மக்களவைத் தேர்தல் முடிவுகள் 2024:
- நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை 04.06.2024 காலை 8 மணிமுதல் நடைபெற்றது.
- இந்த தேர்தலின் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 தொகுதிகளில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை பெற்றுள்ளது.
- பாஜகவுக்கு எதிரான கட்சிகள் ஒன்றிணைந்து ’இந்தியா’ என்ற பெயரில் உருவான கூட்டணி 234 தொகுதிகளில் வெற்றி அடைந்துள்ளது.
- பாஜக 240 தொகுதிகளிலும் காங்கிரஸ் 99, சமாஜவாதி 39, திரிணமூல் காங்கிரஸ் 29, திமுக 21, தெலுங்கு தேசம் 16 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
- ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை 272 தொகுதிகளில் எந்தக் கட்சியும் வெற்றி பெறாததால், தனித்து ஆட்சி அமைக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.
- இந்த முறை பாஜக 36.56 சதவிகிதமும், காங்கிரஸ் 21.19 சதவிகிதமும் வாக்குகள் பெற்றுள்ளன.
- தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 39 மக்களவைத் தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.
- புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் வெற்றி பெற்றுள்ளதைத் தொடர்ந்து, தமிழ்நாடு புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 மக்களவைத் தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி பெருவாரியான வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
- நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் 19-ம்தேதி முதல் ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடத்தப்பட்டது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில், குஜராத்தின் சூரத் தொகுதியில் மட்டும் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். மற்ற 542 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 64.20 கோடி பேர் வாக்குரிமையை செலுத்தி உள்ளனர்.
தேர்தல் முடிவுகள் 2024: ஆந்திரா
- ஆந்திர பிரதேசத்தில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
- வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்தமுள்ள 175 சட்டப்பேரவைத் தொகுதிகளில், தெலுங்கு தேசம் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் தனிப்பெரும்பான்மை அக்கட்சிக்கு கிடைத்துள்ளது.
- ஆந்திர பிரதேச வரலாற்றில் முதன்முறையாக நடிகர் பவண் கல்யாணின் ஜனசேனை கட்சி 21 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பாஜக 8 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மேற்கண்ட 3 கட்சிகளும் அங்கு கூட்டணி அமைத்து போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.
கனிமங்களை நீர் நுண்திவலைகளால் உடைக்கச் செய்து நானோ துகள்களை உருவாக்கலாம்’ - சென்னை ஐஐடி ஆயாவளர்கள் கண்டுபிடிப்பு
- சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழக (சென்னை ஐஐடி) ஆராய்ச்சியாளர்கள் பொதுவான கனிமங்களை நீர் நுண்திவலைகளால் உடைக்கச் செய்து நானோ துகள்களை உருவாக்கிட முடியும் என நிரூபித்துள்ளனர். மதிப்புவாய்ந்த ‘சயின்ஸ்’ இதழில் வெளியிடப்படும் சென்னை ஐஐடி-ன் முதலாவது ஆய்வுக் கட்டுரை இதுவாகும்.
- மேகங்கள், மூடுபனி போன்ற வளிமண்டல நீர்த்துளிகளில் உள்ள அயனி இனங்கள் மற்றும் தொடர்பு மின்மயமாக்கல் மூலம் சார்ஜ் செய்யப்படலாம். தாதுக்களின் சிதைவு புதிய மூலக்கூறுகளை உருவாக்கி புதிய மேற்பரப்புகளை உருவாக்குகிறது. அத்தகைய மேற்பரப்புகளில் பல்வேறு வகையான வினையூக்கங்களும் ஏற்படக்கூடும். இந்த செயல்முறைகள் உயிர்வழித் தோற்றத்தில் முக்கியமானதாக இருக்கவும் வாய்ப்புள்ளது.
- பூமியில் விழக்கூடிய நானோ துகள்கள், மூலக்கூறுகளால் ஆன ‘நுண்ணிய நீர்த்துளிகள் விழுதல்’ (microdroplet showers) என்பது கிரகத்தின் வேதியியல் மற்றும் உயிரியல் பரிணாம வளர்ச்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்த்தாக இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
மெக்சிகோ நாட்டில் 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்:
- மெக்சிகோ நாட்டில் 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபராக கிளாடியா ஷீன்பாம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனை அதிகாரபூர்வ விரைவான எண்ணிக்கை (Quick Count) உறுதி செய்துள்ளது.
- கிளாடியா ஷீன்பாம்: 61 வயதான அவர் வரும் டிசம்பர் மாதம் அதிபராக பொறுப்பேற்பார் என தெரிகிறது. மெக்சிகோ நகர மேயாரகவும் அவர் பணியாற்றியுள்ளார். காலநிலை விஞ்ஞானி. மெக்சிகோ தேச அரசியலில் அனுபவம் கொண்டவர்.
பேங்க் கிளினிக்’ என்ற இணையதளம்:
- வங்கிகளின் செயல்பாடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், சேவை குறைபாடுகளுக்கு தீர்வு காணும் வகையிலும், அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் சார்பில் ‘பேங்க் கிளினிக்’ என்ற இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.
- இந்தியாவில் 12 பொதுத் துறை மற்றும் 20 தனியார் வங்கிகளுக்கு நாடு முழுவதும் ஒரு லட்சம் கிளைகள் உள்ளன. நாட்டில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 80 சதவீதம் பேர் இன்றைக்கு வங்கிக் கணக்கு வைத்துள்ளனர். ரூ.2.07 லட்சம் கோடி வைப்புத் தொகை வங்கிகளில் உள்ளது.
- வாடிக்கையாளர்களுக்கு வங்கிகளின் செயல்பாடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தங்களுடைய புகார்கள், குறைகளுக்கு தீர்வு காண உதவும் வகையிலும் அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் ‘பேங்க் கிளினிக்’ என்ற பெயரில் புதிய இணையதளத்தை (http://banksclinic.com) தொடங்கி யுள்ளது.
ஆசிய கோடீஸ்வரர்கள் பட்டியல் 2024 :
- ஆசிய கோடீஸ்வரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி முதலிடம் வகித்து வந்தார். இந்நிலையில், அவரை பின்னுக்குத் தள்ளி, கவுதம்அதானி முதல் இடம் பிடித்துள்ளார்.
- ப்ளூம்பெர்க் நிறுவனத்தின் மதிப்பீட்டின்படி, தற்போது ஆசிய கோடீஸ்வரர்கள் பட்டியலில் 111 பில்லியன் டாலர் (ரூ.9.21 லட்சம் கோடி) சொத்து மதிப்பைக் கொண்டு அதானி முதல் இடத்திலும் 109 பில்லியன் டாலர் (ரூ.9 லட்சம் கோடி) சொத்து மதிப்பைக் கொண்டு முகேஷ் அம்பானி 2-வது இடத்திலும் உள்ளனர். உலக கோடீஸ்வரர்கள் வரிசையில் அதானி 11-வது இடத்திலும் முகேஷ்அம்பானி 12-வது இடத்திலும் உள்ளனர்.