உத்தரப் பிரதேச மதரஸா கல்வி சட்டம் 2004:
- உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மதரஸாக்களின் (இஸ்லாமிய கல்வி நிறுவனங்கள்) செயல்பாட்டை ஒழுங்குபடுத்துவதையும் நிர்வகிப்பதையும் இந்த சட்டம் நோக்கமாகக் கொண்டது .
- இது உத்தரப்பிரதேசம் முழுவதும் மதரஸாக்களை நிறுவுதல், அங்கீகாரம், பாடத்திட்டம் மற்றும் நிர்வாகத்திற்கான கட்டமைப்பை வழங்கியது.
- இந்தச் சட்டத்தின் கீழ், மாநிலத்தில் உள்ள மதரஸாக்களின் செயல்பாடுகளை மேற்பார்வையிடவும் உத்தரப்பிரதேச மதர்சா கல்வி வாரியம் நிறுவப்பட்டது.
உச்ச நீதிமன்றம் தீர்ப்பு:
- இந்த வழக்கு ஆனது அஞ்சும் காத்ரி & மற்றவர்கள் Vs இந்திய ஒன்றியம் இடையிலான வழக்கு என்று அழைக்கப்படுகிறது.
- 2004ஆம் ஆண்டு சமாஜ்வாதி கட்சி தலைமையிலான உத்தரப்பிரதேச அரசு, 'மதரஸா கல்வி சட்டம் 2004' என்ற சட்டத்தைக் கொண்டுவந்தது. பல ஆண்டுகளுக்குப்பிறகு, கடந்த மார்ச் மாதம் 2024 அலகாபாத் உயர் நீதிமன்றம், "மதரஸா கல்வி சட்டம் அரசியலமைப்புக்கும் மதச் சார்பின்மைக்கும் எதிரானது" என்று கூறி ரத்து செய்ததது.
- தற்போது (நவம்பர் 5, 2024) உச்ச நீதிமன்றம் அந்த தீர்ப்பை ரத்து செய்ததது
- உச்ச நீதிமன்றம் ஆனது, 2004 ஆம் ஆண்டு உத்தரப் பிரதேச மதராஸா கல்விச் சட்டத்தின் (மதராஸா சட்டம்) அரசியலமைப்புச் செல்லுபடித் தன்மையினை உறுதி செய்தது. ஆனால் பல்கலைக்கழக மானியக் குழு சட்டத்தினை மீறுவதால் மதராஸாக்கள் உயர் கல்விப் பட்டங்களை வழங்க முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
- இந்த வழக்கை கடந்த ஏப்ரல் மாதம் முதல் விசாரித்து வருகிறது உச்ச நீதிமன்றம். ஏப்ரல் 5ம் தேதி நடந்த வழக்கு விசாரணையில், "மதச்சார்பின்மை என்பதன் அர்த்தம் 'வாழு வாழவிடு' என்பதுதான்" என்று நீதிமன்றம் எடுத்துரைத்தது.
- "மதச்சார்பின்மையின் அடிப்படையை மதரஸா கல்வி சட்டம் மீறுவதாக அலகாபாத் நீதிமன்றம் கூறியது தவறு. இந்த சட்டம் மதரஸாக்களில் கல்வித் தரத்தைத் தரப்படுத்தவே செய்கிறது" என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
- மதரஸாக்களில் 12ம் வகுப்புக்கு மேல் அளிக்கப்படும் ஃபாசில், கமில் பட்டங்கள் யு.ஜி.சி சட்டங்களுடன் முரண்படுவதையும் உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. மேலும், மதரஸா கல்வி சட்டம் சிறுபான்மையினர் பாதுகாப்புக்கு உதவுவதாகவும், கல்வியுடன் சில மதச் சடங்குகள் கற்றுக்கொடுக்கப்படுவதனால் மதரஸாக்களை அரசியலமைப்புக்குப் புறம்பானதாகக் கருத முடியாதெனவும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.