CURRENT AFFAIRS IN TAMIL NOVEMBER 2024 (13.11.2024)

TNPSC PAYILAGAM
By -
0

CURRENT AFFAIRS IN TAMIL NOVEMBER 2024 (13.11.2024)


முதல் அனைத்து பெண்கள் சிஐஎஸ்எஃப் படைப்பிரிவு மத்திய அரசு அனுமதி :

  • ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலா்களுடன் நாட்டின் முதல் அனைத்து பெண்கள் மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை ( சிஐஎஸ்எஃப்) பிரிவை அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. 
  • முக்கியப் பிரமுகா்கள் (விஐபி) பாதுகாப்புடன் நாடாளுமன்றம், தில்லி மெட்ரோ ரயில் நிலையங்கள், நாட்டின் 68 விமான நிலையங்கள் மற்றும் முக்கிய வரலாற்று நினைவுச் சின்னங்களின் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள மத்திய பாதுகாப்புப் படையான சிஐஎஸ்எஃப்-இல் சுமாா் 1.80 லட்சம் காவலா்கள் உள்ளனா். 
  • இதில் 1,025 பெண் காவலா்களை உள்ளடக்கிய நாட்டின் முதல் அனைத்து பெண் படைப் பிரிவை மூத்த காமண்டா் தலைமையில் அமைக்க அனுமதியளித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிக்கை வெளியிட்டது.
  • ஐஎஸ்எஃப் தற்போது 12 படைப்பிரிவுகளைக் கொண்டுள்ளது. அதில் ஆண்கள் மற்றும் பெண்கள் (7%) கூட்டாக பணியாற்றுகின்றனா். இந்நிலையில், முதல் அனைத்து பெண்கள் படைப்பிரிவு அமைக்கப்படுகிறது.

உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன் பட்டம் 2024 / WORLD SNOOKER CHAMPIONSHIPS QATAR 2024 BILLIARDS CHAMPION :

  • உலக ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கஜ் அத்வானி பில்லியர்ட்ஸ் சாம்பியன் பட்டம் வென்றதற்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்தார். 
  • நவம்பர் 9 ஆம் தேதி தோஹாவில் நடந்த IBSF உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப்பில் அத்வானி 4-2 என்ற கணக்கில் இங்கிலாந்தின் ராபர்ட் ஹாலை தோற்கடித்தார். இது அவரது தொடர்ச்சியாக ஏழாவது உலகப் பட்டமாகும்.


South Asian Telecommunication Regulators’ Council (SATRC-25) :

  • தெற்காசிய தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டாளர்கள் கவுன்சிலின் (SATRC-25- எஸ்ஏடிஆர்சி-25) 25-வது கூட்டம் புது தில்லியில் 2024 நவம்பர் 11 முதல் 13 வரை நடைபெற்றது. 
  • தெற்காசியா முழுவதிலுமிருந்து கட்டுப்பாட்டாளர்கள், தொழில்துறை தலைவர்கள், நிபுணர்கள் இதில் பங்கேற்றனர். 
  • ஆசிய-பசிபிக் டெலிகம்யூனிட்டி (APT) உடன் இணைந்து இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) நடத்திய இந்த ஆண்டு கூட்டம், நுண்ணறிவுகளைப் பகிர்ந்து கொள்வதிலும், ஒழுங்குமுறை சவால்களை எதிர்கொள்வதிலும், உள்ளடக்கிய டிஜிட்டல் சூழல் அமைப்பை நோக்கிய பாதைகளை உருவாக்குவதிலும் கவனம் செலுத்தியது.
  • இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் திரு அனில் குமார் லஹோட்டி எஸ்ஏடிஆர்சி-25 தலைவராக தேர்ந்தெடுக்ப்பட்டார்.
  • எஸ்ஏடிஆர்சி என்பது ஆசிய-பசிபிக் டெலிகம்யூனிட்டி (APT) இன் கீழ் ஒரு அமைப்பாகும். இது தெற்காசியாவின் தொலைத்தொடர்புத் துறையில் பிராந்திய ஒத்துழைப்பு நடைமுறைகளை ஊக்குவிக்கிறது. ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, ஈரான், மாலத்தீவுகள், நேபாளம், பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட உறுப்பு நாடுகள் இதில் உள்ளன.

Exercise Antariksha Abhyas – 2024: அந்தரிக்ஷா அபியாஸ்-2024  :

  • பாதுகாப்பு விண்வெளி முகமை 2024 நவம்பர் 11 முதல் 13 வரை ஸ்பேஸ் டேபிள் டாப் பயிற்சியான அந்தரிக்ஷா அபியாஸ்-2024  என்ற பயிற்சியை வெற்றிகரமாக நடத்தியது. 
  • இது விண்வெளிப் போர்க் களத்தில் இந்திய ஆயுதப் படைகளின் உத்திசார்  தயார்நிலையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் பயிற்சியாகும். 
  • இந்த முன்னோடி நிகழ்வு இந்தியாவின் விண்வெளி அடிப்படையிலான செயல்பாட்டு திறன்களை வலுப்படுத்துவதிலும், விண்வெளி பாதுகாப்பிற்கான முப்படைகளின் ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதிலும் ஒரு முக்கியமான படியாகும்.
  • இந்த பயிற்சியின் முக்கிய அம்சங்களில் வளர்ந்து வரும் விண்வெளி தொழில்நுட்பங்கள், விண்வெளி சூழ்நிலை விழிப்புணர்வு, இந்தியாவின் விண்வெளி திட்டங்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்தியது. முக்கியமான சொத்துக்களை கண்காணித்தல், பாதுகாத்தல், அதிகரித்து வரும் போட்டி விண்வெளி சூழலில் விழிப்புணர்வை பராமரிப்பதன் முக்கியத்துவம் ஆகியவை குறித்து இதில் விவாதங்கள் நடைபெற்றன.


SEA VIGIL-24 - சீ விஜில்-24:

  • இந்திய கடற்படை, கடலோர பாதுகாப்பு பயிற்சியின் நான்காவது பயிற்சியான 'சீ விஜில்-24,  என்ற கடல் கண்காணிப்பு-24 பயிற்சியை  'நவம்பர் 20, 21 ஆகிய இரண்டு நாட்கள் நடத்த உள்ளது. 06 அமைச்சகங்கள், 21 அமைப்புகள் மற்றும் முகமைகளின் பங்கேற்புடன் இப்பயிற்சி நடைபெறவுள்ளது. இந்த ஆண்டு, தேசிய பாதுகாப்பு குழும செயலக அதிகாரிகள், மாநில கடல்பகுதி காவல் துறை, கடலோர காவல்படை, சுங்கத்துறை, மீன்வளத்துறை போன்றவற்றின் பணியாளர்களுடன், இந்திய கடற்படை தலைமையிலான குழுக்களின் ஒரு பகுதியாக பங்கேற்பார்கள்.
  • துறைமுகங்கள், எண்ணெய் கிணறுகள், கடலோர மக்கள் உள்ளிட்ட முக்கிய கடலோர உள்கட்டமைப்பு போன்ற கடலோர சொத்துக்களின் பாதுகாப்பை வலுப்படுத்துவதில் இந்த பயிற்சி கவனம் செலுத்தும். 
  • இப்பயிற்சியின் நோக்கங்களில் ஒன்று கடல்சார் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை கடலோர சமூகத்தினரிடையே ஏற்படுத்துவதாகும் .
  • 26/11 மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிந்தைய கடலோரப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை சரிபார்க்கவும் மேம்படுத்தவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • அனைத்து கடல்சார் பாதுகாப்பு முகமைகளின் தற்போதைய தயார்நிலையை மதிப்பிடுவதற்கும், அவற்றின் பலம் மற்றும் பலவீனங்களைக் கண்டறிந்து, நாட்டின் ஒட்டுமொத்த கடல்சார் பாதுகாப்பு கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும் இந்தப் பயிற்சி குறிப்பிடத்தக்க வாய்ப்பை வழங்குகிறது. 


டிஆர்டிஓ முதல் நீண்ட தூர நில தாக்குதல் ஏவுகணை சோதனை வெற்றி:

  • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) நவம்பர் 12, 2024 அன்று ஒடிசா கடற்கரையின் சந்திபூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை தளத்திலிருந்து நீண்ட தூர நில தாக்குதல் ஏவுகணையின் Long Range Land Attack Cruise Missile (LRLACM) முதல் சோதனையை மொபைல் லாஞ்சர் மூலம் வெற்றிகரமாக நடத்தியது. 
  • ஏவுகணையின் செயல்திறன் ரேடார், எலக்ட்ரோ ஆப்டிகல் டிராக்கிங் சிஸ்டம் மற்றும் ஐ.டி.ஆரால் பல்வேறு இடங்களில் நிறுவப்பட்ட டெலிமெட்ரி போன்ற பல வரம்பு சென்சார்களால் கண்காணிக்கப்பட்டது.
  • இந்த ஏவுகணை பெங்களூருவில் உள்ள ஏரோநாட்டிகல் டெவலப்மென்ட் நிறுவனத்தால் பிற டி.ஆர்.டி.ஓ ஆய்வகங்கள் மற்றும் இந்திய தொழில்துறைகளின் பங்களிப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது. 
  • ஹைதராபாத்தில் உள்ள பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் மற்றும் பெங்களூருவில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் ஆகியவை எல்.ஆர்.எல்.ஏ.சி.எம்-மின் இரண்டு வளர்ச்சி மற்றும் உற்பத்தி-பங்குதாரர்களாக உள்ளன. 



OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN OUR TELEGRAM CHANNEL :




FOLLOWS ON:

  • Email: tnpscpayilagam@gmail.com

 

If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!



Post a Comment

0Comments

Post a Comment (0)