MAY 2024 -TODAY CURRENT AFFAIRS IN TAMIL 08.05.2024

TNPSC PAYILAGAM
By -
0

MAY 2024 -TODAY CURRENT AFFAIRS IN TAMIL 08.05.2024

‘கூகுள் வாலெட்’ 

  • கூகுள் நிறுவனம் இந்தியாவில் ‘கூகுள் வாலெட்’ செயலியை அறிமுகம் செய்துள்ளது. இதில் பேமென்ட் அம்சம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் உள்ள ஆண்ட்ராய்டு போன் பயனர்கள் இந்த செயலியை பயன்படுத்தலாம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
  • இந்தச் செயலி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் (2022) இதே மே மாதத்தில் நடைபெற்ற ‘கூகுள் இன்புட்/அவுட்புட்’ (i/o) டெவலப்பர் மாநாட்டில் அறிமுகம் செய்யப்பட்டது.

சர்வதேச கடல் மற்றும் புவி மேற்பரப்பு வெப்ப சராசரி ஏப்ரல் 2024-ல் புதிய உச்சத்தை தொட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
  • எல்நினோ தாக்கம் படிப்படையாக வலுவிழந்து வரும் சூழலில் அதன் இறுதிக்கட்ட தாக்கத்தால் வெப்பம் கடுமையாக அதிகரித்து வருவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
  • எல் நினோ என்பது உலகம் முழுவதும் பரவலாக பல்வேறு பகுதிகளிலும் வெப்பநிலையை உயரச் செய்யும் ஒரு வகை காலநிலை நிகழ்வு. பசிபிக் கடல்பரப்பு வெப்பநிலையை ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு அதாவது, 7 முதல் 24 மாதங்கள் வரை அதிகமாக்கும் நிகழ்வு தான் இந்த 'எல் நினோ'. 
  • இதன் விளைவாக கடந்த ஜூன் மாதம் தொடங்கி ஒவ்வொரு மாதமுமே சர்வதேச வெப்ப சராசரி புதிய உச்சங்களைத் தொட்டு வருகிறது. அந்த வகையில் ஏப்ரல் 2024-ல் தொழில்புரட்சிக்கு முந்தைய காலகட்டத்தில் நிலவிய சர்வதேச புவி மேற்பரப்பு வெப்ப சராசரியைவிட உயர்ந்து 1.58 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது.
'பாரிஸ் உடன்படிக்கை' :
  • கடந்த 2015 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸ் நகரில் கூடிய ஐ.நா. காலநிலை மாநாட்டில் (COP21) 'பாரிஸ் உடன்படிக்கை' (Paris Agreement) உலகின் 195 நாடுகளால் ஒருமனதாக ஏற்கப்பட்டது.
  • நிலக்கரி, பெட்ரோல், டீசல், எரிவாயு உள்ளிட்ட படிம எரிபொருட்களை மிதமிஞ்சி பயன்படுத்தியதாலும், காடுகளை அழித்ததாலும் வளிமண்டலத்தில் மாசுக்காற்றின் அடர்த்தி அதிகமாகி, பூமியின் மேற்பரப்பு வெப்பநிலை அதிகரித்துச் செல்கிறது. இதனால் பெருவெள்ளம், அதிவேக சூறாவளி, பெரும் வறட்சி, நோய்கள் அதிகரிப்பு, வேளாண்மை பாதிப்பு, கடல்வள அழிவு என எண்ணற்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.
  • 14 டிகிரி செல்சியசாக இருந்த புவி மேற்பரப்பு சராசரி வெப்பநிலை ஒரு டிகிரி செல்சியஸ் அதிகரித்ததன் விளைவாகத்தான் இவ்வளவு பாதிப்புகளும் ஏற்பட்டிருக்கின்றன. 
  • இது மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற நிலையில், அதை 2 டிகிரி செல்சியஸ், அதாவது 16 டிகிரி என்ற அளவுக்கு செல்லவிடாமல் குறைக்க உறுதி ஏற்கப்பட்டிருக்கிறது. முடிந்தால் இதை 1.5 டிகிரி செல்சியசுக்குள், அதாவது 15.5 டிகிரி செல்சியசுக்குள் கட்டுப்படுத்த முயற்சி செய்வது என்றும் ஐ.நா. காலநிலை மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது. 
  • ஆனால், ஏப்ரல் 2024-ல் தொழில்புரட்சிக்கு முந்தைய காலகட்டத்தில் நிலவிய சர்வதேச புவி மேற்பரப்பு வெப்ப சராசரியைவிட உயர்ந்து 1.58 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது.

இந்தியாவில் ஒரு நபருக்கு மருத்துவ சேவைக்கான அரசு செலவினம் : 

  • இந்தியாவில் ஒரு நபருக்கு மருத்துவ சேவைக்கான அரசு செலவினம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. 
  • உதாரணமாக, 2014-15 மற்றும் 2019-20 க்கு இடையில், ஒரு நபருக்கு ரூ.1,108 லிருந்து ரூ.2,014 ஆக உயர்ந்தது. 
  • 2020-21ல் ஒரு நபருக்கு அரசு செலவினம் ரூ.2,322 ஆகவும், 2021-22ல் ரூ.3,156 ஆகவும் உயர்ந்து கொண்டு இருக்கிறது. இது 2014-15 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் அரசு செலவினம்  மூன்று மடங்கு  உயர்ந்துள்ளது .


உலக பத்திரிகை சுதந்திரக் குறியீடு 2024:

  • உலக பத்திரிகை சுதந்திரக் குறியீட்டின் 22வது பதிப்பில் (World Press Freedom Index (WPFI 2024)), இந்தியா 180 நாடுகளில் 31.28 மதிப்பெண்களுடன் 159வது இடத்தில் உள்ளது. 
  • ரிப்போர்ட்டர்ஸ் வித்தவுட் பார்டர்ஸ் (Reporters Without Borders) அமைப்பு வெளியிட்டுள்ள இந்த பட்டியலில்,  நார்வே தொடர்ந்து 8வது ஆண்டாக முதலிடத்தில் உள்ளது அதைத் தொடர்ந்து டென்மார்க் (2வது) மற்றும் ஸ்வீடன் (3வது).  
  • கடைசி 3 இடங்களில் எரித்திரியா (180வது); சிரியா (179வது), மற்றும் ஆப்கானிஸ்தான் (178வது) ஆகிய நாடுகள் உள்ளன. 
  • துருக்கி, பாகிஸ்தான் மற்றும் இலங்கையை விட இந்தியா பின்தங்கியுள்ளது.


C-295 போக்குவரத்து விமானம்

  • இரண்டாவது C-295 போக்குவரத்து விமானத்தை ஏர்பஸ் டிஃபென்ஸ் மற்றும் ஸ்பேஸ் எஸ்.ஏ., ஸ்பெயினில் (Airbus Defence and Space S.A., Spain) இருந்து இந்திய விமானப்படை பெற்றுள்ளது.  இந்த C-295 விமானங்கள் 1960 முதல் இந்திய விமானப்படையின் சேவையில் இருக்கும் Avro Hawker Siddeley HS-748 விமானங்களை மாற்றும்.
  • 2021 செப்டம்பரில், இந்திய பாதுகாப்பு அமைச்சகம்  இந்திய விமானப்படையின் சேவையில் இருக்கும் Avro Hawker Siddeley HS-748 வை மாற்றுவதற்காக 56 C-295 போக்குவரத்து விமானங்களை வாங்குவதற்காக ஸ்பெயினின் Airbus Defense மற்றும் Space S.A. உடன் ரூ.21,935 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.  
  • ஒப்பந்தத்தின்படி, ஸ்பெயினின் செவில்லில் உள்ள ஏர்பஸ் வசதியில் 16 விமானங்கள் தயாரிக்கப்படும்.
  • டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட் (Tata Advanced Systems Limited (TASL)), டாடா குழுமத்தின் strategic Aerospace and Defence மற்றும் Airbus Defence and Space இணைந்து  மீதமுள்ள 40 C-295 விமானங்களை குஜராத்தின் வதோதராவில் உள்ள C-295 ஃபைன் அசெம்பிளி லைனில் (Fine Assembly Line(FAL)) தயாரிக்கும்.
  • இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் விமானம் 2026 இல் இந்திய விமானப்படையில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும். 


அணு ஆயுத போருக்கான ஒத்திகையை அறிவித்துள்ள ரஷியா :
  • உக்ரைன் போரில் தங்களது ஈடுபாட்டை மேலும் அதிகரிக்கப்போவதாக மேற்கத்திய நாடுகள் கூறிவருவதற்குப் பதிலடியாக, அணு ஆயுத போா் ஒத்திகையை நடத்தவிருப்பதாக ரஷியா அறிவித்துள்ளது.

இந்தியாவுக்கான புதிய சீன தூதராக:
  • இந்தியாவுக்கான புதிய சீன தூதராக  சூ ஃபெய்காங்கை அந்நாட்டு அதிபா் ஷி ஜின்பிங் நியமித்துள்ளார்.லடாக் எல்லை மோதல் பிரச்னையால் இருநாட்டு உறவில் சிக்கல் நீடித்து வந்த நிலையில் சுமாா் 18 மாதங்களுக்குப் பிறகு இந்தியாவுக்கான தூதரை சீன அறிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் தூதராக
  • ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் (UNICEF (United Nations Children’s Fund))  இந்தியாவிற்கான  தேசிய பிரபல தூதராக (National celebrity Ambassador) பாலிவுட் நடிகை கரீனா கபூர் கானை நியமித்துள்ளது. குழந்தைகளின் ஆரம்பகால வளர்ச்சி, சுகாதாரம், கல்வி மற்றும் பாலின சமத்துவத்திற்கான குழந்தைகளின் உரிமைகளுக்காக அவர் பணியாற்றுவார். 
  • ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியத்தின் இந்திய பிரிவின் (UNICEF India) குழந்தைகளின் உரிமைகளுக்காக புதிய இளைஞர் நல்லெண்ண தூதுவர்களாக (youth advocates for rights of children) கௌரன்ஷி ஷர்மா, நஹித், வினிஷா, கார்த்திக் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

நடப்பு நிகழ்வுகள் கேள்வி மற்றும் பதில்கள் ஏப்ரல்-2024:

Current Affairs Question and Answers in Tamil -April-2024:


உலக பத்திரிகை சுதந்திரக் குறியீட்டின் 22வது பதிப்பில் (World Press Freedom Index (WPFI 2024)), இந்தியா 180 நாடுகளில் 31.28 மதிப்பெண்களுடன் ----வது இடத்தில் உள்ளது?







Post a Comment

0Comments

Post a Comment (0)