தமிழ் நடப்பு விவகாரங்கள்- நவம்பர் 2024 :
முதல்ஆசிய பௌத்த உச்சி மாநாடு 2024:
- இந்திய அரசின் கலாச்சார அமைச்சகம், சர்வதேச பௌத்த கூட்டமைப்புடன் (IBC) இணைந்து முதல் ஆசிய புத்த உச்சி மாநாட்டை (ABS) 2024 நவம்பர் 5 - 6தேதிகளில் புதுதில்லியில் நடத்துகிறது.
- KEY POINTS : First Asian Buddhist Summit 2024
19 இந்திய நிறுவனங்களும்அமெரிக்க நிதித்துறை பொருளாதார தடை விதித்தது:
- ரஷியாவுக்கு போருக்கு தேவையான நவீன தொழில்நுட்பத்தையும், சாதனங்களையும் அளித்ததாக நேற்று 400 க்கும் மேற்பட்ட தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக அமெரிக்க நிதித்துறை பொருளாதார தடை விதித்தது.
- தடை விதிக்கப்பட்ட நிறுவனங்களில், அபார் டெக்னாலஜிஸ், டென்வாஸ் சர்வீசஸ், கேலக்சி பியரிங்ஸ், ஆர்பிட் பின்டிரேட், குஷ்பு ஹோனிங், லோகேஷ் மெஷின்ஸ், ஆர்.ஆர்.ஜி.என்ஜினீயரிங் டெக்னாலஜிஸ், ஷார்ப்லைன் ஆட்டோமேஷன், ஸ்ரீஜி இம்பெக்ஸ், ஷ்ரேயா லைப் சயின்ஸ் உள்பட 19 இந்திய நிறுவனங்களும் அடங்கும். இந்த பட்டியலில், சீனா, சுவிட்சர்லாந்து, தாய்லாந்து, துருக்கி ஆகிய நாடுகளின் நிறுவனங்களும் இடம்பெற்றுள்ளன.
காஷ்மீர் சபாநாயகராக அப்துல் ரஹீம் ராதர் தேர்வு:
- ஜம்மு – காஷ்மீரை யூனியன் பிரதேசமாக அறிவித்து 5 ஆண்டுகளுக்கு பிறகு, கடந்த மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இதில், தேசிய மாநாட்டு கட்சி-காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று யூனியன் பிரதேசத்தின் முதல் அரசை அமைத்துள்ளது.
- 04.11.2024 தொடங்கிய ஜம்மு – காஷ்மீர் சட்டசபையின் முதல் கூட்டத்தொரில் , சட்டசபை சபாநாயகர் பதவிக்கு தேசிய மாநாட்டு கட்சியின் மூத்த தலைவரும், சரார்-இ-ஷரீப்பின் 7 முறை எம்.எல்.ஏ.வுமான அப்துல் ரஹீம் ராதர் பெயரை விவசாயத்துறை அமைச்சர் ஜாவத் அஹ்மத் தார் முன்மொழிந்தார்.
- காஷ்மீர் எதிர்க்கட்சியான பாஜக சார்பில் சபாநாயகர் பதவிக்கு வேட்பாளர் நிறுத்தப்படாத நிலையில், அப்துல் ரஹீம் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் இந்திய தூதரகம் திறப்பு:
- ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் புதிதாக துவக்கப்பட்டுள்ள இந்திய தூதரகத்தை மத்திய அமைச்சர் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் திறந்துவைத்தார்.
- சிட்னி, மெல்போர்ன், பெர்த் ஆகிய இடங்களில் இந்திய தூதரகங்கள் உள்ள நிலையில் நான்காவதாக பிரிஸ்பேன் நகரில் துவக்கப்பட்டுள்ளது.
‘தீபம்-2’ எனும் இலவச கேஸ் சிலிண்டர் வழங்கும் திட்டம்:
- ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ‘தீபம்-2’ எனும் இலவச கேஸ் சிலிண்டர் வழங்கும் திட்டத்தை துவங்கி வைத்தார்.
- ஆந்திர சட்டமன்ற தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக இலவச கேஸ் வழங்கும் திட்டத்தை தெலுங்கு தேசம் கட்சி அறிவித்தது.
- ‘தீபம்-2’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின் மூலம் நான்கு மாதங்களுக்கு ஒருமுறை அதாவது ஆண்டுக்கு மூன்று இலவச சிலிண்டர்களை பயனாளர்களுக்கு வழங்க மாநில அரசு முன்வந்துள்ளது.
ஜிஎஸ்டி அக்டோபர் மாதத்தில் ரூ.1.87 லட்சம் கோடி :
- அக்டோபர் மாதத்தில் மட்டும் ரூ.1.87 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலாகி உள்ளதாக மத்திய நிதித்துறை தெரிவித்து உள்ளது. இது கடந்த மாதத்தை விட 9 சதவிகிதம் அதிகம் என்று குறிப்பிட்டுள்ளது- அதாவது கடந்த செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் அக்டோபர் மாத ஜிஎஸ்டி வசூல் 8.9 சதவீதம் அதிகம்.
- இதுதொடர்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, : நடப்பு ஆண்டின் அக்டோபர் மாதத்தில் 1 லட்சத்து 87 ஆயிரத்து 346 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரி வசூலாகியுள்ளது. இது, 8வது முறையாக மாதந்திர ஜிஎஸ்டி வரி வசூல்ரூ.1.70 லட்சத்திற்கு அதிகமாக உள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், அக்டோபர் மாத ஜிஎஸ்டி வசூல் 8.9 சதவீதம் அதிகமாக உள்ளது .
- இதுவரை 2024ல், மொத்த ஜிஎஸ்டி வசூல் 9.4 சதவீதம் அதிகரித்து, ரூ.12.74 லட்சம் கோடியை எட்டியுள்ளது, இது 2023ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் வசூலான ரூ.11.64 லட்சம் கோடியுடன் ஒப்பிடுகையில். 2.10 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
- 2023-24 நிதியாண்டில், மொத்த ஜிஎஸ்டி வசூல் ரூ.20.18 லட்சம் கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது, இது முந்தைய நிதியாண்டை விட 11.7 சதவீதம் அதிகமாகும்.
- மார்ச் 2024 இல் முடிவடைந்த நிதியாண்டின் சராசரி மாத வசூல் ரூ.1.68 லட்சம் கோடியாக இருந்தது, இது முந்தைய ஆண்டின் சராசரியான ரூ.1.5 லட்சம் கோடியைத் தாண்டியது.
உள்நாட்டு தங்கத்தின் கையிருப்பு ரிசர்வ் வங்கி அறிக்கை:
- இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) (ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் )செப்டம்பர் 30 நிலவரப்படி 854.73 மெட்ரிக் டன் தங்கத்தை வைத்துள்ளது, அதில் 510.46 மெட்ரிக் டன்கள் உள்நாட்டில் கையிருப்பில் உள்ளது.
- 324.01 மெட்ரிக் டன் தங்கம் பாங்க் ஆஃப் இங்கிலாந்து மற்றும் பேங்க் ஆஃப் இன்டர்நேஷனல் செட்டில்மென்ட்ஸ் (பிஐஎஸ்) ஆகியவற்றில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள நிலையில், அந்நிய செலாவணி கையிருப்பில் பாதி, அதாவது 20.26 மெட்ரிக் டன் தங்கம் வைப்புத் தொகையாக உள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி தனது மேலாண்மை ஆண்டு அறிக்கை: ஏப்ரல்-செப்டம்பர் 2024ல் குறிப்பிட்டுள்ளது.
- மதிப்பு அடிப்படையில் (USD), மொத்த அன்னியச் செலாவணி கையிருப்பில் தங்கத்தின் பங்கு மார்ச் 2024 இறுதியில் 8.15 சதவீதத்திலிருந்து செப்டம்பர் இறுதியில் 9.32 சதவீதமாக அதிகரித்துள்ளது.
- அரையாண்டு காலத்தை ஒப்பிடுகையில், மார்ச் மாத இறுதியில் 646.42 பில்லியன் டாலராக இருந்த அந்நிய கையிருப்பு செப்டம்பரில் 705.78 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.
மயோனைஸ் சாஸ் உணவு வகைக்கு ஓராண்டு தடை:
- மோமோஸ், ஷவர்மா, சாண்ட்விச், பிரெட் ஆம்லெட் ஆகியவற்றுடன் கலக்கப்படும் மயோனைஸ் சாஸ் உணவு வகைக்கு தெலுங்கானா அரசு ஓராண்டு தடை விதித்துள்ளது.
- மோமோஸ் சாப்பிட்டதில் ஒரு பெண் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில் முட்டையில் இருந்து தயாரிக்கப்படும் மயோனைஸ் நச்சுத்தன்மை கொண்டதாகத் தெரியவந்துள்ளது.
- உணவு பதப்படுத்தும் போது முட்டையில் உள்ள நுண்ணயிர்களை அழிப்பதற்கான முறைகள் சரியாக மேற்கொள்ளப்படாததை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- முட்டை அடிப்படையிலான மயோனைஸ் சாப்பிட்டதில் உடல்நலக் கோளாறு ஏற்பட்டதாகப் புகார்கள் அதிகரித்ததாகக் கூறும் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கேரளாவைப் போன்று தெலுங்கானாவிலும் மயோனைஸ்க்கு தடை விதிக்க பரிந்துரைத்தனர்.
AI தயார்நிலைக் குறியீடு 2023-24:
- டிஜிட்டல் உள்கட்டமைப்பு, மனித மூலதனம், தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் மற்றும் சட்ட கட்டமைப்புகள் போன்ற காரணிகளைக் கருத்தில் கொண்டு, AI ஐப் பின்பற்றத் தயாராக உள்ள நாடுகளின் அடிப்படையில் IMF இன் AI தயார்நிலைக் குறியீடு வரிசைப்படுத்துகிறது.
கேந்திரிய கிரிமந்த்ரி தக்ஷத பதக்’ விருது 2024:
- தமிழக காவல்துறையினர் 8 பேருக்கு ‘திறன் பதக்க’ (‘கேந்திரிய கிரிமந்த்ரி தக்ஷத பதக்’ – ‘Kendriya Krimandri Dakshata Padak’ ) விருதை மத்திய உள்துறை அறிவித்து உள்ளது. நாடு முழுவதும் மொத்தம் 463 பேருக்கு 2024 ஆம் ஆண்டிற்கான மத்திய உள்துறை அமைச்சகத்தின் ‘திறன் பதக்க’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
- KENDRIYA KRIMANDRI DAKSHATA PADAK AWARD 2024
மத்திய பாதுகாப்புத் துறையின் புதிய செயலர் / NEW SECRETARY OF THE CENTRAL DEFENSE DEPARTMENT
- மத்திய பாதுகாப்புத்துறை புதிய செயலாளராக கேரளாவை சேர்ந்த ராஜேஷ் குமார் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று (நவம்பர் 1ந்தேதி) டெல்லி சவுத் பிளாக்கில் உள்ள பாதுகாப்புத்தறை அலுவலகத்தில் பாதுகாப்பு செயலாளராக பொறுப்பேற்றார்.
- ராஜேஷ் குமார் சிங் கேரள மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டவர். 1989ஆம் ஆண்டில் ஐஏஎஸ் தேர்ச்சி பெற்றவராவார். இதற்கு முன்பு மத்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகத்தின் கீழ் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறையின் செயலாளராக இருந்தார்.அதற்கும் முன்பாக மத்திய கால்நடைத்துறை மற்றும் பால்வளம், மீன் வளத்துறை செயலாளராகவும் இருந்தார்.
இந்தியாவின் முதல் அனலாக் விண்வெளிப் பயணம்
- விண்வெளிக்கும், வேற்று கிரகங்களுக்கும் மனிதர்களை அனுப்பும் பயணத்திட்டத்தின் ஒரு பகுதியாக, லடாக்கில் புதிய அனலாக் ஆய்வு மையத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் (இஸ்ரோ) தொடங்கியுள்ளது
- KEY POINTS : INDIA’S FIRST ANALOG SPACE MISSION
சட்டத்தின் ஆட்சிக் குறியீடு 2023 / WORLD JUSTICE PROJECT (WJP) RULE OF LAW INDEX 2023:
- உலக நீதித் திட்டம் (WJP) என்ற அமைப்பினால் வெளியிடப்பட்ட சமீபத்தியக் குறியீட்டு மதிப்பில் இடம் பெற்ற 142 நாடுகளில் இந்தியா 79வது இடத்தில் உள்ளது.
தமிழ்நாடு மாநில வாக்காளர் எண்ணிக்கை 2024 :
- தமிழ்நாட்டின் வாக்காளர் எண்ணிக்கையானது சுமார் நான்கு லட்சம் அதிகரித்து 6.27 கோடியாக உள்ளது.
- இவ்வாக்காளர் பட்டியலில் ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கை தொடர்ந்து 11 லட்சத்துக்கும் அதிகமாக உள்ளது.
- இதில் 8,964 வாக்காளர்கள் திருநர்கள் ஆவர்.
- மாநிலத்திலேயே செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் தான் அதிக வாக்காளர்கள் உள்ளனர். இதில் 3,38,183 ஆண்கள், 3,37,825 பெண்கள், 125 திருநர்கள் உட்பட 6,76,133 வாக்காளர்கள் உள்ளனர்.
- நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதியானது இந்த மாநிலத்திலேயே மிகக் குறைந்த வாக்காளர்களைக் கொண்டுள்ளது. இதில் 88,162 பெண்கள், 85,065 ஆண்கள் மற்றும் மூன்று திருநர்கள் உட்பட 1,73,230 வாக்காளர்கள் உள்ளனர்.
FOLLOWS ON:
Instagram : / tnpscpayilagam
Personal Twitter: / @TNPSCPayilagam) / X (twitter.com)
Facebook Page : / TNPSCPAYILAGAM
Email: tnpscpayilagam@gmail.com
Telegram: https://t.me/TNPSCPAYILAGAM
LinkedIN: TNPSC PAYILAGAM | LinkedIn
Youtube : https://www.youtube.com/@TNPSCPAYILAGAM
If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!