KALAM 4 MISSILE (Details in Tamil)

TNPSC PAYILAGAM
By -
1

KALAM 4 MISSILE (Details in Tamil)


கலாம் 4 ஏவுகணை :

அணு ஆயுத தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட கலாம் 4 ஏவுகணை நீர்மூழ்கியில் இருந்து வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. இந்த ஏவுகணை 3,500 கி.மீ. சீறிப் பாய்ந்து துல்லியமாக இலக்கை அழித்தது.

அணு சக்தியில் இயங்கும் இந்தியாவின் முதல் நீர்மூழ்கியான ஐஎன்எஸ் அரிஹந்த் கடந்த 2016-ம் ஆண்டில் கடற்படையில் சேர்க்கப்பட்டது. இந்த நீர்மூழ்கியில் 750 கி.மீ. தொலைவு பாயும் திறன் கொண்ட கலாம் 15 ரக ஏவுகணைகள் பொருத்தப்பட்டு உள்ளன. 

இந்தியாவின் இரண்டாவது அணு சக்தி நீர்மூழ்கியான ஐஎன்எஸ் அரிகாட் கடந்த ஆகஸ்ட் மாதம் 2024 கடற்படையில் இணைக்கப்பட்டது. விசாகப்பட்டினம் கடற்படைத் தளத்தை மையமாக கொண்டு இயங்கும் இந்த நீர்மூழ்கியில் 3,500 கி.மீ. சீறிப் பாயும் கலாம் 4 ரக ஏவுகணைகள் பொருத்தப்பட்டு உள்ளன.

கடந்த 27.11.2024 தேதி ஐஎன்எஸ் அரிகாட் நீர்மூழ்கியில் இருந்து கலாம் 4 ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. கடலுக்கு அடியில் முகாமிட்டிருந்த நீர்மூழ்கியில் இருந்து சீறிப் பாய்ந்த ஏவுகணை 3,500 கி.மீ. தொலைவில் இருந்த இலக்கை துல்லியமாக தாக்கி அழித்தது.கலாம் 4 ஏவுகணைகள் அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்டவை. 

இதுகுறித்து இந்திய கடற்படை வட்டாரங்கள் கூறியது: 

  • ‘நீர்மூழ்கியில் இருந்து அணு ஆயுத தாக்குதல் நடத்தும் திறன் அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா ஆகிய 5 நாடுகளிடம் மட்டுமே உள்ளது.
  • இந்த பட்டியலில் 6-வது நாடாக இந்தியாவும் இணைந்திருக்கிறது. ஐஎன்எஸ் அரிஹந்த் நீர்மூழ்கியில் பொருத்தப்பட்டிருக்கும் கலாம் 15 ரக ஏவுகணைகள் மூலம் 750 கி.மீ. வரை மட்டுமே தாக்குதல் நடத்த முடியும். அதாவது பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் மீது மட்டுமே தாக்குதல் நடத்த முடியும்.
  • தற்போது ஐஎன்எஸ் அரிகாட் நீர்மூழ்கியில் இருந்து 3,500 கி.மீ. தொலைவு சீறிப் பாயும் கலாம் 4 ரக ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளோம். இதன்மூலம் சீனா உள்ளிட்ட நாடுகள் மீதும் அணு ஆயுத தாக்குதல் நடத்த முடியும். அடுத்தகட்டமாக ஐஎன்எஸ் அரிதமன் என்ற அணுசக்தி நீர்மூழ்கி தயாரிக்கப்பட்டு வருகிறது. இது வரும் 2025-ம் ஆண்டில் கடற்படையில் இணைக்கப்படும்.
  • இந்த நீர்மூழ்கியிலும் கலாம் 4 ஏவுகணைகள் பொருத்தப்படும். இந்தியாவின் 4-வது அணு சக்தி நீர்மூழ்கி தயாரிக்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பெயரிடப்படாத இந்த நீர்மூழ்கியில் 5,000 கி.மீ. தொலைவு பாயும் திறன் கொண்ட கலாம் ரக ஏவுகணைகள் பொருத்தப்படும்.
  • போர் காலங்களில் வான், தரை வழியாக நடத்தப்படும் அணு ஆயுத தாக்குதலை முறியடிக்க எதிரி நாடுகள் முயற்சி மேற்கொள்ளக்கூடும். ஆனால் கடலுக்கு அடியில் முகாமிட்டிருக்கும் நீர்மூழ்கியில் இருந்து நடத்தப்படும் அணு ஆயுத தாக்குதலை தடுத்து நிறுத்துவது கடினம்’ என்று இந்திய கடற்படை வட்டாரங்கள் தெரிவித்தன.

கலாம் 4 ஏவுகணை : சிறப்பு அம்சங்கள் :

  • K-4 அல்லது கலாம்-4 என்பது அணுசக்தி திறன் கொண்ட ஒரு இடைநிலை-தடுப்பு நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணை ஆகும் .
  • கே-4 ஏவுகணை என்பது இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) உருவாக்கிய ஒரு நீர்மூழ்கிக் கப்பல் ஏவுகணை ஆகும்.
  • இந்த ஏவுகணை அதிகபட்சமாக சுமார் 3500 கிமீ தூரம் வரை செல்லக்கூடியது.இந்த ஏவுகணை இந்தியாவின் மூன்றாவது தலைமுறை நீர்மூழ்கிக் கப்பல் ஏவுகணை ஆகும்.
  • இது இரண்டு நிலைகளைக் கொண்டது. இந்த ஏவுகணை 12 மீட்டர் (39 அடி) நீளம் 1.3 மீட்டர் (4 அடி 3 அங்குலம்) விட்டம் கொண்டது மற்றும் கிட்டத்தட்ட 17 டன்கள் (19 டன்கள்) எடை கொண்டது. 
  • ஐஎன்எஸ் அரிகாட் நீர்மூழ்கியில் இருந்து 3,500 கி.மீ. தொலைவு சீறிப் பாயும் கலாம் 4 ரக ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளோம். இதன்மூலம் சீனா உள்ளிட்ட நாடுகள் மீதும் அணு ஆயுத தாக்குதல் நடத்த முடியும்

நன்றி: இந்து தமிழ் திசை (29 – 11 – 2024) 

Tags:

Post a Comment

1Comments

Post a Comment