CURRENT AFFAIRS IN TAMIL NOVEMBER 2024 (14.11.2024)

TNPSC PAYILAGAM
By -
0
CURRENT AFFAIRS IN TAMIL NOVEMBER 2024 (14.11.2024)


காமன்வெல்த் ஆஃப் டொமினிகா தனது உயரிய தேசிய விருதான டொமினிகா விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது:

  • COVID-19 தொற்றின்போது கடந்த 2021, பிப்ரவரியில் இந்தியா, டொமினிகாவுக்கு 70 ஆயிரம் டோஸ் ஆஸ்ட்ராஜெனிகா தடுப்பூசியை அன்பளிப்பாக வழங்கியது. அதோடு, டொமினிகாவின் சுகாதரம், கல்வி, தகவல் தொழில்நுட்பம் ஆகியவற்றின் வளர்ச்சிக்கும் இந்தியா உதவிகளை அளித்தது.
  • இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தங்கள் நாட்டின் உயரிய விருதை பிரதமர் மோடிக்கு வழங்க உள்ளதாக டொமினிகா அறிவித்துள்ளது.


மாலத்தீவில் நடைபெற்ற 15வது உலக ஆணழகன் போட்டி 2024:

  • 60 கிலோ எடை பிரிவில் சேலத்தை சேர்ந்த ஜெயபிரகாஷ் 4 ஆவது இடத்தையும்
  • 80 கிலோ எடை பிரிவில் கன்னியாகுமரியை சேர்ந்த ஜிஜோ மரியோ வெள்ளி பதக்கமும் 
  • 90 கிலோ எடை பிரிவில் நாமக்கலை சேர்ந்த சரவணன் தங்கப் பதக்கமும் வென்றனர்.


சர்க்கரை நோய் குணப்​படுத்த முடியும் - ஆராய்ச்​சியில் சீனா வெற்றி:

  • சர்க்கரை நோய் தொடர்பான ஆராய்ச்​சியில் சீனா முக்கியமான ஒரு மைல்கல்லை எட்டி​யுள்ளது. இதுவரை ‘சர்க்கரை நோயைக் கட்டுப்​படுத்த முடியும்; ஆனால், குணப்​படுத்த முடியாது’ என்று இருந்த நிலைமையை சீனா மாற்றிக்​காட்​டி​யுள்ளது. 
  • அதாவது, ‘ஸ்டெம் செல் சிகிச்சை’ (Stem Cell Therapy) மூலம் சர்க்கரை நோயைக் குணப்​படுத்த முடியும் என்று இதுவரை விலங்​கினங்​களில் மட்டுமே உறுதி​செய்​யப்​பட்​டிருந்த ஆய்வை முதன்​முறையாக மனிதர்​களிடம் மேற்கொண்டு வெற்றி கண்டுள்ளது. 
  • இது சர்க்கரை நோய்க்கான சிகிச்​சையில் புதியதொரு திருப்பு​முனையை ஏற்படுத்​தி​ உள்ளது. சீனாவின் இந்தச் சாதனைதான் இப்போது உலகளாவிய மருத்​துவர்​களிடம் பேசுபொருளாகி​யுள்​ளது.


OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN OUR TELEGRAM CHANNEL :




FOLLOWS ON:

  • Email: tnpscpayilagam@gmail.com

 

If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!





Post a Comment

0Comments

Post a Comment (0)