நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம்:
- விவசாய தொழிலாளர்களாக உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களை நில உடை மையாளர்களாக உயர்த்தி சமூக நீதியை நிலை நாட்ட ‘நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம்’ வகுக்கப்பட்டுள்ளது. இது மகளிரின் பெயரில் செயல்படுத்தப்படும்.
- இதன்மூலம் விவசாய நிலம் வாங்க நிலத்தின் சந்தை மதிப்பில் 50% அல்லது அதிகபட்சம் ரூ.5 லட்சம் மானியம் வழங்கப்படும். நடப்பு நிதியாண்டில் இத்திட்டத்திற்கென ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். வீடற்ற பழங்குடியினருக்கு ஊரக வளர்ச்சித் துறையுடன் இணைந்து, 4,500 வீடுகள் கட்டித் தரப்படும்.
சாங் இ-6 விண்கலம்:
- நிலவின் தென் துருவப் பகுதியில் முதன்முதலில் இந்தியா தனது சந்திராயன்-3 விண்கலத்தை இறக்கி கடந்தாண்டு சாதனை படைத்தது. அதைத் தொடர்ந்து தற்போது சீனாவும் அந்தப் பகுதியில் தனது விண்கலத்தைத் தரையிறக்கியுள்ளது.
- சாங்’இ மூன் எனப்படும் நிலவைக் குறிப்பிடும் சீனக் கடவுளின் பெயரைக் கொண்ட இந்த நிலவு ஆராய்ச்சித் திட்டத்தில் இது ஆறாவது விண்கலமாகும். இந்த விண்கலம், 2 நாட்கள் ஆய்வில் ஈடுபட்டு தனது இயந்திரக் கை மற்றும் துளையிடும் கருவியைக் கொண்டு 2 கிலோகிராம் அளவு மேற்பரப்பு மற்றும் அடிப்பகுதி மணல், பாறை மாதிரிகளை சேகரிக்கும்
- நிலவின் தென் துருவத்தை ஆராயச் சென்ற சாங் இ-6 விண்கலம் நிலவின் பாறை மற்றுமு் மணல் மாதிரிகளை சேகரித்து பூமிக்கு திரும்பி உள்ளது
- குறிப்பு இந்தியா சந்திரயான்-4 ஐ விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளது, இது சந்திரனின் மாதிரிகளை மீண்டும் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தியா நிலவில் மென்மையாக தரையிறங்கிய நான்காவது நாடாகும். இந்தியா நிலவின் தென் துருவத்திற்கு அருகில் தரையிறங்கிய முதல் நாடாகும்.
புதிய கற்கால வெட்டுக் கருவி:
- சென்னானூர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைந்துள்ளது.இங்கு 4000 ஆண்டுகள் பழமையான 6 செ.மீ நீளம், 4 செ.மீ அகலமுடைய புதிய கற்கால வெட்டுக் கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தமிழர் பாரம்பரிய தற்காப்பு கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்:
- கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழர் பாரம்பரிய தற்காப்பு கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் புதிதாக அமைக்கப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
- களரி, அடிமுறை, சிலம்பம் என பல்வேறு பெயர்களில் வழங்கப்பட்டு வரும் தென் தமிழ்நாட்டின் பழமையான பாரம்பரிய தற்காப்பு கலைகளும் அவற்றின் உட்பிரிவுகளான சுவடுமுறை, மல்யுத்தம், குத்துவரிசை, அடிதடை, வர்மம் முறைகள் போன்ற அரிய கலைகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் சீரிய நோக்கில் கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழர் பாரம்பரிய தற்காப்பு கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் புதியதாக அமைக்கப்படும் என உதயநிதி தெரிவித்தார்
‘சிகரம் தொடு என்ற புதிய திட்டம்:
- நான் முதல்வன் திட்டம் மூலம் தேர்வாகும் 1000 மாணவர்களுக்கு வேலை வாய்ப்புக்காக ‘சிகரம் தொடு என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
- அரசின் முக்கிய திட்டங்களக் கண்காணிக்க மாவட்ட அளவில் சிறப்புத் திட்டச் செயலாக்கத்துறை கண்காணிப்பு அலகு உருவாக்கப்படும். வேலைவாய்ப்பினை எதிர்நோக்கும் தமிழ்நாட்டு இளைஞர்கள் பயன் பெறும் வகையில் அவர்களுக்கு ‘திறன் ஓலைகள்’ மற்றும் பணியிடப் பயிற்சி வழங்கும் ‘திறன் தமிழ்நாடு நிறைப் பள்ளிகள்’ என்ற திட்டம் ரூ100 கோடியில் செயல்படுத்தப்படும்.
- நான் முதல்வன் திட்டத்தின் திறன் சார்ந்த படிப்புகள் 45000 மாணவர்கள் பயன்பெறும் வகையில் துணை மருத்துவ படிப்புகளுக்கும் விரிவுப்படுத்தப்படும். நான் முதல்வன் திட்டத்தின் மூலம் கிராமப்புறம் மற்றும் பின்தங்கிய பகுதிகளில் வசிக்கும் சிறந்த 1000 மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்குத் திறன் பயிற்சி அளித்து உயர் வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தர ‘சிகரம் தொடு’ என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும்
PEN Pinter 2024:பென் பிண்டர் பரிசு 2024
- புகழ்பெற்ற இந்திய எழுத்தாளர் அருந்ததி ராய் 2024 ஆம் ஆண்டிற்கான மதிப்புமிக்க PEN Pinter பரிசைப் பெற்றுள்ளார்.
- விருது வழங்கும் விழா அக்டோபர் 10, 2024 அன்று பிரிட்டிஷ் நூலகத்தில் நடைபெறும். அக்டோபர் 10 ஆம் தேதி பிரிட்டிஷ் நூலகம் இணைந்து நடத்தும் விழாவில் ராய் விருதைப் பெற்று உரை நிகழ்த்துவார்.
சர்வதேச சோலார் கூட்டணி: 100வது உறுப்பு நாடு
- சர்வதேச சோலார் கூட்டணியில் (ISA) 100வது உறுப்பு நாடாக பாராகுவே இணைந்துள்ளது.
- சர்வதேச சோலார் கூட்டணி (International Solar Alliance): நவம்பர் 30, 2015 அன்று பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரான்ஸ் அதிபர் பிரான்கோயிஸ் ஹாலண்டே ஆகியோரால் நிறுவப்பட்டது.
- ஐஎஸ்ஏவின் நோக்கம் சூரிய சக்தியை அதிகரிப்பது, சூரிய ஒளி நிதி, தொழில்நுட்பங்கள், கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு ஆகியவற்றின் மூலம் சூரிய மின் உற்பத்தி செலவைக் குறைப்பதாகும்
ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய கிரிக்கெட் அணி:
- பார்படாசில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் தோல்வியை சந்திக்காத தென்னாப்பிரிக்காவும் இந்திய அணியும் பலப்பரீட்சை நடத்தியது. இந்திய அணி ஐசிசி (சாம்பியன் டிராபி 2013) தொடரை வென்று 11 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது.
- பிரிட்ஜ்டவுன், கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 8.00 மணிக்கு தொடங்கிய போட்டியில் டாஸ் வென்று பேட் செய்த இந்தியா 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 176 ரன் குவித்தது. அதிகபட்சமாக கோஹ்லி 76 ரன் விளாசினார். அக்சர் 47, துபே 27 ரன் எடுத்தனர். அடுத்து களமிறங்கிய தென் ஆப்ரிக்கா 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 169 ரன் எடுத்து, 7 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
- 2024 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் சாம்பியன் பட்டத்தை இந்திய அணி 2வது முறையாக கைப்பற்றி சாதனை படைத்திருக்கிறது. இதன் மூலம் 17 ஆண்டுக்கு பிறகு இந்திய அணி டி20 உலககோப்பையை வென்று அசத்தி இருக்கிறது.
TODAY CURRENT AFFAIRS IN TAMIL 2024
நடப்பு நிகழ்வுகள் 2024
- JANUARY 2024 -TNPSC CURRENT AFFAIRS IN TAMIL / ஜனவரி 2024
- FEBRUARY 2024 -TNPSC CURRENT AFFAIRS IN TAMIL / பிப்ரவரி2024
- MARCH 2024 -TNPSC CURRENT AFFAIRS IN TAMIL / மார்ச் 2024
- APRIL 2024 -TNPSC CURRENT AFFAIRS IN TAMIL / ஏப்ரல் 2024
- MAY 2024 -TNPSC CURRENT AFFAIRS IN TAMIL / மே 2024
- JUNE 2024 -TODAY CURRENT AFFAIRS IN TAMIL / ஜூன் 2024
CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS IN TAMIL | நடப்பு நிகழ்வுகள்:2024
- நடப்பு நிகழ்வுகள் கேள்வி மற்றும் பதில்கள் தமிழில்-ஜனவரி 2024
- நடப்பு நிகழ்வுகள் கேள்வி மற்றும் பதில்கள் தமிழில்-பிப்ரவரி 2024
- நடப்பு நிகழ்வுகள் கேள்வி மற்றும் பதில்கள் தமிழில் -மார்ச்-2024
- நடப்பு நிகழ்வுகள் கேள்வி மற்றும் பதில்கள் தமிழில் -ஏப்ரல்-2024
- நடப்பு நிகழ்வுகள் கேள்வி மற்றும் பதில்கள் தமிழில் -மே-2024
- நடப்பு நிகழ்வுகள் கேள்வி மற்றும் பதில்கள் தமிழில் -ஜூன்-2024
முக்கியமான நாட்களின் பட்டியல் 2024
- ஜனவரி 2024 இன் முக்கியமான நாட்களின் பட்டியல் / LIST OF IMPORTANT DAYS IN JANUARY 2024 IN TAMIL
- பிப்ரவரி 2024 இல் முக்கியமான நாட்கள், நிகழ்வுகள் பட்டியல்/FEBRUARY 2024-LIST OF IMPORTANT DAYS IN TAMIL
- மார்ச் 2024 இல் முக்கியமான நாட்கள், நிகழ்வுகள் பட்டியல்/ MARCH 2024-LIST OF IMPORTANT DAYS IN TAMIL
- ஏப்ரல் 2024 இல் முக்கியமான நாட்கள், நிகழ்வுகள் பட்டியல்/ APRIL 2024-LIST OF IMPORTANT DAYS IN TAMIL
- மே 2024 இல் முக்கியமான நாட்கள், நிகழ்வுகள் பட்டியல்/ MAY 2024-LIST OF IMPORTANT DAYS IN TAMIL
அரசு அறிமுகப்படுத்தி முக்கிய செயலிகள் 2023:2024: