உச்சநீதிமன்றத்தின் 51 ஆவது தலைமை நீதிபதி
- டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் 11.11.2024 நடந்த பதவியேற்பு நிகழ்வில் உச்சநீதிமன்றத்தின் 51 ஆவது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னாவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். முன்னதாக சஞ்சீவ் கன்னாவை இந்த பதவிக்கு, தற்போது ஓய்வு பெற்ற தலைமை நீதிபதியான சந்திரசூட்தான் பரிந்துரைத்திருந்தார். அந்த பரிந்துரையை மத்திய அரசும் ஏற்றுக்கொண்டது.
- டெல்லியில் 1960ஆம் ஆண்டு மே 14ஆம் தேதி பிறந்த இவர், அங்குள்ள பல்கலையிலேயே சட்டம் பயின்றார்.இவரது தந்தை டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக 1985ஆம் ஆண்டுவரை பதவி வகித்தவர்.1983ஆம் ஆண்டு டெல்லி பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்துகொண்ட சஞ்சீவ் கன்னா, மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.2004ஆம் ஆண்டு டெல்லி அரசின் வழக்கறிஞராக (சிவில்) நியமிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து டெல்லி உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக கடந்த 2005ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி 18ஆம் தேதி, உச்சநீதிமன்ற நீதிபதியாக இவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது.
வெம்பக்கோட்டை அகழாய்வுப் பணி
- விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகேயுள்ள விஜயகரிசல்குளத்தில் கடந்த 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நுண் கற்காலத்தை அறியும் வகையில், வைப்பாற்றின் வடகரையில் மேட்டுக்காடு பகுதியில் 3-ஆம் கட்ட அகழாய்வுப் பணி கடந்த ஜூன் 18-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
- இந்த நிலையில், விஜயகரிசல்குளத்தில் நடைபெற்று வரும் 3-ஆம் கட்ட அகழாய்வில் பழமையான அணிகலன் தயாரிப்பு மற்றும் வேட்டையாடப் பயன்படும் கருவிகள் தயாரிப்பின் மூலப்பொருள்களான ஜாஸ்பர், சார்ட் கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
QS ஆசியா பல்கலைக்கழக தரவரிசை பட்டியல் 2025 :
- ஆசிய கண்டம் முழுவதும் உள்ள உயர்கல்வியின் திறனைப் பிரதிபலிக்கிறது. கல்வி, ஆராய்ச்சி, புதுமை, சர்வதேசமயமாக்கல் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் சிறந்த நிறுவனங்களை இது பட்டியலிடுகிறது.
- இந்தியாவில் ஐஐடி தில்லி (44வது இடம்) மற்றும் ஐஐடி மும்பை (48வது இடம்) இது தவிர ஐஐடி – சென்னை (56), ஐஐடி காரக்பூர் (60), இந்திய அறிவியல் நிறுவனம் (62), ஐஐடி கான்பூர் (67), தில்லி பல்கலைக்கழகம் (81) ஆகிய நிறுவனங்கள் இந்தியாவின் வலுவான கல்வி நிலையை வெளிப்படுத்துகின்றன.
FIRST DIGITAL POPULATION CLOCK
- முதல் டிஜிட்டல் மக்கள்தொகை கடிகாரம் கர்நாடாகா மாநிலத்தின் பெங்களூர் நகரில் திறக்கப்பட்டுள்ளது. இதனை நிறுவிய அமைப்பு – Institute for Social and Economic Change (ISEC).
- டிஜிட்டல் மக்கள்தொகை கடிகாரம் என்பது நிகழ்நேர (real-time) மக்கள்தொகை எண்ணிக்கையை வழங்குவது ஆகும்
சென்னை கிராண்ட்மாஸ்டா்ஸ் செஸ் போட்டி 2024:
- சென்னை கிராண்ட்மாஸ்டா்ஸ் செஸ் போட்டியின் சாம்பியன் பட்டத்தை தமிழகத்தின் அரவிந்த் சிதம்பரம் கைப்பற்றினாா். சேலஞ்சா்ஸ் பிரிவில் சாம்பியன் பட்டத்தை பிரணவ் வசப்படுத்தினாா்.
- அவருக்கு சாம்பியன் பட்டத்துடன் ரூ.11 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. அரவிந்த் சிதம்பரம், தமிழ்நாட்டின் மதுரையை சோ்ந்தவா் ஆவாா்.
FOLLOWS ON:
- Instagram : / tnpscpayilagam
- Personal Twitter: / @TNPSCPayilagam) / X(twitter.com)
- Facebook Page : / TNPSCPAYILAGAM
- Email: tnpscpayilagam@gmail.com
- Telegram: https://t.me/TNPSCPAYILAGAM
- LinkedIN: TNPSCPAYILAGAM | LinkedIn
- Pinterest : https://in.pinterest.com/tnpscpayilagam
- Youtube : https://www.youtube.com/@TNPSCPAYILAGAM
If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!