MAY 2024 -TODAY CURRENT AFFAIRS IN TAMIL 04.05.2024 - 05.05.2024

TNPSC PAYILAGAM
By -
0

TODAY CURRENT AFFAIRS IN TAMIL 04.05.2024 -  05.05.2024


‘கள்ளக்கடல்’ என்ற சிவப்பு எச்சரிக்கை"

  • கேரளம் மற்றும் தென் தமிழக கடலோரப் பகுதிகளில் 04.05.2024 மற்றும் 05.05.2024 ‘கள்ளக்கடல்’ என்ற சிவப்பு எச்சரிக்கையை தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையம் (ஐஎன்சிஓஐஎஸ்) மற்றும் தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையம் ஆகியவை விடுத்துள்ளன. 
  • கடலில் எந்தவித அறிகுறிகளும் இன்றி திடீரென பலத்த காற்றும் வீசுவதோடு, கடல் கொந்தளிப்பும் ஏற்படுவதையே ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கையாக விடுக்கப்படுகிறது. இந்திய முன்னெச்சரிக்கை மையங்கள் முதன் முறையாக இந்த சொற்றொடரை பயன்டுத்தி தற்போது சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளன. 
  • 04.05.2024 அதிகாலை 2.30 மணி முதல் 05.05.2024 இரவு 11.30 மணி வரை கேரளம் மற்றும் தென் தமிழக கடலோரப் பகுதிகள் கொந்தளிப்புடன் காணப்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


குரல் மீளுருவாக்கத் தொழில்நுட்பம் :

  • கௌகாத்தியின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் குரல் நாண் அதிர்வு சமிக்ஞைகளிலிருந்து நேரடியாக மனித பேச்சு/குரல் சமிக்ஞைகளை உருவாக்குவதற்கான "LOQU" என்ற ஒரு புதிய முறையினை உருவாக்கி உள்ளனர்.
  • இந்த நுட்பத்தில் தொண்டையின் மேல் வைக்கப்பட்டுள்ள பல்வேறு உணர்விகளைப் பயன்படுத்தி, உட்செலுத்துதல் நடைமுறைகள் இல்லாமல் குரல்வளை மடிப்பு (நாண்) இயக்கத்தை ஆய்வு செய்ய முடியும்.
  • பேசும் போது, உள்ளார்ந்த குரல்வளை தசை இயக்கம் காரணமாக குரல் மடிப்புகள் அதிர்வுறும்.
  • உணர்வியக்கமின்மை (அப்ராக்ஸியா) பாதிப்பினால் ஏற்படும் பிறழ்வு போன்ற சில சந்தர்ப்பங்களில், சிலருக்கு ஒலி உற்பத்தி இல்லாமல் சாதாரண குரல் மடிப்பு அதிர்வு நிகழலாம்.
  • மேற்கண்ட குறைபாட்டிற்கு, குரல் நாண் அதிர்வுகளிலிருந்துப் பேச்சு சமிக்ஞைகளை மீளுருவாக்குவதற்கு LOQU என்பதினைப் பயன்படுத்த முடியும்.


LSAM 20 இழுவைப் படகு

  • ஒரு தனியார் நிறுவனத்தால் கட்டமைக்கப்பட்ட LSAM 16 (யார்டு 130) தொடரில் தயாரிக்கப் பட்ட ஆறாவது இழுவைப் படகு ஆனது மகாராஷ்டிராவின் தானேயில் இந்தியக் கடற்படையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • இதற்கு 'படைத் தளவாடத்துடன் கூடிய கடற்கணை கொண்ட எறிகணை இழுவைப் படகு, LSAM 20', என்று பெயரிடப்பட்டுள்ளது.
  • "படைத் தளவாடங்களைக் கொண்டு செல்லும் கப்பல்" என்பதன் சுருக்கமான LSAM என்பது இந்தியக் கடற்படைக்குத் தேவையான வெடிமருந்துகளைக் கொண்டு செல்வதில் இந்தப் படகு கொண்டுள்ளப் பங்கைக் குறிக்கிறது.



நடப்பு நிகழ்வுகள் கேள்வி மற்றும் பதில்கள் ஏப்ரல்-2024:

Current Affairs Question and Answers in Tamil -April-2024:


கள்ளக்கடல்’ எச்சரிக்கை என்பது  ?

A) கடல் அல்லது பெரிய ஏரி போன்ற பெரிய நீர்ப்பரப்புகளில் சடுதியாகப் பெருமளவு நீர் இடம்பெயர்க்கப்படும் போது ஏற்படும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அலைத் தொடர்களைக் குறிக்கும்.

B) மலையில் எரிமலை உண்டாகி, அதனால் வரும்.

C) கடலில் எந்தவித அறிகுறிகளும் இன்றி திடீரென பலத்த காற்றும் வீசுவதோடு, கடல் கொந்தளிப்பும் ஏற்படுவதையே

D) கடலை ஒட்டிய நிலப்பகுதியில் ஏற்படும் பூகம்பத்தால் வரும்.

ANS : C) கடலில் எந்தவித அறிகுறிகளும் இன்றி திடீரென பலத்த காற்றும் வீசுவதோடு, கடல் கொந்தளிப்பும் ஏற்படுவதையே


Post a Comment

0Comments

Post a Comment (0)