இந்தியாவில் ஊதிய அறிக்கை: வேலைவாய்ப்பு குறித்த ஒரு கண்ணோட்டம் -செப்டம்பர், 2024" வெளியீடு:
தொழிலாளர் சேமநல நிதித் திட்டம், தொழிலாளர் ஈட்டுறுதி திட்டம் மற்றும் தேசிய ஓய்வூதியத் திட்டம் ஆகிய மூன்று பெரிய திட்டங்களின் கீழ் சந்தா செலுத்திய சந்தாதாரர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில், முறைசார் வேலைவாய்ப்புத் துறையில் 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் வரையிலான வேலைவாய்ப்பு எண்ணிக்கை தொடர்பான புள்ளிவிவரங்களை மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்டு வருகிறது.
இதன் முழு அறிக்கையை இந்தியாவில் ஊதிய அறிக்கை வேலைவாய்ப்பு குறித்த ஒரு கண்ணோட்டம் -செப்டம்பர், 2024.pdf என்ற தகவல் குறிப்பில் அறியலாம்.
பணியாளர் வருங்கால வைப்பு நிதித் திட்டம் (Employees’ Provident Funds Scheme ):
2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தொழிலாளர் சேமநல நிதித் திட்டத்தின் (Employees’ Provident Funds Scheme )கீழ் சந்தாதாரர்களின் மொத்த எண்ணிக்கை 9,47,068 ஆகும். இது இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 9,78,275 ஆக இருந்தது. ஜூலை மாதத்தில் இத்திட்டத்தில் புதிதாக இணைந்துள்ள சந்தாதாரர்களின் எண்ணிக்கை 1,117,481 என்ற அளவில் இருந்தது.
ஊழியர்களின் மாநில காப்பீட்டுத் திட்டம் (Employees’ State Insurance Scheme):
2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தொழிலாளர் ஈட்டுறுதித் திட்டத்தின் கீழ் (Employees’ State Insurance Scheme) புதிதாக பதிவு செய்துள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கை 15,02,964 ஆகும். இது இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 15,25,086 ஆக இருந்தது.
தேசிய ஓய்வூதியத் திட்டம் (National Pension Scheme):
2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் (National Pension Scheme) சேர்ந்துள்ள சந்தாதாரர்களின் மொத்த எண்ணிக்கை 58,018 ஆக இருந்தது. இது ஆகஸ்ட் மாதத்தில் 54,869 ஆக இருந்தது.
நன்றி: பத்திரிகை தகவல் அலுவலகம் -PIB Chennai