பிஹாரில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்பட்ட 65 சதவீத இடஒதுக்கீட்டை பாட்னா உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது:
- பிஹார் மாநிலத்தில் சாதிவாரியான மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த முதல்வர் நிதிஷ் குமார் உத்தரவிட்டார். 1931-ம் ஆண்டுக்கு பிறகு பிஹாரில் சமீபத்தில் தான் சாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதன் அறிக்கை கடந்த ஆண்டு அக்.2-ம் தேதி வெளியானது.
- இதில் பிஹார் மக்கள் தொகையில் பிற்படுத்தப்பட்ட, இதர பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 64 சதவீதம் பேர் இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து இந்த அறிக்கையின்படி, அரசு வேலைவாய்ப்பு மற்றும் கல்வி நிறுவனங்களில் உள்ள இடஒதுக்கீட்டை 50 சதவீதத்தில் இருந்து 65 சதவீதமாக உயர்த்தும் மசோதா பிஹார் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
- புதிய சட்டத்திருத்தத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை இன்று (ஜூன் 20) பாட்னா உயர் நீதிமன்றம் அளித்தது. அதில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்பட்ட 65 சதவீத இடஒதுக்கீட்டை அதிரடியாக உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில், “65 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக கடந்த ஆண்டு பிஹார் சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட திருத்தங்கள் அரசியலமைப்பின் அதிகாரங்களுக்கு அப்பாற்பட்டவை என்றும், அரசியலமைப்பின் 14, 15 மற்றும் 16வது பிரிவின் விதிகளை 65 சதவீத இடஒதுக்கீடு சட்டம் மீறுவதாக உள்ளது” என்றும் கூறி அவற்றை ரத்து செய்துள்ளது.
பிஹார் மாநிலத்தில் ரூ.1,749 கோடிசெலவில் கட்டப்பட்ட நாளந்தா பல்கலைக்கழகத்தின் புதிய வளாகத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்:
- பிஹார் மாநிலம் நாளந்தா மாவட்டத்தில் உள்ள ராஜ்கிர் நகரில் கடந்த 2014-ம் ஆண்டு நாளந்தா பல்கலைக்கழகம் தற்காலிக இடத்தில் 14 மாணவர்களுடன் செயல்படதொடங்கியது. பழங்காலத்தில் இதே நகரில் அமைந்திருந்த உலகப்புகழ் பெற்ற நாளந்தா பல்கலைக் கழகத்தின் மறுவடிவம்தான் இது.
- மத்திய ஆராய்ச்சி பல்கலைக்கழகமான இது, சர்வதேச பல்கலைக்கழகம் ஆகும். வெளியுறவு அமைச்சகத்தின்கீழ், கிழக்கு ஆசியா உச்சி மாநாட்டின் 18 உறுப்பு நாடுகளின் ஆதரவுடன் இது செயல்படுகிறது.இந்த பல்கலைக்கழகத்துக் கான புதிய வளாகத்தின் கட்டுமான பணி கடந்த 2017-ம் ஆண்டுதொடங்கியது. பணிகள் முடிவடைந்த நிலையில், நாளந்தா பல்கலைக்கழகத்தின் புதிய வளாகத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
- தற்போதைய பிஹார் மாநிலத்தின் மையப் பகுதியான நாளந்தாவுக்கு அருகில் உள்ள ராஜ்கிர் (ராஜகிரகம்) நகரில் கி.பி. 5-ம்நூற்றாண்டில் குப்தர்கள் காலத்தில் கட்டப்பட்டது நாளந்தா பல்கலைக்கழகம்.
- இங்குள்ள ரத்னோதாதி என்ற 9 மாடி கட்டிடத்தில் ‘தர்ம குஞ்ச்’ அல்லது ‘உண்மையின் மலை’ என்ற நூலகத்தில் 90 லட்சம் புத்தகங்கள், புனிதமான கையெழுத்து பிரதிகள் சேமித்து வைக்கப்பட்டிருந்தன.
- நாளந்தா, உலகின் முதல் உண்டு உறைவிட பல்கலைக்கழக மாக விளங்கியது. இங்கு 2,000ஆசிரியர்கள், 10,000 மாணவர்கள் இருந்தனர். பவுத்தம் பற்றிய ஆய்வு படிப்புகளுடன் வானியல், மருத்துவம், தர்க்கம், கணிதம் போன்ற பாடங்களும் கற்பிக்கப்பட்டன. நாளந்தா இடிபாடுகள் 2016-ல் உலக பாரம்பரிய பகுதியாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டது.
- கடந்த 2006-ல் நாளந்தா பல்கலைக்கழகத்தின் மீள் உருவாக்கத்தை முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் முன்மொழிந்தார், 2010-ல் நாளந்தா பல்கலைக்கழக சட்டம் நிறைவேற்றப்பட்டு, சுமார் 800 ஆண்டுகளுக்கு பிறகு நாளந்தா பல்கலைக்கழகம்2014-ல் மீண்டும் திறக்கப்பட்டது.
மினி பேருந்து (சிற்றுந்து) திட்டம்-2024 :
- ஒரு புதிய விரிவான மினி பேருந்து (சிற்றுந்து) திட்டம்-2024 என்ற ஒரு புதிய வரைவு அறிக்கையானது தமிழ்நாடு அரசினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
- இந்த வரைவுத் திட்டமானது, பேருந்துகளை இயக்கும் நிறுவனங்கள் 25 கி.மீ. என்ற அனுமதிக்கப் பட்ட அதிகபட்ச தொலைவு வரையில் பேருந்துகளை இயக்குவதற்கு அனுமதிக்கச் செய்கிறது.
- தற்போது, மினி பேருந்துகள் அதிகபட்சமாக 20 கி.மீ வரை இயக்கப்பட அனுமதிக்கப்பட்டுள்ளது என்ற நிலையில் இதில் 16 கி.மீ பேருந்து இயக்கப் பாதையானது தொலை தூரப் பகுதிகளில் அமைய வேண்டும்.
- மாநில அரசு ஆனது, 1997 ஆம் ஆண்டில் மினி பஸ் திட்டத்தை அறிமுகப்படுத்தியது என்ற நிலையில் அதன் கீழ் பேருந்து இயக்க நிறுவனங்கள் 16 கி.மீ. நீளப் பாதை வரை மினி பேருந்துகளை இயக்க அனுமதி வழங்கப்பட்டன.
- இரண்டு
ஆண்டுகளுக்குப் பிறகு, பேருந்து இயக்க நிறுவனங்கள் 20 கி.மீ. வரை நீளம் பாதைகளிலும் இயக்க அனுமதிக்கும் வகையில் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.
உலக சுகாதார அமைப்பு அறிக்கை:
- உலக சுகாதார அமைப்பானது, "2023 ஆம் ஆண்டு மருத்துவ மற்றும் மருத்துவ சிகிச்சை மேம்பாட்டிற்கு முந்தைய நிலையில் பாக்டீரிய எதிர்ப்புக் காரணிகள்: ஒரு கண்ணோட்டம் மற்றும் பகுப்பாய்வு" என்ற தலைப்பிலான தனது வருடாந்திர அறிக்கையை வெளியிட்டுள்ளது.
- உலகளாவியப் பாக்டீரிய எதிர்ப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுச் செயல்பாடுகளில் இந்தியா 1% மட்டுமே பங்களிக்கிறது.
- 84% பாக்டீரிய எதிர்ப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுச் செயல்பாடுகள் ஆனது அதிக வருமானம் கொண்ட நாடுகளில் அதிகம் மேற்கொள்ளப் படுகிறது என்ற நிலையில் மீதமுள்ள 12% செயல்பாடுகள் உயர்மட்ட நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் மேற் கொள்ளப் படுகிறது.
- ஆனால் இந்தியா உள்ளிட்ட கீழ்நிலையிலான நடுத்தர வருமானம் கொண்ட நாடுகள் 4% மட்டுமே பங்களிக்கின்றன.
- சீனாவிலும் ரஷ்யக் கூட்டமைப்பிலும் உருவாக்கப்படும் புதிய பாக்டீரிய எதிர்ப்புக் காரணிகள் முறையே 3% மற்றும் 2% ஆகும்.
- இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் ஒவ்வொன்றும் தலா 1% அளவு பங்கினை அளிக்கின்றன.
எச்ஏஎல் நிறுவனத்திடமிருந்து 156 இலகு ரக ஹெலிகாப்டர்களை கொள்முதல் செய்வதற்கான டெண்டரை பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது:
- பிரச்சாந்த் இலகு ரக ஹெலிகாப்டர்களை வாங்க பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து 156 ஹெலிகாப்டர்களை கொள்முதல் செய்வதற்கான டெண்டரை பாதுகாப்புத் துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டது. இவற்றில்90 ஹெலிகாப்டர்கள் ராணுவத்துக்கும், 66 ஹெலிகாப்டர்கள் விமானப்படைக்கும் வழங்கப்படும்.
- எச்ஏஎல்
நிறுவனத்தின் பிரச்சாந்த் இலகு ரக ஹெலிகாப்டர் 5.8 டன் எடை உள்ளது. இதில் இரண்டு இன்ஜின் உள்ளது. இதில் உள்ள ஆயுதங்கள் மூலம் எதிரிகளின் பீரங்கி வாகனம், பதுங்கு குழிகள்மற்றும் டிரோன்களை அழிக்க முடியும். சியாச்சின் பனிமலை போன்ற உயரமான மலைப் பகுதிகளிலும் இந்த ஹெலிகாப்டர் மூலம் தாக்குதல் நடத்த முடியும். ரேடார்களில் சிக்காது. இரவு நேரத்திலும் இந்த ஹெலிகாப்டரை பயன்படுத்த முடியும்.
'பிரேர்னா ஸ்தலம்' :
- பாராளுமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 15 சுதந்திரப் போராட்ட வீரர்களின் சிலைகள் மற்றும் இந்திய வரலாற்றின் சின்னங்களைக் கொண்ட 'பிரேர்னா ஸ்தலம்' என்ற கட்டிடத்தினைக் குடியரசுத் துணைத் தலைவர் அவர்கள் திறந்து வைத்தார்.
- இதில் முன்னதாக பாராளுமன்ற வளாகத்தின் வெவ்வேறு பகுதிகளில் நிறுவப்பட்ட M.K. காந்தி மற்றும் B.R. அம்பேத்கர் ஆகியோரின் சிலைகளும் தற்போது ஒரே இடத்திற்கு மாற்றப் பட்டுள்ளது.
- பாராளுமன்ற வளாகத்தில் உள்ள இந்த சிலைகள் ஒரே இடத்தில் நிறுவப்பட வேண்டும் என்பதே பிரேர்னா ஸ்தலம் நிறுவப்படுவதன் முக்கிய நோக்கமாகும்.
- ஆனால் பாராளுமன்ற வளாகத்தில் தேசியத் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் உருவப்படங்கள் மற்றும் சிலைகளை நிறுவுவதற்கு ஒரு பிரத்தியேக குழு உள்ளது.
- இது நாட்டின் பாராளுமன்ற வளாகத்தில் தேசியத் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் உருவப்படங்கள் மற்றும் சிலைகளை நிறுவுவதற்கான குழு என்று அழைக்கப் படுகிறது.
- இதில் இரு அவைகளின் பாராளுமன்ற உறுப்பினர்களும் அடங்குவர்.
- இருப்பினும்,
2019 ஆம் ஆண்டிற்குப் பிறகு இக்குழு மீண்டும் அமைக்கப்படவில்லை.
50வது G7 உச்சி மாநாடு:
- இத்தாலியின் அபுலியா நகரில் நடைபெற்ற G7 உச்சி மாநாட்டில் G7 குழு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
- G7 நாடுகளோடு சேர்த்து, இந்தியா, போப் பிரான்சிஸ் மற்றும் உக்ரைன் அதிபர் விளாடிமிர் செலென்ஸ்கி ஆகியோருக்கும் 2024 ஆம் ஆண்டு உச்சி மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
- ஜோர்டான் மன்னர், பிரேசில், அர்ஜென்டினா, துருக்கி, ஐக்கிய அரபு அமீரகம், கென்யா, அல்ஜீரியா, துனிசியா மற்றும் மௌரிடானியா ஆகிய நாடுகளின் தலைவர்களும் புக்லியாவின் தெற்குப் பகுதியில் உள்ள போர்கோ எக்னாசியாவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
- அமெரிக்கா
மற்றும்
உக்ரைன் ஆகியவை தங்களுக்கு இடையிலான உறவுகளில் ஒரு முக்கிய மைல்கல்லாக 10 ஆண்டு காலப் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
- G7 உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட முதல் போப்பாண்டவர் என்ற ஒரு பெருமையை வாடிகன் தலைவர்போப் பிரான்சிஸ் பெற்றுள்ளார்.
- G7 குழும நாடுகள் ஆனது, முடக்கப்பட்ட ரஷ்யச் சொத்துக்களில் இருந்து பெறப்பட்ட இலாபம் மூலம் உக்ரைனுக்கு 50 பில்லியன் டாலர் நிதியுதவி அளிக்க ஒப்பந்தம் செய்து உள்ளன.
- G7 என்பது கனடா , பிரான்ஸ் , ஜெர்மனி , இத்தாலி , ஜப்பான் , யுனைடெட் கிங்டம் மற்றும் அமெரிக்காவை உள்ளடக்கிய ஒரு அரசுகளுக்கிடையேயான அரசியல் மற்றும் பொருளாதார மன்றமாகும் ; கூடுதலாக, ஐரோப்பிய ஒன்றியம் (EU) ஒரு "கணக்கிடப்படாத உறுப்பினர்".
- 1973 ஆம் ஆண்டின் எண்ணெய் நெருக்கடி மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட நிதி நெருக்கடியில் இருந்து G7 உருவானது , இது 6 பெரிய தொழில்துறை நாடுகளின் தலைவர்களை 1975 இல் கூட்டத்தை கூட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது .
- அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், மேற்கு ஜெர்மனி, ஜப்பான் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் பங்கேற்றன . கனடா 1976 இல் இணைந்தது , இது G7 உருவாவதற்கு வழிவகுத்தது .
- 1997 இல் ரஷ்யாவால் இணைந்த பிறகு பல ஆண்டுகளாக இது 'G8' என அறியப்பட்டது , ஆனால் உக்ரைனின் கிரிமியா பகுதியை இணைத்ததைத் தொடர்ந்து ரஷ்யா 2014 இல் உறுப்பினராக வெளியேற்றப்பட்ட பின்னர் இது G7 என மறுபெயரிடப்பட்டது .
கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து:
- மேற்குவங்க மாநிலம் நியூ ஜல்பைகுரி மாவட்டத்தில் 17.06.24 காலை 9 மணியளவில் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மீது சரக்கு ரயில் மோதியது. இந்த ரயில் அசாமின் சில்சாரில் இருந்து மேற்குவங்கத்தின் சேல்டா மாவட்டம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தது. அப்போது நியூ ஜல்பைகுரியில் விபத்து நடந்துள்ளது. பின்னால் இருந்து சரக்கு ரயில் மோதியதில் கஞ்சன்ஜங்கா ரயிலின் 3-ல் 5 பெட்டிகள் வரை சேதமடைந்துள்ளது
- மேற்கு
வங்கத்தில் கஞ்சன்சங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மீது சரக்கு ரயில் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. 40 பேர் காயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
KEY POINTS :
- இந்தியாவிலேயே முதன்முறையாக, கர்நாடக மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் (KSRTC) ஆனது, பணியின் போது உயிரிழந்த நான்கு ஊழியர்களின் குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கு விபத்துக் காப்பீட்டு நிவாரண இழப்பீடாக தலா 1 கோடி ரூபாய் வழங்கியுள்ளது.
- ஆக்கப்பூர்வமிக்க செயற்கை
நுண்ணறிவு
(Gen AI) பற்றிய
சர்வதேச
மாநாடு ஆனது கொச்சியில் நடைபெறவுள்ளது.
- இந்திரா
காந்தி
தேசிய
கலை மையம் (IGNCA) மற்றும் சன்சத் TV ஆகியவை இந்தியக் கலை மற்றும் கலாச்சாரத்தை அணுகக் கூடியதாக மாற்றுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
- அசாம் மாநில அரசாங்கமானது இளம் வயது சிறுமிகள் பள்ளிக்குச் செல்வதனை ஊக்குவிப்பதற்கும், அவர்கள் இளம் வயதிலேயே திருமணம் செய்து கொள்வதைத் தடுப்பதற்கும் உதவுகிற வகையில் முக்கிய மந்திரி நிஜுத் மொய்னா (MMNM) திட்டத்தினைத் தொடங்கியுள்ளது.
- பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு ஆனது, நடைப்பாணி மற்றும் எலும்புக் கூடு போன்ற மாறாத உடலியல் அளவுருக்களுடன் முக அடையாளம் காணல் நுட்பத்தினை ஒருங்கிணைக்கும் "திவ்ய த்ரிஷ்டி" என்ற செயற்கை நுண்ணறிவுக் கருவியை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது.
- ஸ்ருதி வோரா, ஸ்லோவேனியாவின் லிபிகா நகரில் நடைபெற்ற FEI டிரஸ்ஸேஜ் (குதிரையேற்றம்) உலகக் கோப்பை போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், மூன்று நட்சத்திர கிராண்ட் பிரிக்ஸ் குதிரையேற்றப் போட்டியில் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றைப் படைத்துள்ளார்.
- தென்னாப்பிரிக்கப் பாராளுமன்றம்
ஆனது சிரில் இராமபோசாவை தென்னாப்பிரிக்க அதிபராக மீண்டும் தேர்வு செய்துள்ளது.
- உலக சுகாதார அமைப்பானது (WHO) ஐதராபாத்தில் உள்ள தேசிய இந்திய மருத்துவ பாரம்பரியக் கல்வி நிறுவனத்தினை (NIIMH) பாரம்பரிய மருத்துவ ஆராய்ச்சிக்கான 3வது இந்திய WHO கூட்டுறவு மையமாக (CC) நியமித்துள்ளது.
- 5.2 டிரில்லியன் டாலர் மதிப்புடன் ஹாங்காங்கை விஞ்சி, உலகின் நான்காவது பெரிய பங்குச் சந்தையாக இந்தியா மீண்டும் தனது நிலையைப் பெற்றுள்ளது.
- இந்தியா-IORA
பயணியர்
கப்பல்
சுற்றுலா
மாநாடு ஆனது இந்தியப் பெருங்கடல் விளிம்போர நாடுகள் சங்கத்தின் (IORA) உறுப்பினர் நாடுகளின் பங்கேற்புடன் புது டெல்லியில் நடைபெற்றது.
- நாக்பூரைச் சேர்ந்த 18 வயது திவ்யா தேஷ்முக், குஜாரத்தின் காந்தி நகரில் நடந்த 20 வயதுக்குட்பட்ட மகளிருக்கான FIDE உலக சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்றுள்ளார்.இவர் கோனேரு ஹம்பி, ஹரிகா துரோணவல்லி மற்றும் சௌமியா சுவாமிநாதன் ஆகியோருக்கு அடுத்தபடியாக FIDE U20 மகளிருக்கான உலக சதுரங்க சாம்பியன் ஷிப் போட்டியில் வென்ற 4வது இந்தியர் ஆவார்.
- மோதிலால் ஓஸ்வால் பரஸ்பர நிதியம் ஆனது. இந்தியாவில் பாதுகாப்பு துறை சார்ந்த, நிஃப்டி இந்தியா பாதுகாப்பு குறியீட்டு நிதி என்ற பெயரிலான சந்தைக் குறியீட்டினை ஒத்த முதல் குறியீட்டினை அறிமுகப்படுத்தியுள்ளது.
- அஜித்
தோவலை தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக மீண்டும் நியமித்திட வேண்டி அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசானது P.K. மிஸ்ராவினை பிரதமரின் முதன்மைச் செயலாளராக மீண்டும் நியமித்துள்ளது.
- இந்தியப் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் "I Have the Streets: A
Kutti Cricket Story" என்ற தலைப்பிலான தனது சுயசரிதையை வெளியிட்டுள்ளார்.
- 92 வயதான இந்திய செவ்வியல் இசைக் கலைஞர், சரோத் கலைஞர் பண்டிட் இராஜீவ் தாராநாத் காலமானார்.
- தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் ஆனது, புதியக் குற்றவியல் சட்டங்கள் பற்றிய விரிவான தகவல்களை வழங்குவதற்காக "குற்றவியல் சட்டங்களின் NCRB சங்கலன்" எனப்படும் கைபேசிச் செயலியினை ஜூலை 01 ஆம் தேதி முதல் அறிமுகப்படுத்த உள்ளது.
- ஆப்பிள் நிறுவனமானது, தனது வருடாந்திர உலகளாவிய மென்பொருள் வடிவமைப்பாளர்கள் மாநாட்டில் ஆப்பிள் இண்டெலிஜென்ஸ் எனப்படும் செயற்கை நுண்ணறிவு தளத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.
- ஆப்பிள் நிறுவனமானது 3.3 டிரில்லியன் டாலர்களுடன் உலகின் மிகவும் மதிப்பு மிக்க நிறுவனமாக மீண்டும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தினை விஞ்சியுள்ளது.
- சீனாவின் வுஹான் நகரம் ஆனது, 500 ஓட்டுநர் இல்லாத கார்களின் சோதனையை மேற் கொள்வதன் மூலம் உலகின் மிகப்பெரிய தானியங்கு மகிழுந்துகளின் சோதனையை தொடங்கியுள்ளது.