CURRENT AFFAIRS IN TAMIL NOVEMBER 2024 (19.11.2024 )

TNPSC PAYILAGAM
By -
0

CURRENT AFFAIRS IN TAMIL NOVEMBER 2024 (19.11.2024 )


இஸ்ரோவின் GSAT-N2 செயற்கைக்கோள்:

  • இஸ்ரோவின் GSAT-N2 செயற்கைக்கோளை ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளது. 
  • ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 (Falcon 9_ ராக்கெட் மூலம் இஸ்ரோவின் தகவல் தொடர்பு செயற்கைக்கோள் ஜிசாட் – என்2 விண்ணில் ஏவப்பட்டுள்ளது. இந்திய நேரப்படி  (நவ.19) அதிகாலை 12.01 மணியளவில் செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது. இந்த செயற்கைக்கோள் 4700 கிலோ எடை கொண்டது என்பது கவனிக்கத்தக்கது.
  • இஸ்ரோவுக்கும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துக்கும் இடையே வர்த்தக ரீதியில் செயற்கைக்கோள் ஏவப்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
  • இஸ்ரோவின் வர்த்தக பிரிவான நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட்டின் தலைவரும், நிர்வாக மேலாளருமான ராதாகிருஷ்ணன் துரைராஜ், ஜிசாட்-என் 2 செயற்கைக்கோள் அதன் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டதை உறுதி செய்தார்.
  • GSAT N2 செயற்கைக்கோளில் 4,700 கிலோ எடையுள்ள பெரிய பேலோடுகள் உள்ளதால் அவற்றை விண்ணில் செலுத்துவதற்கு இஸ்ரோ நிறுவனத்திடம் தற்போது ராக்கெட்டுகள் இல்லை. இஸ்ரோவின் பாகுபலி என செல்லமாக அழைக்கப்படும் எல்விஎம்-3 ஏவுகணை 4,000 கிலோ எடையுள்ள பேலோடுகள் வரை சுமந்து செல்லும் திறன் கொண்டது.இதன் காரணமாகதான் இஸ்ரோ எலன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் உதவியை நாடியது.


ஜி20 உச்சி மாநாடு 2024 :

  • ஜி20 உச்சி மாநாடு 18.11.2024 பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் தொடங்கியது.
  • முதல் நாளில் பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களை வரவேற்றார்.
  • காலையில் நடந்த அமர்வில், வறுமையை ஒழிப்பது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. மாலையில், .நா. சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளில் சீர்திருத்தங்களை மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
  • முதல் நாள் அமர்வில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றனர்


GREEN WORLD AWARDS 2024 - பசுமை உலக சுற்றுச்சூழல் விருது 2024

  • நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் உள்ள கோல் இந்தியா லிமிடெட் (Coal India Limited (CIL)) , CSR பிரிவில் (எரிபொருள், சக்தி மற்றும் ஆற்றல்) மதிப்பிற்குரிய பசுமை உலக சுற்றுச்சூழல் விருதுடன் , பசுமை உலக தூதர் என்ற புகழ்பெற்ற பட்டத்துடன் வழங்கப்பட்டுள்ளது.
  • நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் கோல் இந்தியா லிமிடெட் (Coal India Limited (CIL)) நிறுவனத்திற்கு பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு பிரிவில் மதிப்புமிக்க பசுமை உலக சுற்றுச்சூழல் விருது வழங்கப்பட்டது. 
  • சமூக பொறுப்புணர்வுத் துறையில் முன்மாதிரியாக, தலசீமியா நோயாளிக்கு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை எனப்படும் ஸ்டெம் செல் மாற்று சிகிச்சை அளிக்க உதவியதற்காக இந்திய நிலக்கரி  நிறுவனத்திற்கு இந்த மதிப்புமிக்க சர்வதேச விருது வழங்கப்பட்டது.
  • 2024, நவம்பர் 18 அன்று லண்டனில் உள்ள கென்சிங்டன் அரண்மனையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் இந்திய நிலக்கரி  நிறுவன இயக்குநர் (பணியாளர் / ஐஆர்), திரு  வினய் ரஞ்சன், பசுமை உலக விருதுகள் 2024-ஐப் பெற்றார். இந்த விருது தி கிரீன் ஆர்கனிசேஷனால் வழங்கப்பட்டது.
  • இந்தியாவின் ஒட்டுமொத்த நிலக்கரியில் 80% க்கும் அதிகமான நிலக்கரியை கோல் இந்தியா உற்பத்தி செய்கிறது மற்றும் நாட்டின் மொத்த நிலக்கரி அடிப்படையிலான மின் உற்பத்தியில் 70% பங்களிக்கிறது. மொத்த மின் உற்பத்தியில் 55% பங்களிப்பு செய்வதுடன், நாட்டின் அடிப்படை வர்த்தக சக்தித் தேவைகளில் 40%-ஐ இந்நிறுவனம் பூர்த்தி செய்கிறது.


இலங்கையின் புதிய பிரதமராக ஹரிணி அமரசூரிய பதவியேற்றார்:

  • இலங்கையில் கடந்த 14-ம் தேதி நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிபர் அலூ குமார திசாநாயக்கவின் என்பிபி கூட்டணி 159 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. 
  • இந்நிலையில், இலங்கையின் புதிய பிரதமர, புதிய அமைச்சர்களை அதிபர் திசாநாயக்க நேற்று அறிவித்தார். 
  • கடந்த செப்டம்பரில் இடைக்கால பிரதமராக நியமிக்கப்பட்ட ஹரிணி அமரசூர்ய (54)  மீண்டும் பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். கல்வி, தொழிற்கல்வி, உயர்கல்வி ஆகிய துறைகள் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன. 
  • அதிபர் அனுர குமார திசாநாயக்க, நிதி, பாதுகாப்பு, டிஜிட்டல் பொருளாதாரம் ஆகிய துறைகளை தன்வசம் வைத்துள்ளார். 
  • அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள மாத்தறையை சேர்ந்த சரோஜா சாவித்திரி போல்ராஜ் (மகளிர் நலம்), ராமலிங்கம் சந்திரசேகர் (கடல் வளம்) ஆகிய 2 பேரும் தமிழர்கள். அமைச்சரவையில் அதிபர், பிரதமர் உட்பட 22 பேர் உள்ளனர்.


OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN OUR TELEGRAM CHANNEL :




FOLLOWS ON:

  • Email: tnpscpayilagam@gmail.com

 

If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!

Post a Comment

0Comments

Post a Comment (0)