Magizh Mutram Scheme - மகிழ் முற்றம் திட்டம்

TNPSC PAYILAGAM
By -
0

Magizh Mutram Scheme


  • அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் தலைமைப் பண்பை வளர்க்கு விதமாக ரூ.2 கோடி செலவில் ”மகிழ் முற்றம்” என்ற திட்டத்தை பள்ளிக் கல்வித்துறை தொடங்கியுள்ளது. இதன் மூலம் பள்ளிகளில் மாதிரி சட்டப்பேரவை, மாதிரி நாடாளுமன்றம் உருவாக்கப்படவுள்ளது. 
  • இதன் மூலம் மாணவர்களிடம் அரசியல் அறிவு சார்ந்த அனுபவங்கள் மற்றும் ஆளுமைத் திறன் மேம்படுத்தப்படவுள்ளது.
  • மகிழ் முற்றம் திட்டத்தின் மூலம் குறிஞ்சி, முல்லை, மருதம், நெயதல், பாலை எனும் பெயர்களில் மாணவர்கள் குழுக்கள் அமைத்து அதில் ஒரு மாணவர் தலைவர் மற்றும் மாணவ அமைச்சர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
  • குழுவாக இணைந்து செயல்படுதல், பரஸ்பர ஆதரவு, வேற்றுமை இல்லாத உறவு, சமூக மனப்பான்மை, தலைமை பண்பு, அரசியல் இயக்கம் ஆகியவை மாணவர்களிடம் உருவாக்குவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
  • அரசு பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் குழுக்களாக பிரிக்கப்படுவர். இதற்கான பயிற்சிகள் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.2 கோடி இத்திட்டத்தை செயல்படுத்த ஒதுக்கப்பட்டுள்ளது.
  • மகிழ் முற்றம் திட்டச் செயலாக்கத்துக்கென கையேடு பள்ளிக் கல்வித் துறையால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் வழங்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி 37,592 அரசுப் பள்ளிகளில் குழுக்கள் அமைக்கப்படும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)