நோபல் பரிசு 2024:
இயற்பியலுக்கான நோபல் பரிசு 2024
- ஜான் ஜே. ஹாப்ஃபீல்ட் மற்றும் ஜெஃப்ரி ஈ. ஹிண்டன் - "செயற்கை நுண்ணறிவுத் துறையில் முக்கிய கட்டமைப்பான artificial neural networks என்று சொல்லப்படும் (செயற்கை நரம்பியல் வலைப்பின்னல்கள்) சார்ந்த கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய கண்டுபிடிப்புகளுக்கு"
வேதியியலுக்கான நோபல் பரிசு 2024
- டேவிட் பேக்கர் - மனித உடல் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமான பங்கு வகிப்பது, உயிரணுக்களிலுள்ள புரதங்கள்தான். இதை மூலமாக வைத்து அமினோ அமிலங்களைப் பயன்படுத்தி புதிய வகை புரதத்தை வடிவமைத்துள்ளார்
- டெமிஸ் ஹசாபிஸ் மற்றும் ஜான் எம். ஜம்பர் - செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி, ஏற்கெனவே அறிந்த புரதங்களின் வடிவமைப்புகளை கணித்து, 'ஆல்பாஃபோல்ட்2' என்ற கருவியை உருவாக்கினர். இந்த கருவி வேதியியல் துறையில் 'முழுமையான புரட்சி' செய்ததாகத் தேர்வு குழு குறிப்பிட்டுள்ளது.
உடலியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசு 2024
- விக்டர் ஆம்ப்ரோஸ் மற்றும் கேரி ருவ்குன் - "மைக்ரோஆர்என்ஏவின் கண்டுபிடிப்பு மற்றும் பிந்தைய டிரான்ஸ்கிரிப்ஷனல் மரபணு ஒழுங்குமுறையில் அதன் பங்கு"
- வழக்கத்திற்கு மாறான மைக்ரோ RNA-களின் ஒழுங்குமுறையால் புற்றுநோய், பிறவி காது கேளாமை மற்றும் எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் ஏற்படும் என்பதை முன்கூட்டியே அறிய முயலும் முயற்சியாக `மைக்ரோ RNA' குறித்து ஆராயச்சியில் ஈடுபட்ட இவர்கள், மரபணு வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்தும் திறன் இல்லாவிட்டால், உயிரினத்தின் ஒவ்வொரு உயிரணுவும் ஒரே மாதிரியாக இருக்கும் என்பதால் உயிரினங்களின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த மைக்ரோ RNA குறித்து ஆய்வை மேற்கொண்டுள்ளனர் .
இலக்கியத்திற்கான நோபல் பரிசு 2024
- ஹான் காங் - "வரலாற்று அதிர்ச்சிகளை எதிர்கொள்ளும் மற்றும் மனித வாழ்க்கையின் பலவீனத்தை வெளிப்படுத்தும் அவரது தீவிர கவிதை உரைநடைக்காக" இந்தப் பெருமைமிகு விருதைப் பெறுகிறார் ஹான் காங்.
அமைதிக்கான நோபல் பரிசு 2024
- நிஹான் ஹிடாங்கியோ - "அணு ஆயுதங்கள் இல்லாத உலகத்தை அடைவதற்கான அதன் முயற்சிகளுக்காகவும், அணு ஆயுதங்களை மீண்டும் ஒருபோதும் பயன்படுத்தக்கூடாது என்பதை சாட்சிகள் மூலம் நிரூபித்ததற்காகவும்"