CURRENT AFFAIRS IN TAMIL NOVEMBER 2024 ( 26.11.2024 )

TNPSC PAYILAGAM
By -
0

CURRENT AFFAIRS IN TAMIL NOVEMBER 2024 ( 26.11.2024 )


அரசியல் சாசன தினம் 2024:

  • அரசியலமைப்பு சட்ட தினத்தையொட்டி மை பாரத் (நேரு இளைஞர் மன்றம்) தமிழ்நாடு பிரிவு சென்னை புளியந்தோப்பில் உள்ள டான் பாஸ்கோ தொழில்நுட்ப வளாகத்தில் 'எனது அரசியலமைப்பு எனது பெருமை' என்ற பேரணியுடன்  (26 நவம்பர் 2024) கொண்டாடியது.  
  • இதில் பள்ளி மாணவர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். பல்வேறு துறையைச் சேர்ந்த பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.


பேரிடர் தணிவிப்பு திட்டம்: ரூ.1115.67 கோடிக்கு ஒப்புதல்:

  • மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான உயர்நிலைக் குழு, பல்வேறு மாநிலங்களுக்கான பேரிடர் தணிவிப்பு மற்றும் திறன் கட்டமைப்பு திட்டங்களுக்காக, ரூ.1115.67 கோடிக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதில், தமிழகத்துக்கு ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • அருணாச்சலப் பிரதேசம், அசாம், இமாச்சலப் பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா, உத்தராகண்ட், கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, மேற்கு வங்கம் ஆகிய 15 மாநிலங்களில் மொத்தம் ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் தேசிய நிலச்சரிவு ஏற்படும் அபாய குறைப்புத் திட்டத்துக்கு இந்த உயர்நிலைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. 
  • உத்தராகண்ட் மாநிலத்துக்கு ரூ.139 கோடி, இமாச்சலப் பிரதேசத்துக்கு ரூ.139 கோடி, எட்டு வடகிழக்கு மாநிலங்களுக்கு ரூ.378 கோடி, மகாராஷ்டிராவுக்கு ரூ.100 கோடி, கர்நாடகத்துக்கு ரூ.72 கோடி, கேரளாவுக்கு ரூ.72 கோடி, தமிழகத்துக்கு ரூ.50 கோடி, மேற்கு வங்கத்துக்கு ரூ.50 கோடி வழங்க ஒப்புதல் அளித்தது.


பான் அட்டை 2.0-க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்:

  • வருமான வரித்துறை வழங்கும் பான் அட்டையை க்யூ.ஆர்.கோடு உட்பட இதர பாதுகாப்பு அம்சங்களுடன் ரூ.1,435 கோடியில் புதுப்பிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • நாட்டில் தற்போது 78 கோடி பேரிடம் பான் அட்டை உள்ளது. இதில் உள்ள 10 இலக்க அடையாள எண் மூலம், ஒருவரின் பண பரிவர்த்தனை வருமானவரித் துறையுடன் இணைக்கப்படுகிறது. தற்போது இந்த அட்டையை ரூ.1,435 கோடி செலவில் புதுப்பிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 
  • இந்தத் திட்டத்தின் கீழ் தற்போதுள்ள பழைய பான் அட்டைகள் மற்றும் புது பான் அட்டைகள் க்யூ.ஆர் கோடு வசதியுடன் மேம்படுத்தப்படும். ஏற்கெனவே பான் எண் வைத்திருப்பவர்களுக்கு பான் எண் மாறாது, பான் அட்டை மட்டும் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் மேம்படுத்தப்படும்.
  • க்யூ.ஆர் கோடு தவிர , பான் 2.0 திட்டத்தில் "கட்டாய பான் தரவு பெட்டக அமைப்புடன்" ஒருங்கிணைந்த இணையதளம் உருவாக்கப்படும். 


எம்-பாக்ஸ் பொது சுகாதார அவசரநிலை - WHO :

  • எம்.பாக்ஸ் எனப்படும் குரங்கு அம்மை தொற்று உலகளாவிய பிரச்னையாக உருவெடுத்துள்ளதால், உலக சுகாதார நிறுவனம் சர்வதேச அவசர நிலையை  (Public Health Emergency of International Concern (PHEIC)) பிறப்பித்துள்ளது. ஆப்பிரிக்க நாடான காங்கோவில் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதாகவும், 517 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியானது.
  • குரங்கம்மை(M-Pox) என்றால் என்ன? : சின்னம்மையை ஏற்படுத்தும் வைரஸின் குடும்பத்தில் உள்ள மற்றொரு வகை வைரஸே குரங்கம்மையைத் தோற்றுவிக்கிறது. ஆனால் அது அவ்வளவு ஆபத்தானது அல்லஆரம்பத்தில் விலங்குகளிடம் இருந்து இந்தத் தொற்று மனிதர்களிடம் பரவியது. தற்போது இது மனிதரிடம் இருந்து மற்றொரு மனிதருக்கு பரவுகிறது.
  • காய்ச்சல், தலைவலி, வீக்கம், முதுகுவலி, தசைவலி போன்றவை ஆரம்பக்கால நோய் அறிகுறிகளாகும்.   
  • இரண்டு வகையான குரங்கம்மைகள் உள்ளன. க்ளாட் 1 என்பது மிகவும் தீவிரமான தொற்று. மற்றொரு வகை க்ளாட் 2 ஆகும். 
  • க்ளாட் 1 வகை வைரஸ், காங்கோவில் பல ஆண்டுக் காலமாக இந்தத் தொற்றை ஏற்படுத்தி வருகிறது. க்ளாட்-1 வைரஸின் சில வகைகள் இளைஞர்களைக் காட்டிலும் குழந்தைகளை அதிகமாகத் தாக்குகிறது. 
  • கடந்த ஆண்டு பாதிப்புக்கு உள்ளான நபர்களுக்கு க்ளாட் 1பி (Clade 1b) என்ற புதிய வகை வைரஸால் குரங்கம்மை(M-Pox) ஏற்பட்டுள்ளது. இது அதிக அளவில் ஆபத்தை ஏற்படுத்துகிறது. 
  • கடந்த 2023ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் நோய்த் தொற்று 160% வரை அதிகரித்துள்ளது, இறப்பு விகிதமும் 19% வரை அதிகரித்துள்ளது.
  • இதற்கு முன்பு 2022ஆம் ஆண்டு க்ளாட்-2 வகையால் ஏற்பட்ட குரங்கம்மை(M-Pox) தொற்றைத் தொடர்ந்து, பொது சுகாதார அவசர நிலை அறிவிக்கப்பட்டது.

உலகளாவிய புவிவெளிசார் தகவல் மேலாண்மை மாநாடு 2024 : 

  • புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் 26.11.2024 தொடங்கப்பட்ட நீடித்த வளர்ச்சிக்கான புவி-அடையாள தரவு பொருளாதாரம் குறித்த (The UN-GGIM Asia-Pacific Conference )இம்மாநாடு, ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்தைச் சேர்ந்த முன்னணி நிபுணர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் புவிசார் வல்லுநர்களை ஒன்றிணைத்தது. இதில் ஐரோப்பா, அமெரிக்கா, அரபு நாடுகள் மற்றும் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த நிபுணர்களுடன் கூட்டு அமர்வு இடம்பெற்றது.
  • 30 நாடுகளைச் சேர்ந்த சுமார் 90 சர்வதேச பிரதிநிதிகளுடன், இந்தியாவிலிருந்து 120 பிரதிநிதிகளுடன், இது அறிவைப் பகிர்வதற்கும், புவிசார் தொழில்நுட்பத்தில் முன்னேற்றங்களைப் பற்றி விவாதிப்பதற்கும், உறுப்பு நாடுகள் மற்றும் ஐ.நா- ஆசிய பசிபிக் பிராந்தியத்திற்கான உலகளாவிய புவிசார் தகவல் மேலாண்மையின் பிற பிராந்திய குழுக்களுக்கு இடையே ஒத்துழைப்பை வளர்ப்பதற்கும் ஒரு தளத்தை வழங்கும்.

உலகின் முதல் இணை செயற்கைக்கோள்களை ஏவும் திட்டம்:

  • சூரியனைப் பற்றிய ஆய்வுக்காக, ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் உருவாக்கிய இணை செயற்கைக்கோள்களை, பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் டிசம்பர் 4-ம் தேதி இஸ்ரோ விண்ணுக்கு அனுப்புகிறது.
  • சூரியனின் ஒளிவட்ட பகுதியை ஆய்வு செய்ய இணை செயற்கைக்கோள்களை ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் உருவாக்கியுள்ளது. இதற்கு புரோபா-3 திட்டம் என பெயரிடப்பட்டுள்ளது. 
  • இதில் இரண்டு செயற்கைக்கோள்கள் ஒன்றுக்கொன்று இணையாக 150 மீட்டர் தூரத்தில் நாள் ஒன்றுக்கு 6 மணி நேரம் பறந்து சூரியனின் ஒளிவட்டப் பகுதியை ஆய்வு செய்யும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்படி இரு செயற்கைக்கோள்கள் இணையாகப் பறந்து ஆய்வு செய்ய அதில் லேசர் சோன் மற்றும் ரெப்லெக்டர் கருவிகள் உள்ளன.


OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN OUR TELEGRAM CHANNEL :




FOLLOWS ON:

  • Email: tnpscpayilagam@gmail.com

 

If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!





Post a Comment

0Comments

Post a Comment (0)