புரோபா-3 திட்டம் :
- சூரியனின் ஒளிவட்டம் பற்றிய ஆய்வில் ஐரோப்பிய விஞ்ஞானிகளுடன், இஸ்ரோ விஞ்ஞானிகளும் ஈடுபடவுள்ளனர்.
- சூரியனின் ஒளிவட்ட பகுதியை ஆய்வு செய்ய இணை செயற்கைக்கோள்களை ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் உருவாக்கியுள்ளது. இதற்கு புரோபா-3 திட்டம் என பெயரிடப்பட்டுள்ளது. இதில் இரண்டு செயற்கைக்கோள்கள் ஒன்றுக்கொன்று இணையாக 150 மீட்டர் தூரத்தில் நாள் ஒன்றுக்கு 6 மணி நேரம் பறந்து சூரியனின் ஒளிவட்டப் பகுதியை ஆய்வு செய்யும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்படி இரு செயற்கைக்கோள்கள் இணையாகப் பறந்து ஆய்வு செய்ய அதில் லேசர் சோன் மற்றும் ரெப்லெக்டர் கருவிகள் உள்ளன.
- இந்த இரு செயற்கைக்கோள்களையும், முதலில் 600 x 60530 கி.மீ உயரமுள்ள நீள்வட்ட சுற்றுவட்ட பாதையில் நிலை நிறத்தி, பின்னர் இணை சுற்றுவட்ட பாதையில் இஸ்ரோ நிலை நிறுத்தும். செயற்கைக்கோள்கள் இணை சுற்றுவட்டப் பாதையில் வந்தவுடன், மோதல் தவிர்ப்பு நடவடிக்கையை மேற்கொள்ளும். தரைக்கட்டுப்பாட்டு உதவி இல்லாமல், இந்த செயற்கைக்கோள்கள் மோதலை தவிர்த்து ஒன்றுக்கொனறு இணையாக பறப்பதை உறுதி செய்யும்.
- சூரியனை பற்றி ஆய்வுக்கு ஒரே செயற்கை கோளில் மிகப் பெரிய கருவிகளை பொருத்த முடியாது என்பதால், இந்த இணை செயற்கைகோள்கள் வடிமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் தொலை தூர பொருட்களில் இருந்து வரும் மங்கலான சிக்னல்களையும் விஞ்ஞானிகள் ஆய்வு செய்ய முடியும்.
- இதற்காக ஐரோப்பிய யூனியனின் புரோபா-3 விண்கலத்தை இஸ்ரோ பிஎஸ்எல்வி-எக்ஸ்எல் ராக்கெட் மூலம் டிசம்பர் மாதம் 2024 விண்ணுக்கு அனுப்புகிறது.
- இந்த புரோபா-3 விண்கலத்தில் இரண்டு செயற்கைக்கோள்கள் (Coronagraph Spacecraft (CSC) and the Occulter Spacecraft (OSC)) இருக்கும். இவை ஒன்றாக இணைந்து செயல்படும்.
- Coronagraph Spacecraft : 144 மீட்டர் நீளமுள்ள இந்த சாதனம் சோலார் கார்னோகிராப் என அழைக்கப்படும். இது சூரியனின் கரோனா என்ற பிரகாசமான ஒளிவட்ட பகுதியை ஆய்வு செய்ய உதவும்.
- Occulter Spacecraft என்பது 250 கிலோ எடையுள்ள மினி-செயற்கைக்கோள் ஆகும், இது லேசர் மற்றும் விஷுவல் மெட்ராலஜி ஆப்டிகல் ஹெட்களை வழங்குகிறது. இது 1.4 மீட்டர் விட்டம் கொண்ட வட்டு கொண்டுள்ளது. அதன் விளிம்பின் வடிவம் கரோனாகிராஃபினுள் நுழையும் சூரிய ஒளியின் அளவைக் குறைக்கும் நோக்கம் கொண்டது
- சூரியனை துல்லியமாக ஆய்வு செய்வதற்காக உலகில் முதல் முறையாக மேற்கொள்ளப்படும். இந்த ஆய்வில், சூரியனின் ஒளிவட்டப்பகுதி விரிவாக ஆய்வு செய்யப்படும். கடந்த 70 ஆண்டுகளாக ஒரு குறிப்பிட்ட நாடுகள் மட்டுமே விண்வெளி ஆய்வில் ஈடுபட்டன.
- 2023-ம் ஆண்டின் புதிய விண்வெளி கொள்கை மூலம் விண்வெளித் துறை, பொதுத்துறைக்கு திறந்துவிடப்பட்டுள்ளது. இது தொழில்துறையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை ஏற்படுத்தும்.
- 2035-ம் ஆண்டுக்குள் விண்வெளி மையத்தை அமைக்கவும், 2040-ம் ஆண்டுக்குள் நிலவில் முதல் இந்திய வீரரை தரையிறக்கவும் இந்தியா திட்டமிட்டுள்ளது.
- தற்போது நாட்டில் உள்ள பெரும்பாலான துறைகள் விண்வெளி தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றன.
- நேவிகேஷன் தகவல்களை அளித்தல், செயற்கைகோள் படங்களை அனுப்புதல் மூலம் ஸ்மார்ட் நகரங்கள் உருவாக்குதை விண்வெளி தொழில்நுட்பம் ஊக்குவிக்கிறது.
KEY NOTES :
- Objective: The mission aims to study the solar corona in detail.
- Collaboration: European Space Agency (ESA) and ISRO are collaborating on this mission.
- Launch: Scheduled for December 2024 using ISRO’s PSLV-XL rocket.
- Components: Includes two satellites, Coronagraph Spacecraft (CSC) and Occulter Spacecraft (OSC), working together to reduce sunlight interference and study the sun’s corona accurately.