JULY 2024 -TODAY CURRENT AFFAIRS IN TAMIL - 01.07.2024 - 03.07.2024

TNPSC PAYILAGAM
By -
0
JULY 2024 -TODAY CURRENT AFFAIRS IN TAMIL - 01.07.2024 - 03.07.2024


புதிய குற்றவியல் சட்டங்கள்  அமலுக்கு வந்தன:
  • நாட்டின் முதல் வழக்கு மத்திய பிரதேச மாநிலம் குவாலியரிலும், தமிழகத்தின் முதல் வழக்கு சென்னையிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
  • பிரிட்டிஷ் ஆட்சியின்போது கொண்டுவரப்பட்ட இந்திய தண்டனை சட்டம் (ஐபிசி), இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் (சிஆர்பிசி), இந்திய சாட்சிகள் சட்டம் (ஐஇசி) ஆகியவற்றுக்கு பதிலாக, நாடாளுமன்றத்தில் புதிய சட்ட மசோதாக்கள் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டன. 
  • இதன்படி, பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக் ஷா, பாரதிய சாக் ஷிய அதிநியம் ஆகிய 3 சட்டங்கள் 01.07.2024 முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளன.
  • புதிய குற்றவியல் நடைமுறை சட்டங்கள் - முக்கிய அம்சங்கள்

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி 2024:
  • இந்திய கிராண்ட் மாஸ்டரான 18 வயதான டி.குகேஷ், நடப்புஉலக சாம்பியனான 31 வயதான சீனாவின் டிங் லிரென் ஆகியோர் மோதும் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியை நடத்தும் உரிமையை சிங்கப்பூர் பெற்றுள்ளதாக சர்வதேச செஸ் சம்மேளனம் (ஃபிடே) அறிவித்தது.
  • இந்த போட்டியை சென்னையில் நடத்துவதற்காக தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும், டெல்லியில் நடத்துவதற்காக அகில இந்திய செஸ் கூட்டமைப்பும் விண்ணப்பித்திருந்தன. ஆனால் ஃபிடே சிங்கப்பூரை தேர்வு செய்துள்ளது. இந்த போட்டி நவம்பர் 20 முதல் டிசம்பர் 15 வரை நடைபெறுகிறது.
  • உலக செஸ் சாம்பியன்ஷிப்பின் 138 ஆண்டுகால வரலாற்றில் தென்கிழக்கு ஆசியாவில் இப்போட்டி நடைபெறுவது இது 2-வது முறையாகும். இதற்கு முன்னர் 1978-ல் இந்தத் தொடர் பிலிப்பைன்ஸ் நாட்டின் பாகுயோ நகரில் நடத்தப்பட்டிருந்தது.

செபெக்ஸ் 2 என்ற புதிய வெடிகுண்டை:
  • உலகின் மிக சக்திவாய்ந்த புதியவெடிகுண்டை இந்தியா தயாரித்திருக்கிறது. இது டிஎன்டி வெடிகுண்டை விட 2.01 மடங்கு அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும்.
  • முதலாம் மற்றும் இரண்டாம் உலகப் போர்களின்போது நாசகார வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. தற்போது உலக நாடுகளின் ராணுவங்களில் டிஎன்டி, ஆர்டிஎக்ஸ், டைனமைட் உள்ளிட்ட வகைகளை சேர்ந்த வெடிகுண்டுகள் பயன்படுத்தப்படுகின்றன.
  • இந்த சூழலில் மகாராஷ்டிராவின் நாக்பூரை சேர்ந்த ‘எகானமிக் எக்ஸ்ப்ளோசிவ்ஸ் லிமிடெட்' பல ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து செபெக்ஸ் 2 என்ற புதிய வெடிகுண்டை தயாரித்து உள்ளது. 
  • இதுஉலகின் மிக சக்திவாய்ந்த வெடிகுண்டுகளில் ஒன்றாகும். டிஎன்டி வெடிகுண்டைவிட 2.01 மடங்கு அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும்.
  • இந்த புதிய வெடிகுண்டை இந்திய கடற்படை அண்மையில் வெற்றிகரமாக சோதனை செய்தது.
  • டிஎன்டி வெடிகுண்டைவிட செபெக்ஸ் 2 வெடிகுண்டில் 20 %அளவுக்கு அதிக வெப்பம் வெளியாகிறது. குண்டு வெடித்து சிதறும்போது ஏற்படும் விட்டம் 35 மடங்கு அதிகமாக இருக்கிறது. டிஎன்டி வெடிகுண்டைவிட செபெக்ஸ் 2-வின் பாதிப்பு 28% அதிகமாக உள்ளது. 
  • நாக்பூர் ஆலையில் செபெக்ஸ் வெடிகுண்டுகள் தயாரிப்பு பணிகள் தொடங்கப்பட்டு இந்தியாவின் முப்படைகளுக்கும் வழங்கப்பட உள்ளன. இதன்மூலம் இந்திய முப்படைகளின் பலம் பன்மடங்கு அதிகரிக்கும்.

உத்தர பிரதேசத்தில் மத வழிபாட்டு கூட்டத்தின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 90 பெண்கள் உட்பட 130க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்:
  • உத்தரப் பிரதேசத்தின் ஹாத்தரஸ் மாவட்டத்தின் சிக்கந்தராரா-வில் நாராயண் சாகர் விஷ்வ ஹரி போலே பாபா என்பவரின் பிரார்த்தனை கூட்டம்  (ஜூலை 2) நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் பக்தர்கள் வெளியேறும்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 130க்கும் அதிகமானோர்  உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்பது தெரிய வந்துள்ளது.
  • ஹாத்ரஸ் ஆன்மிக கூடல் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த முதல் தகவல் அறிக்கையின்படி 80 ஆயிரம் பேர் கூடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் 2.5 லட்சம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். கட்டுக்கடங்காத கூட்டம் ஒரே நேரத்தில் நிகழ்விடத்தில் இருந்து வெளியேறியதால் விபத்து நடந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • உயிரிழந்தோர் குடும்பத்துக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரண நிதியாக வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்தார்.

அசாம் வெள்ளம்:

  • அசாம் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் இதுவரை சுமார் 38 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மூன்று பேர் வெள்ள நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதனை அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் உறுதி செய்துள்ளது
  • அசாமில் வெள்ளத்தின் நிலை தீவிரமடைந்தது. அங்கு 28 மாவட்டங்களை சேர்ந்த சுமார் 11.34 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • மாநிலத்தில் 42,476 விளைநிலங்கள் வெள்ள நீரில் மூழ்கின. இரண்டாவது முறையாக ஏற்பட்ட வெள்ளத்தில் 2,208 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மாநிலத்தில் பாய்ந்தோடும் பிரம்மபுத்திரா நதி அதன் அபாய கட்டத்தை கடந்து பாய்ந்து கொண்டுள்ளது. 489 இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. 
  • வெள்ளத்தால் சுமார் 8 லட்சம் கால்நடைகள் பதிக்கப்பட்டுள்ளன.


இந்தியா - மங்கோலியா கூட்டு ராணுவப் பயிற்சி மேகாலயாவில் தொடங்கியது:

  • இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இந்தியா - மங்கோலியா கூட்டு ராணுவப் பயிற்சியான நோமாடிக் எலிபெண்ட்டின் 16-வது பதிப்பு மேகாலயா மாநிலம் உம்ரோயில் உள்ள வெளிநாட்டு பயிற்சி முனையத்தில் (03.07.2024) தொடங்கியது. இந்த பயிற்சி ஜூலை 16-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
  • 45 வீரர்களைக் கொண்ட இந்தியக் குழுவில், சிக்கிம் சாரணர் இயக்கத்தின் ஒரு பிரிவு மற்றும் பிற ஆயுதப்படைகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றுள்ளனர். மங்கோலிய ராணுவத்தின் சார்பில் அந்நாட்டின் 150 விரைவு அதிரடிப்படை பிரிவைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்றுள்ளனர். 
  • நோமாடிக் எலிபெண்ட் பயிற்சி என்பது இந்தியாவிலும், மங்கோலியாவிலும் மாறி மாறி ஆண்டுதோறும் நடத்தப்படும் பயிற்சி நிகழ்வாகும். கடந்த முறை இந்தப் பயிற்சி ஜூலை 2023-ல் மங்கோலியாவில் நடத்தப்பட்டது.


TODAY CURRENT AFFAIRS IN TAMIL 2024

நடப்பு நிகழ்வுகள் 2024 


CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS IN TAMIL | நடப்பு நிகழ்வுகள்:2024


முக்கியமான நாட்களின் பட்டியல் 2024


அரசு அறிமுகப்படுத்தி முக்கிய செயலிகள் 2023:2024:

Post a Comment

0Comments

Post a Comment (0)