OCTOBER 2024 -TODAY CURRENT AFFAIRS IN TAMIL

TNPSC PAYILAGAM
By -
1

                      JULY 2024 -TODAY CURRENT AFFAIRS IN TAMIL - 01.07.2024 - 03.07.2024



ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டம்:

  • 9-வது ஆயுர்வேத தினம் மற்றும் மருத்துவ கடவுளான தன்வந்தரி பகவானின் பிறந்த நாளை ஒட்டி டெல்லியில் அரசு நலத்திட்ட விழா நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று, தமிழ்நாடு உட்பட 18 மாநிலங்களில் ரூ.12,850 கோடி மதிப்பிலான சுகாதார நலத் திட்டங்களை தொடங்கிவைத்தார். 
  • குறிப்பாக ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டில் 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கும் திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார். இதன்படி 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் அனைவரும் ரூ.5 லட்சம் வரை இலவசமாக சிகிச்சை பெற முடியும். புதிய திட்டத்தின் மூலம் 6 கோடி மூத்த குடிமக்கள் பயன் பெறுவார்கள்.


தமிழகத்தில் வெப்ப அலையை மாநில பேரிடராக அரசு அறிவித்துள்ளது:

  • வெப்ப அலையால் உயிரிழப்போர் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
  • வெப்ப அலையை எதிர்கொள்வதற்கான மருத்துவ வசதிகளுக்கும், ஓ.ஆர்.எஸ். கரைசல் வழங்கவும் பேரிடர் நிதியை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வெப்ப அலை தாக்கத்தின்போது தண்ணீர் பந்தல்கள் அமைத்து குடிநீர் வழங்குவதற்கும் பேரிடர் நிதியை பயன்படுத்திக் கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

முதலமைச்சர் கோப்பை போட்டிகள் 2024 :

  • சென்னை மாவட்ட அணியானது 105 தங்கம், 80 வெள்ளி மற்றும் 69 தங்கம் வென்று முதலிடம் பெற்றது. 
  • 26 வெள்ளி, 36 வெண்கலப் பதக்கங்கள் மற்றும் 31 தங்கப் பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் செங்கல்பட்டு இரண்டாவது இடத்தைப் பிடித்தது. 
  • கோவை 23 தங்கம், 40 வெள்ளி, 39 வெண்கலப் பதக்கங்களை வென்றது. 
  • 2023 ஆம் ஆண்டில் 19வது இடத்திலிருந்த சேலம் ஆனது 21 தங்கம், 12 வெள்ளி மற்றும் 23 வெண்கலப் பதக்கங்களை வென்று இதில் நான்காவது இடத்திற்கு முன்னேறியதால், கடந்த ஆண்டு பதக்கப் பட்டியலில் இருந்து அதிகளவு இடங்களுக்கு முன்னேறிய ஒரு மாவட்டமாக திகழ்கிறது. 
  • 2024 ஆம் ஆண்டு முதலமைச்சர் கோப்பைப் போட்டி என்பது நாட்டின் மிகப்பெரிய அடிமட்ட முன்னெடுப்புகளில் ஒன்றாகும் என்பதோடு இதில் 38 மாவட்டங்களில் இருந்து 33,000 பங்கேற்பாளர்கள் பங்கேற்றனர்.


பேலன் தோர் (தங்கப் பந்து) (Ballon d'Or):

  • பிரான்ஸ் நாட்டிலிருந்து வெளிவரும் பிரான்ஸ் ஃபுட்பால் என்கிற பத்திரிகை சார்பில் 1956 முதல் ஆண்டுதோறும் பேலன் தோர் விருது வழங்கப்படுகிறது. பல்வேறு தரப்பினரிடம் நடத்தப்படும் வாக்கெடுப்பின் அடிப்படையில் இந்த விருதுக்குரியவர் தேர்வு செய்யப்படுகிறார். கடந்தமுறை மெஸ்ஸி 8ஆவது முறையாக பேலன் தோர் (தங்கப் பந்து) விருதை வென்றிருந்தார். இந்தாண்டு மெஸ்ஸி, ரொனால்டோ இருவருமே பட்டியலில் தேர்வாகாதது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது
  • சிறந்த கால்பந்து வீரருக்கு வழங்கப்படும் விருதான பேலன் தோர் (தங்கப் பந்து) (Ballon d'Or) விருதை ஸ்பெயினின் கால்பந்து வீரர் ரோட்ரி வென்றார். 
  • மகளிர் பிரிவில் 26 வயதாகும் ஸ்பானிஷின் பொன்மாட்டி இந்த விருதினை தக்கவைத்தார்.
  • சிறந்த ஆடவர் அணி- ரியல் மாட்ரிட் அணி 
  • கோபா விருது - லாமின் யமால் கெர்ட் முல்லர் - கிளியன் எம்பாபே, பெய்ர்ன் முனிச் 
  • சிறந்த பயிற்சியாளர் (ஜோகன் க்ரூஃபி டிராபி) - ரியல் மாட்ரிட் அணி கார்லோ அன்செலோட்டி 
  • லெவ் யாஷின் - ஆர்ஜெண்டினாவின் பிரபல கோல் கீப்பர் எமிலியானோ மார்டினிஸ் வென்றார். 
  • சிறந்த மகளிர் அணி - பார்சிலோனா மகளிரணி.


இந்தியாவின் சிறந்த வங்கி 2024:

  • இந்தியாவின் சிறந்த வங்கியாக பாரத ஸ்டேட் வங்கியை (எஸ்பிஐ) அமெரிக்காவில் இருந்து வெளியாகும் பொருளாதாரப் பத்திரிகையான ‘குளோபல் ஃபைனான்ஸ்’ தோ்வு செய்துள்ளது. 
  • உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள வங்கிகளில், அவற்றின் சேவைத் தரம், நிா்வாகம், செயல்பாடுகள், நிதியைக் கையாளும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் ஆண்டுதோறும் சிறந்த வங்கிகளை குளோபல் ஃபைனான்ஸ் தோ்வு செய்து வருகிறது. வங்கி எவ்வளவு பெரியது என்பது இந்த விருதின்போது பரிசீலிக்கப்படவில்லை. 
  • 2024-ஆம் ஆண்டு இந்தியாவின் சிறந்த வங்கியாக எஸ்பிஐ தோ்வு செய்யப்பட்டுள்ளது. அண்மையில் வாஷிங்டனில் நடைபெற்ற சா்வதேச நிதியம் (ஐஎம்எஃப்), உலக வங்கி மாநாட்டில் இந்த விருதை எஸ்பிஐ தலைவா் சி.எஸ்.ரெட்டி பெற்றுக் கொண்டாா்.


இந்திய ராணுவத்துக்கான விமானங்களை தயாரிக்கும் நாட்டின் முதல் தனியார் விமான உற்பத்தி ஆலை:

  • குஜராத்தில் இந்திய ராணுவ விமானங்களை தயாரிக்கும் டாடா விமான உற்பத்தி ஆலையை பிரதமர் மோடியும் ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் இணைந்து  திறந்து வைத்தனர். 
  • குஜராத் மாநிலம், வதோதராவில் திறந்து வைக்கப்பட்டுள்ள இந்த ஆலை, இந்திய ராணுவத்துக்கான விமானங்களை தயாரிக்கும் நாட்டின் முதல் தனியார் விமான உற்பத்தி ஆலையாகும். 
  • இந்தியாவில் இந்த விமானங்களை தயாரிக்கும் பணி, டாடா குழுமத்தை சேர்ந்த டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கான தொழிற்சாலையை குஜராத்தின் வடோதராவில் நிறுவ முடிவு செய்யப்பட்டது. இதற்கு பிரதமர் மோடி கடந்த 2022 அக்டோபர் மாதம் அடிக்கல் நாட்டினார்.


உலக இயற்கை பாதுகாப்பு குறியீடு (Global Nature Conservation Index ) :

  • உலக இயற்கை பாதுகாப்பு குறியீடு (Global Nature Conservation Index ) ஆய்விற்கு 180 நாடுகள் உட்படுத்தப்பட்ட நிலையில், இந்தியா இதில் 176வது இடம் பிடித்துள்ளது.

  • நில மேலாண்மை, ஆளுமை மற்றும் திறன், எதிர்கால போக்குகள், உயிரியல் பன்முகத்தன்மைக்கு எதிரான அச்சுறுத்தல் அளவு ஆகிய மதிப்பீட்டுகளின் 100 என்ற உச்ச அளவில் இந்தியா 45.5 மதிப்பெண்கள் பெற்று 176வது இடம்பிடித்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக மைக்ரோனேசியா 177வது இடத்திலும், ஈராக் 178வது இடம், துருக்கி 179வது இடம், கிரிபாட்டி 180வது இடம்பிடித்துள்ளன.

  • இந்த ஆய்வானது Goldman Sonnenfeldt School-யின் நிலைத்தன்மை, காலநிலை மாற்றம், மற்றும் லாப நோக்கமற்ற BioDB என்ற வலைதளத்தின் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.
  • நகரமயமாதல் காரணமாக ஏற்படுத்தப்படும் நில மாற்றங்கள் 53 சதவீதத்தை அடைந்து இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
  • 2001 முதல் 2019ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலக்கட்டத்தில் மட்டும் காடு அழிப்பு காரணங்களால் அதிர்ச்சியூட்டும் விதமாக 23,300 சதுர கி மீ மரங்கள் அழிக்கப்பட்டு இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.


உச்ச நீதிமன்ற 51-வது புதிய தலைமை நீதிபதி :

  • உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள டி.ஒய்.சந்திரசூட்டின் பதவிக் காலம் வரும் நவம்பர் 10-ம் தேதியுடன் நிறைவு பெற உள்ளது. இந்நிலையில், அடுத்த தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணாவின் பெயரை சந்திரசூட் சட்ட அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்தார்.
  • அவரின் பரிந்துரையை ஏற்று குடியரசுத் தலைவர் தற்போது ஒப்புதல் வழங்கியுள்ளார். உச்ச நீதிமன்றத்தின் 51-வது புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா வரும் நவம்பர் 11-ம் தேதி பதவியேற்க உள்ளார். 2025 மே 13-ம் தேதி வரை 6 மாதங்களுக்கு அவர் தலைமை நீதிபதியாக செயல்படுவார்.


தமிழ்நாடு மலையேற்ற திட்டத்தினை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார் :

  • தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (24.10.2024) தலைமைச் செயலகத்தில் தமிழ்நாட்டில் உள்ள 40 அழகிய, மலையேற்ற வழித்தடங்களை உள்ளடக்கிய 'தமிழ்நாடு மலையேற்ற திட்டத்தினை தொடங்கி வைத்தார். 
  • மேலும் இத்திட்டத்தின் இலச்சினையினை வெளியிட்டு, இணையவழி முன்பதிவிற்காக www.trektamilnadu.com என்ற பிரத்யோக வலைதளத்தையும் தொடங்கி வைத்தார். 
  • இத்திட்டம் தமிழ்நாட்டின் வனம் மற்றும் வன உயிரினப் பகுதிகளில் நிலையான முறையில் மலையேற்றம் மேற்கொள்வதை ஒரு நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தமிழ்நாடு வன அனுபவக் கழகம் (TNWEC) மற்றும் தமிழ்நாடு வனத்துறையின் (TNFD) கூட்டு முன்னெடுப்பில் உருவாக்கப்பட்டுள்ளது.


சிங்கப்பூர் இந்தியா கடல்சார் இருதரப்பு பயிற்சி 2024 :

  • 31-வது சிங்கப்பூர் இந்தியா கடல்சார் இருதரப்பு பயிற்சி 2024 அக்டோபர் 23 முதல் 29 வரை விசாகப்பட்டினத்தில் உள்ள கிழக்கு கடற்படை தளத்தில் நடத்தப்படுகிறது. 
  • சிங்கப்பூர் குடியரசின் கடற்படைக் கப்பல் ஆர்.எஸ்.எஸ் டெனாசியஸ் ஹெலிகாப்டருடன் பங்கேற்பதற்காக அக்டோபர் 2024 23 அன்று விசாகப்பட்டினம் வந்தடைந்தது. 1994-ம் ஆண்டில் 'எக்சர்சைஸ் லயன் கிங்' என்று தொடங்கப்பட்ட கூட்டுப்பயிற்சியானது இந்திய கடற்படைக்கும் சிங்கப்பூர் குடியரசு கடற்படைக்கும் இடையிலான மிக முக்கியமான இருதரப்பு கடல்சார் ஒத்துழைப்புகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. 
  • இந்த பயிற்சி இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் - அக்டோபர் 23 முதல் 25 வரை விசாகப்பட்டினத்தில் துறைமுக பகுதியிலும், வங்காள விரிகுடாவில் அக்டோபர் 28 முதல் 29 வரை கடல் பகுதியிலும் நடைபெற உள்ளது. 


ஜெர்மன் கடற்படையுடன் கடல்சார் கூட்டுப்பயிற்சி 2024 :

  • இந்திய கடற்படை கப்பலான ஐஎன்எஸ் தில்லி, ஜெர்மன் கடற்படையின் போர்க்கப்பல் பாடன்-வூர்ட்டம்பெர்க் மற்றும் டேங்கர் பிராங்க்பர்ட் ஆம் மெய்ன் ஆகியவை இந்தியப் பெருங்கடலில் கடல்சார் கூட்டுப்பயிற்சியை மேற்கொண்டன. 
  • வங்காள விரிகுடாவில் முதல் இந்திய-ஜெர்மன் கடல்சார் கூட்டுப் பயிற்சி இரு நாடுகளுக்கும் இடையிலான கடல்சார் தொடர்பை மேலும் வலுப்படுத்துவதையும், கடற்படைகளுக்கு இடையிலான இயங்குதன்மையையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. ஐ.என்.எஸ் தில்லி கப்பல் ஏவுகணை அழிப்பு முன்னணி கப்பலாக விளங்குகிறது.


எக்ஸ்-பேண்ட் ரேடார்

  • கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் கடுமையான வெள்ளம் மற்றும் நிலச்சரிவைத் தொடர்ந்து, இப்பகுதியில் எக்ஸ்-பேண்ட் ரேடார் நிறுவ மத்திய புவி அறிவியல் அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்திய வானிலை ஆய்வுத் துறை (IMD) 1950 களில் ரேடார் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் தொடங்கியது. 
  • 1970 இல் நிறுவப்பட்ட முதல் உள்நாட்டு எக்ஸ்-பேண்ட் ரேடார்:உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட மற்றும் தயாரிக்கப்பட்ட X-அலைவரிசை சார்ந்த புயல் கண்டறிதல் ரேடார் கருவியானது 1970 ஆம் ஆண்டில் புது டெல்லியில் நிறுவப் பட்டது.
  • NISAR (NASA-ISRO செயற்கை துளை ரேடார்) என்பது NASA மற்றும் ISRO ஆகியவற்றின் கூட்டுத் திட்டமாகும், இது ரேடார் இமேஜிங்கைப் பயன்படுத்தி உயர் தெளிவுத்திறன் கொண்ட பூமி வரைபடங்களை உருவாக்க அமைக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோள் 2025 இல் ஏவப்பட உள்ளது, மொத்த செலவு $1.5 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது
  • X-அலைவரிசை ரேடார்கள் ஒப்பீட்டளவில் குறுகிய வரம்பைக் கொண்டுள்ளன. புதிய ரேடார் கருவியானது, நிலச்சரிவு எச்சரிக்கைகளைத் தெரிவிப்பதற்காக, மண் போன்ற துகள்களின் இயக்கங்களைக் கண்காணிக்க முடியும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. 


பிரிக்ஸ் அமைப்பின் 16-வது உச்சி மாநாடு:

  • கடந்த 2009-ம் ஆண்டு ஜூன் 16-ம் தேதி பிரிக் (BRIC) அமைப்பு தொடங்கப்பட்டது. முதலில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் உறுப்பினராக இருந்தன. ஓராண்டுக்கு பிறகு தென்ஆப்பிரிக்கா இணைந்தது. இதன் பிறகு இந்த அமைப்பு பிரிக்ஸ் (BRICS) என்று அழைக்கப்பட்டது. 
  • கடந்த ஆண்டு எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை பிரிக்ஸ் அமைப்பில் புதிய உறுப்பினர்களாக இணைந்தன. இந்தச் சூழலில் பிரிக்ஸ் அமைப்பின் 16-வது உச்சி மாநாடு ரஷ்யாவின் கசான் நகரில் 23.10.2024 தொடங்கியது.


கான மயில் மீட்பு திட்டம் :

  • கான மயிலை பாதுகாக்கும் நோக்கிலும், அதன் இனத்தைப் பெருக்கும் நோக்கிலும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் 2016-ம் ஆண்டு கான மயில் மீட்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதன் பகுதியாக ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் உள்ள பாலை வன தேசிய பூங்காவில் கானமயில் இனப்பெருக்க மையம் அமைக்கப்பட்டது
  • கான மயில் குஞ்சுராம் தேவ்ரா கான மயில் இனப்பெருக்க மையத்தில் உள்ள சுதா என்ற 3 வயது ஆண் கான மயிலின் விந்தணுவை எடுத்து, ஜெய்சால்மர் மையத்தில் உள்ள டோனி என்ற 5 வயது பெண் கான மயிலுக்குள் ஆராய்ச்சியாளர்கள் செலுத்தினர். இதையடுத்து டோனி கான மயில் செப்டம்பர் 24-ம் தேதி முட்டையிட்டது. அந்த முட்டையிலிருந்து கடந்த அக்டோபர் 16-ம் தேதி குஞ்சு வெளியே வந்துள்ளது.


டானா புயல்:

  • பருவமழை காலங்களில் புயல் உருவாகின்றன. அவ்வாறு உருவாகும் புயல்களை அடையாளப்படுத்தும் விதமாக அதற்கு பெயர்கள் சூட்டப்படும் வழக்கம் நடைமுறையில் இருந்து வருகிறது. 
  • உலக வானிலை அமைப்பு, ஆசியா மற்றும் பசிபிக் பகுதிகளுக்கான பொருளாதார மற்றும் சமூக ஆணையம் ஆகியவற்றில் உறுப்பு நாடுகளாக வங்காளதேசம், இந்தியா, ஈரான், மாலத்தீவு, மியான்மர், ஓமன், பாகிஸ்தான், கத்தார், சவுதி அரேபியா, இலங்கை, தாய்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஏமன் ஆகிய 13 நாடுகள் உள்ளன. 
  • இந்த நாடுகள் வட இந்திய பெருங்கடல், அரபிக்கடலில் உருவாகும் ஒவ்வொரு புயலுக்கும் பெயர் சூட்டும் வகையில், ஒவ்வொரு நாடும் 13 பெயர் வீதம் தலா 169 பெயர்களை தேர்வு செய்து அளிக்கும். அதில் உள்ள வரிசைப்படி புயலுக்கு பெயர் சூட்டப்படுகின்றன. 
  • அதன்படி, தற்போது வங்கக்கடலில் உருவாக உள்ள புயலுக்கு 'டானா' என்று பெயரிடப்பட இருக்கிறது. இது கத்தார் நாடு வழங்கிய பெயர் ஆகும். டானா என்ற பெயருக்கு அரபு மொழியில் 'விலைமதிப்பற்ற அல்லது அழகான முத்து' என்று அர்த்தம்.


நியமனம்:

  • தேசிய மகளிர் ஆணைய தலைவராக விஜயா கிஷோர் ரஹாத்கர் பொறுப்பேற்றுக் கொண்டார்.
  • மகாராஷ்டிராவின் அவுரங்காபாத் மாவட்டத்தைச் சேர்ந்தவரான விஜயா கிஷோர் ரஹாத்கர், பாஜகவின் தேசிய செயலாளராகவும், ராஜஸ்தான் மாநில பொறுப்பாளராகவும் இருந்தவர். இயற்பியலில் இளநிலை பட்டமும், வரலாற்றில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். 2007 முதல் 2010 வரை அவுரங்காபாத் மாநகராட்சி மேயராக பதவி வகித்தவர்.


யுபிஐ மாலத்தீவில் அறிமுகம்:

  • இந்தியா உருவாக்கிய யுபிஐ கட்டமைப்பை மத்திய அரசு உதவியுடன் மாலத்தீவில் அந்நாட்டு அதிபர் முகம்மது முய்சு அறிமுகம் செய்துள்ளார்.
  • நாட்டின் அன்றாட பணப் பரிவர்த்தனை செயல்பாட்டை எளிமையாக்கும் நோக்கில் இந்திய அரசு யுபிஐ கட்டமைப்பை உருவாக்கியது. 2016-ம் ஆண்டு பயன்பாட்டுக்கு வந்த யுபிஐ, நாட்டின் பணப் பரிவர்த்தனை நடைமுறையில் பெரும்மாற்றத்தை ஏற்படுத்தியது. 
  • இதுவரை, ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், மலேசியா, நேபாளம், பூடான் உள்ளிட்ட நாடுகளில் யுபிஐ மூலம் பரிவர்த்தனை செய்வதற்கான கட்டமைப்பை மத்தியஅரசு உருவாக்கி உள்ளது.
  • உலக அளவில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை தளங்களில் இந்தியாவின் யுபிஐ முன்னணி வகிக்கிறது. இந்தியாவில் நடைபெறும் மொத்த பணப் பரிவர்த்தனைகளில் 40 சதவீதம் டிஜிட்டல் முறையில் மேற்கொள்ளப்படுகிறது. யுபிஐ மூலம் விநாடிக்கு 3,729 பரிவர்த்தனைகள் நிகழ்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


கடல்சார் பயிற்சி (நசீம் அல் பஹ்ர்):

  • இந்தியக் கடற்படையின் ஐஎன்எஸ் திரிகண்ட் மற்றும் டோர்னியர் கடல்சார் ரோந்து விமானங்கள், ஓமன் ராயல் கடற்படையின் அல் சீப் கப்பலுடன் அக்டோபர் 13 முதல் 18 வரை கோவா கடற்கரைக்கு அப்பால்   இந்தோ-ஓமன் இருதரப்பு கடற்படைப் பயிற்சியான நசீம்-அல்-பஹ்ரில் பங்கேற்றன.


'கர்மயோகி சப்தா' (கர்மயோகி வாரம்) :

  • புதுதில்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் 'கர்மயோகி சப்தா' (கர்மயோகி வாரம்) – தேசிய கற்றல் வாரத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி  (19.10.2024) தொடங்கி வைத்தார்.
  • மிஷன் கர்மயோகி எனப்படும் கர்மயோகி இயக்கம் 2020-ம் ஆண்டு செப்டம்பரில் தொடங்கப்பட்டது. இது உலகளாவிய கண்ணோட்டத்துடன் இந்திய நெறிமுறைகளில் வேரூன்றிய, எதிர்காலத்திற்கு தயாராக உள்ள குடிமைப் பணி சேவையை வழங்க முயற்சிக்கிறநு. தேசிய கற்றல் வாரம் (என்எல்டபிள்யூ) அரசு ஊழியர்களுக்கான தனிப்பட்ட செயல்பாட்டுக்கும் நிறுவன திறன் மேம்பாட்டிற்கும் புதிய உத்வேகத்தை வழங்கும். "ஒரே அரசு" என்ற செய்தியை உருவாக்கி, அனைவரையும் தேசிய இலக்குகளுடன் ஒருங்கிணைத்து, வாழ்நாள் கற்றலை இது ஊக்குவிக்கும்.


நாட்டின் மிக நீண்ட வந்தே பாரத் இரயில் சேவை:

  • இந்திய இரயில்வே நிர்வாகமானது புதிய வந்தே பாரத் இரயில் சேவையை அறிமுகப் படுத்தியுள்ளதோடு டெல்லியில் இருந்து பாட்னா வரை 994 கிலோமீட்டர் தொலைவு வரை இயக்கப்பட உள்ள இந்த இரயில் சேவையானது நாட்டின் மிக நீண்ட வந்தே பாரத் இரயில் பயணத்தைக் குறிக்கிறது.


Shakthi SAT:

  • விண்வெளி சார் புத்தொழில் நிறுவனமான ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா "Shakthi SAT" என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 


 உலகின் முதல் நதிநீர் டால்பின் கணக்கெடுப்பு:

  • இந்தியா சமீபத்தில் கங்கா, பிரம்மபுத்திரா, சிந்து நதிகளில் டால்பின்களை கணக்கெடுப்பு நடத்தியுள்ளது.
  • இதுவே உலகின் முதல் நதிநீர் டால்பின் கணக்கெடுப்பு ஆகும்


டிமேட் கணக்கு அதிகம் வைத்திருப்பவர்களின் பட்டியல்:

  • டிமேட் கணக்கு அதிகம் வைத்திருப்பவர்களின் பட்டியலில் மகாராஷ்டிரா முதலிடம் பிடித்துள்ளது.

  • இப்பட்டியலில் தமிழ்நாடு 7வது இடம் கிடைத்துள்ளது.
  • டிமேட் கணக்கு என்பது பங்குச் சான்றிதழ்கள் மற்றும் மின்னணு வடிவத்தில் வைத்திருக்கும் பிற பத்திரங்களுக்கான வங்கிக் கணக்கு ஆகும்.


CLRI (Central Leather Research Institute):
  • CLRI அமைப்பானது தோல் பொருட்களின் தரத்தினை உறுதி செய்ய லெதர் மார்க் சான்றினை அறிமுகம் செய்துள்ளது.

IAF உலக விண்வெளி விருது 2024:

  • இந்தியாவின் விண்வெளித் துறையின் செயலாளரும் இஸ்ரோ தலைவருமான டாக்டர் எஸ் சோமநாத், வெற்றிகரமான சந்திரயான்-3 திட்டத்திற்காக 2024 ஆம் ஆண்டுக்கான IAF உலக விண்வெளி விருதைப் பெற்றார்.


நியமனம்:

  • இந்திய கடலோர காவல்படையின் புதிய தலைவராக எஸ் பரமேஷ் பொறுப்பேற்றார் .


5-வது தேசிய நீர் விருது 2024:

  • புதுதில்லியில் உள்ள ஷ்ரம் சக்தி பவனில், 5-வது தேசிய நீர் விருதுகளுக்கான வெற்றியாளர்களின் பட்டியலை மத்திய நீர்வள அமைச்சர் திரு சி.ஆர். பாட்டீல் அறிவித்தார்.


8வது இந்திய மொபைல் காங்கிரஸ்:

  • பிரதமர் திரு நரேந்திர மோடி  புது தில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம் - உலக தொலைத்தொடர்பு தரநிலைப்படுத்தல் சட்டமன்றம் (WTSA) 2024 ஐ தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியின் போது இந்திய மொபைல் காங்கிரஸின் 8வது பதிப்பையும் ஸ்ரீ மோடி தொடங்கி வைத்தார் 
  • புது தில்லியில் Future is Now என்னும் கருப்பொருளுடன் 8வது இந்திய மொபைல் காங்கிரஸ் நடைபெற்றுள்ளது.


செரென்கோவ் தொலைநோக்கி:

  • இந்தியா, லடாக்கின் ஹான்லேயில் அமைக்கப்பட்டுள்ள ஆசியாவின் மிகப்பெரிய வரைபடமாக்க செரென்கோவ் தொலைநோக்கியை திறந்து வைத்துள்ளது. இது சுமார் 4,300 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. 
  • முக்கிய வளிமண்டல செரென்கோவ் சோதனை (MACE) தொலைநோக்கி உலகின் மிக உயரமான தொலைநோக்கி ஆகும். 
  • வளிமண்டலம் ஆனது காமா கதிர்களை உறிஞ்சுவதால் அவை பூமியின் மேற்பரப்பை அடையாது. இருப்பினும், அவை வளிமண்டலத்தில் வளியை விட வேகமாகப் பயணிப்பதால் வலி முழக்கம் (sonic boom) போன்ற செரென்கோவ் கதிர்வீச்சை வெளியிடும் உயர் ஆற்றல் துகள்களை உருவாக்குகின்றன.
  • MACE தொலைநோக்கியின் கண்ணாடிகள் மற்றும் ஒளிப்படக் கருவிகள் இந்தக் கதிர்வீச்சைப் பற்றிக் கொள்கின்றன என்பத்டு பின்னர் அது மீண்டும் அதன் அண்ட மூலத்திற்குத் திரும்புகிறது.


நோபல் பரிசு 2024:

 PSLV – C37 ராக்கெட்:

  • 104 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் ஏவப்பட்ட PSLV – C37 ராக்கெட் தனது எட்டு ஆண்டு பயணத்தை முடித்து கொண்டு அட்லாண்டிக் பெருங்கடலில் விழுந்தது

  • 104 செயற்கைக்கோள்களுடன் PSLV – C37-யை செலுத்து இஸ்ராே சாதனை படைத்துள்ளது.
  • PSLV – C37 விண்ணில் ஏவப்பட்ட நாள் – 15.02.2017

21-வது ஆசியான்-இந்தியா உச்சி மாநாடு 2024 :

ஹம்சஃபர் கொள்கை 2024 :

  • இந்திய தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிப்பவர்களுக்கான வசதிகளை மேம்படுத்தவும், சாலையோரங்களில் பல்வேறு வசதிகளை விரிவுபடுத்துவது தொடர்பாகவும், வடிவமைக்கப்பட்ட ஹம்சஃபர் கொள்கையை மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி டெல்லியில்  வெளியிட்டுள்ளார்.


PM Electric Drive Revolution in Innovative Vehicle Enhancement (PM E-DRIVE)

  • மத்திய அரசு PM E-DRIVE திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது மின்சார வாகனம் (EV) தத்தெடுப்பை அதிகரிக்க ₹10,900 கோடி முயற்சியாகும்.



TODAY CURRENT AFFAIRS IN TAMIL 2024

நடப்பு நிகழ்வுகள் 2024 


CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS IN TAMIL | நடப்பு நிகழ்வுகள்:2024


முக்கியமான நாட்களின் பட்டியல் 2024


அரசு அறிமுகப்படுத்தி முக்கிய செயலிகள் 2023:2024:



Post a Comment

1Comments

Post a Comment