூர் என்று மருவி அழைக்கப்பட்டு வருகிறது. இவ்வூர் திருவாலந்துறை ஆழ்வாருக்கு இவ்வூர் மன்றாடி நிகரிலி மூர்த்தி சூரியன் சந்திரர் உள்ளவரை ஒரு நந்தா விளக்கு எரிப்பதற்காக 96 ஆடுகளை இக்கோயிலை நிர்வகித்த பன் மாகேஸ்வரர் வசம் ஒப்படைத்ததை கல்வெட்டு குறிப்பிடுகிறது. இவற்றில் இருந்து ஆதித்த கரிகாலன் இப்பகுதியை ஆட்சி புரிந்ததையும் அறிய முடிகிறது.
2023-24 –ம் நிதியாண்டில் சுரங்கத் துறை உற்பத்தியில் சாதனை படைத்துள்ளது:
- 2024, மார்ச் மாதத்திற்கான கனிம உற்பத்தி குறியீடு 156.1 ஆக இருந்தது, இது 2023, மார்ச் மாதத்தின் அளவுடன் ஒப்பிடும்போது 1.2% அதிகமாகும். முழு நிதியாண்டு 2023-24-க்கான குறியீடு நிதியாண்டு 2022-23 ஐ விட 7.5% அதிகரித்துள்ளது.
- 2023-24-ம் நிதியாண்டில் 277 மில்லியன் மெட்ரிக் டன் இரும்புத் தாது உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
- சுண்ணாம்புக்கல் உற்பத்தி 2022-23-ம் நிதியாண்டில் அடையப்பட்ட 406.5 மில்லியன் மெட்ரிக் டன் உற்பத்தி சாதனையையும் விஞ்சியுள்ளது. இது நிதியாண்டு 2023-24-ல் 10.7% அதிகரித்து 450 மில்லியன் மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது.
- முதன்மை அலுமினிய உற்பத்தி 2022-23-ம் நிதியாண்டில் 40.73 லட்சம் டன்னிலிருந்து 2023-24-ம் நிதியாண்டில் 41.59 லட்சம் டன்னாக 2.1% வளர்ச்சி விகிதத்தில் அதிகரித்துள்ளது.
- ஏப்ரல் 2024-க்கான இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 78.69 மில்லியன் டன்னை (தற்காலிகமானது) எட்டியது, முந்தைய ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது 7.41% வளர்ச்சியை பெற்றுள்ளது. இது கடந்த ஆண்டில் 73.26 மில்லியன் டன்னாக இருந்தது. ஏப்ரல் 2024-ல், கோல் இந்தியா லிமிடெட் (சிஐஎல்) 61.78 மில்லியன் டன் (தற்காலிக) நிலக்கரி உற்பத்தியை அடைந்தது.
- இந்தியா உலகின் 2வது பெரிய அலுமினியம் உற்பத்தியாளராகவும், 3-வது பெரிய சுண்ணாம்பு உற்பத்தியாளராகவும், 4-வது பெரிய இரும்புத் தாது உற்பத்தியாளராகவும் உள்ளது.
சீதனம் என்பது ஒரு பெண்ணின் "முழுமையான சொத்து":
- பெண்ணுக்கும் அவரின் கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தபோது, தனது தங்க நகைகளை கணவர் திரும்பக் கொடுக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் அப்பெண் முறையீடு செய்தார்.
- சீதனம் என்பது ஒரு பெண்ணின் "முழுமையான சொத்து" என்றும், கணவனுக்கு அந்த சொத்தின் மீது எந்தவித உரிமையும் இல்லை என்றும் உச்ச நீதிமன்றம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது
- தீர்ப்பு கூறிய நீதிபதிகள், திருமணத்தின்போது அல்லது திருமணத்துக்குப் பிறகு, அல்லது முன்னதாக பெண்ணுக்குக் கிடைக்கும் சீதனத்துக்கு, சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு முழு அதிகாரம் இருக்கிறது. அவற்றை, யாருக்கு கொடுக்க வேண்டும் என்பது குறித்து அப்பெண் முடிவு செய்ய முழு அதிகாரம் இருக்கிறது. அதை கணவர் கட்டுப்படுத்த முடியாது. அதே சமயம், நெருக்கடியான நேரத்தில் கணவர் அதைப் பயன்படுத்திவிட்டு, மீண்டும் மனைவியிடமே திரும்ப கொடுத்துவிடலாம் என்றார்.
நடப்பு நிகழ்வுகள் கேள்வி மற்றும் பதில்கள் ஏப்ரல்-2024:
Current Affairs Question and Answers in Tamil -April-2024:
2024, மார்ச் மாதத்திற்கான கனிம உற்பத்தி குறியீடு ---ஆக இருந்தது
A) 156.1
B) 156.3
C) 156.5
D) 156.7
ANS : A) 156.1
நடப்பு நிகழ்வுகள் 2024
- JANUARY 2024 -TNPSC CURRENT AFFAIRS IN TAMIL / ஜனவரி 2024
- FEBRUARY 2024 -TNPSC CURRENT AFFAIRS IN TAMIL / பிப்ரவரி2024
- MARCH 2024 -TNPSC CURRENT AFFAIRS IN TAMIL / மார்ச் 2024
- APRIL 2024 -TNPSC CURRENT AFFAIRS IN TAMIL / ஏப்ரல் 2024
- MAY 2024 -TNPSC CURRENT AFFAIRS IN TAMIL / மே 2024