ட்ரோனம் துப்பாக்கி:
- ட்ரோன் எனப்படும் ஆளில்லா சிறிய விமானங்கள் வாயிலாக ஆயுதங்கள், போதைப் பொருட்களை கடத்துவது, எல்லை பாதுகாப்பில் உள்ள மிகப் பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. இது நமது ராணுவ வீரர்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்து வருகிறது. இந்நிலையில் எல்லையைத் தாண்டி வரும் ட்ரோன்களை கண்டறிந்து அவற்றை அழிப்பதற்காக, உள்நாட்டில் தயாரான லேசர் தொழில்நுட்பத்துடன் கூடிய துப்பாக்கிகள் தற்போது பயன்படுத்தப்படுகின்றன.
- இதன் வாயிலாக, முன்பு, 3 சதவீதமாக இருந்த ட்ரோன்களை கண்டறியும் திறன், தற்போது, 55 சதவீதமாக உயர்ந்துள்ளது.(உள்நாட்டில் தயாரான லேசர் தொழில்நுட்பத்துடன் கூடிய துப்பாக்கிகள் 55 சதவீத ட்ரோன்களை அழிக்கும் வல்லமை வாய்ந்தவை )
- எல்லை தாண்டி வரும் 55 சதவீத ட்ரோன்களை, இந்த துப்பாக்கிகள் அழித்து விடுகின்றன. மேலும், எல்லையை பாதுகாக்க, எல்லையோர பகுதிகளுக்கென, தனியாக ட்ரோன் எதிர்ப்பு முறையை உருவாக்கும் முயற்சி நடந்து வருகிறது. இந்த வகை துப்பாக்கிகளுக்கு ட்ரோனம் என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது.
- குருத்வா சிஸ்டம்ஸ் நிறுவனம் மூலம் இந்த ட்ரோனம் வகை துப்பாக்கிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த வகை துப்பாக்கிகளில் இருந்து புறப்படும் லேசர் கதிர்கள், எதிரிநாட்டிலிருந்து ஏவப்படும் ட்ரோன்களை கண்டறிந்து அழிக்கும் திறமை வாய்ந்தவை.
Vajra Shot : வஜ்ரா ஷாட்
- டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்ற இந்திய கடற்படையின் ஸ்வாவ்லம்பன் 2024 கருத்தரங்கில், நான்கு கிலோமீட்டர் தூரம் வரம்பைக் கொண்ட இந்தியத் தயாரிப்பில் உருவாக்கப்பட்ட வஜ்ரா ஷாட் என்ற நவீன ட்ரோன் துப்பாக்கி காட்சிப்படுத்தப்பட்டது.
- பிக் பேங் பூம் சொல்யூஷன்ஸ் மூலம் இது உருவாக்கப்பட்டது. வஜ்ரா ஷாட் ஏற்கனவே இந்திய ராணுவம் மற்றும் விமானப்படையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.