CURRENT AFFAIRS IN TAMIL NOVEMBER 2024 [ 9.11.2024 to 11.11.2024 ]

TNPSC PAYILAGAM
By -
0
CURRENT AFFAIRS IN TAMIL NOVEMBER 2024


இந்தியா இரண்டாம் இடம் :

  • இந்தியப் பங்குச் சந்தையில் நடப்புஆண்டில் இதுவரையில் ஐபிஓ மூலம் நிறுவனங்கள் ரூ.1.19 லட்சம் கோடி நிதி திரட்டியுள்ளன.
  • இந்நிலையில், ஐபிஓ மூலம் அதிகம் நிதி திரட்டிய பங்குச் சந்தைகள் வரிசையில் உலக அளவில் இந்தியா இரண்டாம் இடம் பிடித்துள்ளது. ரூ.2.20 லட்சம் கோடி நிதி திரட்டி அமெரிக்கா முதல் இடத்திலும், ரூ.89,800 கோடிநிதி திரட்டி சீனா மூன்றாவது இடத்திலும் உள்ளன.

கேஎம்டி-2020-பிஎல்ஜி-0414:

  • பூமியைப் போலவே, மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ற தன்மையுள்ள புதியகிரகத்தை வானியல் விஞ்ஞானிகள் அண்மையில் கண்டறிந்துள்ளனர். சுமார் 4 ஆயிரம் ஒளிஆண்டு தூரத்தில் இந்த கிரகம் அமைந்துள்ளது. பூமியின் எடையை இது ஒத்திருப்பதாகத் தெரிகிறது.
  • அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்திலுள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் இந்த கிரகத்தை கண்டறிந்துள்ளனர்.
  • ஹவாயிலுள்ள கெக் தொலைநோக்கி மூலம் இந்த கிரகம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த கிரகத்துக்கு கேஎம்டி-2020-பிஎல்ஜி-0414 என்று பெயர் வைத்துள்ளனர். சூரியனிலிருந்து பூமி இருக்கும் தூரத்தை போல 2 மடங்கு தூரத்தில் இந்த கிரகம் அமைந்துள்ளது.

கர்நாடகாவில் அரசு அலுவலகங்களில் புகையிலைக்கு தடை:

  • பெங்களூரு: கர்நாடக அரசின் பணியாளர் நலன் மற்றும் நிர்வாக சீர்திருத்த இயக்குநரகம் வெளியிட்டுள்ள‌ சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
  • கர்நாடக அரசு ஊழியர்கள் உடல் நலம், பொதுமக்களின் ஆரோக்கியம் ஆகியவற்றின் அடிப்படையில் அரசு அலுவலகங்கள், அலுவலக வளாகங்களில் புகைப்பிடித்தல், புகையிலை பொருட்களை உபயோகித்தல் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இதேபோல அலுவலகங்களில் போதை தரக்கூடிய எந்தப் பொருளையும் உட்கொள்வதும் தடை செய்யப்படுகிறது.

டபிள்யூடிஏ சாம்பியன் பட்டம் 2024:

  • மகளிருக்கான டபிள்யூடிஏ ஃபைனல்ஸ் டென்னிஸ் போட்டியின் ஒற்றையா் பிரிவில், அமெரிக்காவின் கோகோ கௌஃப் சாம்பியன் பட்டம் வென்றாா். இந்தப் போட்டியில் அவா் கோப்பை வென்றது இதுவே முதல் முறையாகும்.
  • உலகின் 3-ஆம் நிலை வீராங்கனையான அவா்,  நடைபெற்ற இறுதிச்சுற்றில் 3-6, 6-4, 7-6 (7/2) என்ற செட்களில், உலகின் 7-ஆம் நிலை வீராங்கனையும், நடப்பு ஒலிம்பிக் சாம்பியனுமான சீனாவின் ஜெங் கின்வென்னை வீழ்த்தி வாகை சூடினாா்.

ஸ்டூடண்ட் டைரக்ட் ஸ்ட்ரீம்' திட்டம் -  கைவிடுவதாக கனடா அரசு அறிவித்துள்ளது:

  • கனடாவில் நடைமுறையில் இருந்த 'ஸ்டூடண்ட் டைரக்ட் ஸ்ட்ரீம் (SDS) விசா திட்டத்தைக் கைவிடுவதாக கனடா அரசு அறிவித்துள்ளது. கனடா அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இதுகுறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வெளிநாட்டு மாணவர்களுக்கான விரைவு விசா வழங்கும் நடைமுறையை உடனடியாக நிறுத்துவதாக கனடா அரசு அறிவித்துள்ளது.
  • கனடாவில் SDS என்ற 'ஸ்டூடண்ட் டைரக்ட் ஸ்ட்ரீம்' திட்டம் கடந்த 2018-ஆம் ஆண்டு, கல்லூரி படிப்பை மேற்கொள்ள கனடாவில் விண்ணப்பிக்கும் வெளிநாட்டு மாணவர்களின் விண்ணப்பங்களை விரைவாக பரிசீலனை செய்ய உருவாக்கப்பட்ட திட்டம். இந்த திட்டத்தின் மூலமாக இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் பயன்பெற்று வந்தனர்.
  • கனடாவில் கடந்த 6 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த "ஸ்டூடண்ட் டைரக்ட் ஸ்ட்ரீம்" (SDS) மற்றும் NSE விசா திட்டங்களை நவம்பர் 8 ஆம் தேதி 2 மணியுடன் கைவிடுவதாக கனடா அரசு அறிவித்துள்ளது.

இந்தியா-ஆஸ்திரேலியா கூட்டு இராணுவப் பயிற்சி 2024:

  • இந்தியா-ஆஸ்திரேலியா கூட்டு இராணுவப் பயிற்சியின் 3-வது பதிப்பு ஆஸ்த்ராஹிந்த் மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள வெளிநாட்டு பயிற்சி முனையத்தில் தொடங்கியது.


OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN OUR TELEGRAM CHANNEL :




FOLLOWS ON:

  • Email: tnpscpayilagam@gmail.com

 

If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!




Post a Comment

0Comments

Post a Comment (0)