3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி:
- நாடு முழுவதும் ஏப்ரல் 19-ம் தேதிமுதல் ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல்நடைபெற்றது. கடந்த 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டன. ஆட்சியமைக்க 272 எம்பிக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் பாஜக 240 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) 293 தொகுதிகளில் வெற்றிபெற்று அறுதிப் பெரும்பான்மையை பெற்றது.
- கடந்த 7-ம் தேதி தலைநகர் டெல்லியில் என்டிஏ எம்பிக்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் அந்த கூட்டணியின் நாடாளுமன்ற குழுத் தலைவராக பிரதமர் நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார். அன்றைய தினமே குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்த அவர் ஆட்சியமைக்க உரிமை கோரினார். இதை ஏற்றுக் கொண்ட குடியரசுத் தலைவர் ஆட்சி அமைக்க மோடிக்கு அழைப்பு விடுத்தார்.
- இதன்படி குடியரசுத் தலைவர் மாளிகையில் 09.06.2024 இரவு 7.15 மணிக்கு புதிய அரசு பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடிக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அடுத்தடுத்து மத்திய அமைச்சர்கள் பதவியேற்றனர்.
- கடந்த 2001-ம் ஆண்டில் குஜராத் முதல்வராக நரேந்திர மோடி பதவியேற்றார். அதன்பிறகு தொடர்ச்சியாக 3 முறை குஜராத் முதல்வராக பதவியேற்றார். ஒட்டுமொத்தமாக
4 முறை முதல்வராக அவர் இருந்துள்ளார்.
- கடந்த 2014-ம் ஆண்டில் நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி முதல்முறையாக பதவியேற்றார். 2019-ம் ஆண்டில் 2-வது முறையாக அவர் பதவியேற்றார். தற்போது 3-வது முறையாக அவர் பிரதமர் பதவியேற்றுள்ளார்.
- நாட்டின் முதல் பிரதமர் நேரு கடந்த 1952, 1957, 1962 பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று 3 முறை தொடர்ச்சியாக பிரதமர் பதவியை வகித்தார். அந்த சாதனையை பிரதமர் நரேந்திர மோடி சமன் செய்துள்ளார்.
ஜி7 - 50-வது உச்சி மாநாடு 2024:
- ஜி7 அமைப்பில் அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ், கனடா ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பின் 50-வது உச்சி மாநாடு இத்தாலியின் ஃபசானோ நகரில் வரும் 13-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உட்பட ஜி7 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் அனைவரும் பங்கேற்கின்றனர்.
- மாநாட்டை நடத்தும் இத்தாலி அரசு சார்பில் இந்தியா, சவுதிஅரேபியா, பிரேசில், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களுக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த அழைப்பை ஏற்று பிரதமர் மோடி ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க வரும் 14-ம் தேதி ஒரு நாள் பயணமாக இத்தாலி செல்கிறார்.
மாநில கட்சியாக அங்கீகாரம் :
- மக்களவைத் தேர்தலில் 2024 சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் 1.03 லட்சம்வாக்குகள் மற்றும் விழுப்புரம்தொகுதியில் துரை.ரவிக்குமார்70,703 வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றுள்ளனர். இருதொகுதிகளிலும் தனி சின்னத்தில் போட்டியிட்டு விசிக வேட்பாளர்கள் வென்றனர் என்ற அடிப்படையில், விசிகவுக்கு மாநில கட்சியாக அங்கீகாரம் கிடைக்கவுள்ளது.கடந்த 1999-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் முதன்முதலாக தேர்தல் அரசியலில் பங்கெடுத்தது விசிக.
- 8.16 சதவீதம் வாக்குகளை நாம் தமிழர் கட்சி பெற்றது. 8 சதவீத வாக்குகள் பெற்றிருப்பதன் அடிப்படையில் மாநில கட்சி என்ற அங்கீகாரத்தையும் நாதக பெறவிருக்கிறது.
இலங்கையில் எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் இணைய சேவை:
- இலங்கையில் எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் இணைய சேவைக்கு அனுமதி வழங்கியுள்ளது அந்த நாட்டு அரசு. இது குறித்து இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே எக்ஸ் தளத்தில் ட்வீட் செய்துள்ளார்.
- “இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் செயற்கைக்கோள் மூலம் இணைய சேவை வழங்குவதற்கான அனுமதியை ஸ்டார்லிங்க் நிறுவனத்துக்கு வழங்கியுள்ளது.
- ஸ்டார்லிங்க்
அறிமுகம் இலங்கை மக்களுக்கு உதவும். பேரிடர் காலங்களிலும் பயன்படுத்த முடியும். தொலை தூரங்களில் இணைய தொடர்பு இல்லாமல் இருப்பவர்களும் பயனடைவார்கள்” என அதிபர் ரணில் தெரிவித்துள்ளார்.
- ஸ்டார்லிங்க்: அமெரிக்க நாட்டை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனம். இந்நிறுவனத்தின் ஸ்டார்லிங்க் புராஜக்ட் வழியே சுமார் 71 நாடுகளில் சாட்டிலைட் மூலம் அதிவேக இணைய சேவையை வழங்கி வருகிறது. அதற்கான அங்கீகாரத்தையும் ஸ்பேஸ்-எக்ஸ் பெற்றுள்ளது. உலகம் முழுவதும் இந்த சேவையை விரிவு செய்வதே அந்நிறுவனத்தின் நோக்கம். தற்போது ஸ்பேஸ்-எக்ஸின் துணை நிறுவனமாக ஸ்டார்லிங்க் இயங்கி வருகிறது.
நார்வே செஸ் தொடர்: பிரக்ஞானந்தாவுக்கு 3-வது இடம்:
- நார்வே செஸ் தொடரில் இந்திய கிராண்ட்மாஸ்டரான ஆர். பிரக்ஞானந்தா 3-வது இடம் பிடித்தார். இந்தத் தொடரில் நார்வே வீரரும், உலக சாம்பியனுமான மேக்னஸ் கார்ல்சன் முதலிடம் பிடித்தார்.
- இந்நிலையில்,
நேற்று நடைபெற்ற ஆடவர் பிரிவு இறுதிச் சுற்றில் மேக்னஸ் கார்ல்சன், அமெரிக்க வீரர் பேபியானோ கருணாவை வென்றார். தொடரின் முடிவில் 17.5 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்த கார்ல்சன் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
- இறுதிச் சுற்றில் பிரக்ஞானந்தா, அமெரிக்க வீரர் ஹிகாரு நகமுராவை வென்றார். இதன்மூலம் மொத்தம் 14.5 புள்ளிகள் பெற்ற பிரக்ஞானந்தாவுக்கு 3-வது இடம் கிடைத்தது. ஹிகாரு நகமுரா 2-வது இடம் பிடித்தார்.
- இதேபோல், மகளிர் பிரிவில் சீன வீராங்கனை வென்ஜுன் ஜு முதலிடம் பிடித்தார். இந்திய வீராங்கனைகள் ஆர். வைஷாலி 4-வது இடமும், கொனேரு ஹம்பி 5-வது இடமும் பிடித்தனர்
நடப்பு டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் ‘குரூப் - ஏ’ போட்டியில் பாகிஸ்தானை இந்திய அணி வென்றது:
- இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 19 ஓவர்களில், 119 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
- 120 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை பாகிஸ்தான் விரட்டியது. இருந்தும் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 113 ரன்கள் மட்டுமே அந்த அணி எடுத்தது. இதன் மூலம் 6 ரன்களில் இந்தியா வெற்றி பெற்றது.
- இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக இந்தப் போட்டியில் பந்து வீசி இருந்தனர். பும்ரா அற்புதமாக பந்து வீசி ஆட்டத்தை வென்று கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆசியா பசிபிக்கில் 'சிறந்த வணிக ஒழுங்குமுறை' விருதை செபி வென்றுள்ளது:
- தி ஏசியன் பேங்கரின் கூற்றுப்படி, இந்தியப் பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்திற்கு (SEBI -Securities and Exchange Board of
India ) சமீபத்தில் ஆசிய-பசிபிக் பகுதிக்கான "வணிக ஒழுங்குமுறையின் சிறந்த நடத்தை" விருது வழங்கப்பட்டது. ஹாங்காங்கில் நடந்த ஒரு நிகழ்வில் வழங்கப்பட்ட இந்த விருது, இந்திய பங்குச் சந்தைகளை நிர்வகிக்கும் விதிகளை மேம்படுத்துவதில் SEBI எவ்வளவு முக்கியமானது என்பதைக் காட்டுகிறது.
- (SEBI -Securities and Exchange Board of India ) :பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் ( செபி ) என்பது இந்திய அரசாங்கத்தின் நிதி அமைச்சகத்தின் நிர்வாகக் களத்தின் கீழ் இந்தியாவில் உள்ள பத்திரங்கள் மற்றும் பொருட்களின் சந்தைக்கான ஒழுங்குமுறை அமைப்பாகும் . இது 12 ஏப்ரல் 1988 இல் ஒரு நிர்வாக அமைப்பாக நிறுவப்பட்டது. 30 ஜனவரி 1992 அன்று SEBI சட்டம்-1992 மூலம் சட்டரீதியான அதிகாரங்கள் வழங்கப்பட்டது
இந்திய கடற்படையின் முதல் பெண் ஹெலிகாப்டர் பைலட் ஆனார் அனாமிகா ராஜீவ்:
- சப் லெப்டினன்ட் அனாமிகா பி. ராஜீவ் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணத்தில் உள்ள கடற்படை விமான நிலையத்தில் ஐஎன்எஸ் ராஜாளியில் நடந்த பாசிங் அவுட் அணிவகுப்பின் போது இந்திய கடற்படையின் முதல் பெண் ஹெலிகாப்டர் பைலட் ஆனார்
ஆசிர் ஜவஹர் தாமஸ் ஜான்சிங்
- இந்திய வனவிலங்கு விஞ்ஞானி மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆசிர் ஜவஹர் தாமஸ் ஜான்சிங் பெங்களூருவில் ஜூன் 7, 2024 அன்று 78 வயதில் காலமானார்
- புகழ்பெற்ற இந்திய வனவிலங்கு உயிரியலாளரும், முன்னணி பாதுகாவலருமான ஆசீர் ஜவஹர் தாமஸ் ஜான்சிங், வனவிலங்கு ஆர்வலர்களிடையே AJT ஜான்சிங் என்று அழைக்கப்படுகிறார்
நடப்பு
நிகழ்வுகள்
கேள்வி
மற்றும்
பதில்கள்
தமிழில்
-ஜூன்-2024:
நார்வே செஸ் 2024 தொடரில் ------ முதலிடம் பிடித்தார்?
A) ஆர். பிரக்ஞானந்தா
B) பேபியானோ கருணா
C) ஹிகாரு நகமுரா
D) மேக்னஸ் கார்ல்சன்
ANS : D) மேக்னஸ் கார்ல்சன்
TODAY CURRENT AFFAIRS IN TAMIL 2024
நடப்பு நிகழ்வுகள் 2024
- JANUARY 2024 -TNPSC CURRENT AFFAIRS IN TAMIL / ஜனவரி 2024
- FEBRUARY 2024 -TNPSC CURRENT AFFAIRS IN TAMIL / பிப்ரவரி2024
- MARCH 2024 -TNPSC CURRENT AFFAIRS IN TAMIL / மார்ச் 2024
- APRIL 2024 -TNPSC CURRENT AFFAIRS IN TAMIL / ஏப்ரல் 2024
- MAY 2024 -TNPSC CURRENT AFFAIRS IN TAMIL / மே 2024
- JUNE 2024 -TODAY CURRENT AFFAIRS IN TAMIL / ஜூன் 2024
CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS IN TAMIL | நடப்பு நிகழ்வுகள்:2024
- நடப்பு நிகழ்வுகள் கேள்வி மற்றும் பதில்கள் தமிழில்-ஜனவரி 2024
- நடப்பு நிகழ்வுகள் கேள்வி மற்றும் பதில்கள் தமிழில்-பிப்ரவரி 2024
- நடப்பு நிகழ்வுகள் கேள்வி மற்றும் பதில்கள் தமிழில் -மார்ச்-2024
- நடப்பு நிகழ்வுகள் கேள்வி மற்றும் பதில்கள் தமிழில் -ஏப்ரல்-2024
- நடப்பு நிகழ்வுகள் கேள்வி மற்றும் பதில்கள் தமிழில் -மே-2024
- நடப்பு நிகழ்வுகள் கேள்வி மற்றும் பதில்கள் தமிழில் -ஜூன்-2024
முக்கியமான நாட்களின் பட்டியல் 2024
- ஜனவரி 2024 இன் முக்கியமான நாட்களின் பட்டியல் / LIST OF IMPORTANT DAYS IN JANUARY 2024 IN TAMIL
- பிப்ரவரி 2024 இல் முக்கியமான நாட்கள், நிகழ்வுகள் பட்டியல்/FEBRUARY 2024-LIST OF IMPORTANT DAYS IN TAMIL
- மார்ச் 2024 இல் முக்கியமான நாட்கள், நிகழ்வுகள் பட்டியல்/ MARCH 2024-LIST OF IMPORTANT DAYS IN TAMIL
- ஏப்ரல் 2024 இல் முக்கியமான நாட்கள், நிகழ்வுகள் பட்டியல்/ APRIL 2024-LIST OF IMPORTANT DAYS IN TAMIL
- மே 2024 இல் முக்கியமான நாட்கள், நிகழ்வுகள் பட்டியல்/ MAY 2024-LIST OF IMPORTANT DAYS IN TAMIL
அரசு அறிமுகப்படுத்தி முக்கிய செயலிகள் 2023:2024: