ஹரியானா மாநிலத்தில் உள்ள ஓ.பி.ஜிண்டால் சர்வதேச பல்கலைக்கழகத்தில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் முதல் அரசியலமைப்பு அருங்காட்சியகத்தை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா வருகிற 26ம் தேதி திறந்துவைக்கிறார்.
ஓ.பி.ஜிண்டால் சர்வதேச பல்கலைக்கழகம் ஹரியானா மாநிலத்தில் உள்ள சோனிபட் என்ற இடத்தில் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகம் இந்திய அரசியலமைப்பு சட்டம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சுமார் 10 ஆயிரம் சதுர அடி பரப்பில் அரசியலமைப்பு அருங்காட்சியகத்தை அமைத்துள்ளது.
இந்தியாவின் முதல் அரசியமைப்பு அருங்காட்சியகம் என கருதப்படும் இந்த அருங்காட்சியகத்துக்கு வருகை தரும் பார்வையாளர்களுக்கு வழிகாட்டுவதற்காக சென்னை ஐஐடி அதிநவீன வழிகாட்டி ரோபாவை உருவாக்கியுள்ளது.
"இந்திய அரசியலமைப்பு சட்டம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கிலும், அதன் கூறுகளை அனைத்து தரப்பினரும் பயன்படுத்தும் நோக்கிலும் இந்த அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டுள்ளது. அனுமதி இலவசம். ஆண்டு முழுவதும் இது திறந்திருக்கும்"