CURRENT AFFAIRS IN TAMIL DECEMBER 2024 ( 10.12.2024 )

TNPSC PAYILAGAM
By -
0

CURRENT AFFAIRS IN TAMIL DECEMBER 2024 ( 10.12.2024 )


இந்தியாவில் மொத்த கருத்தரிப்பு விகிதம்:

  • தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு-5 (NFHS-5 (2019–21) )-ன் படி இந்தியாவில் மொத்த கருத்தரிப்பு விகிதமானது (TFR-Total Fertility Rate) தேசிய அளவில் 2.0ஐ எட்டியுள்ளது.இந்த இலக்கானது இந்திய மக்கள் தொகை கொள்கை-2000 மற்றும் தேசிய சுகாதார கொள்கை-2017 (டி.எஃப்.ஆர் 2.1) திட்டத்திற்கு ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும்  .
  • மொத்த கருவுறுதல் விகிதம் (TFR) என்பது ஒரு பெண் தனது இனப்பெருக்க ஆண்டுகளில் பெற்றெடுக்கும் சராசரி குழந்தைகளின் எண்ணிக்கையை மதிப்பிடுவதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு அளவீடாகும்.
  • TFR = (Sum of ASFR x 5) / 1,000  (The TFR is calculated by adding up all the age-specific fertility rates, multiplying this sum by five (the width of the age-group interval), and then dividing by 1,000.)

சுப்பிரமணிய பாரதியின் முழுமையான படைப்புகளின் தொகுப்பு  வெளியிடு:

  • மாபெரும் தமிழ்க் கவிஞரும், சுதந்திரப் போராட்ட வீரருமான சுப்பிரமணிய பாரதியின் முழுமையான படைப்புகளின் தொகுப்பை பிரதமர் திரு நரேந்திர மோடி புதுதில்லி, 7, லோக் கல்யாண் மார்கில் டிசம்பர் 11 அன்று பிற்பகல் 1 மணியளவில் வெளியிடுகிறார்.
  • சுப்பிரமணிய பாரதியின் எழுத்துக்கள் மக்களிடையே தேசபக்தியை விதைத்தன. இந்திய கலாச்சாரம் மற்றும் நாட்டின் ஆன்மீக பாரம்பரியத்தின் சாரத்தை பொதுமக்களுக்கு எளிதில் புரியும் மொழியில் எடுத்து சொல்லின. 23 தொகுப்புகளில் அவரது முழுமையான படைப்புகள் சீனி விஸ்வநாதனால் தொகுக்கப்பட்டு, அலையன்ஸ் பப்ளிஷர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் சுப்பிரமணிய பாரதி எழுத்துக்களின் பதிப்புகள், விளக்கங்கள், ஆவணங்கள், பின்னணித் தகவல்கள், தத்துவ விளக்கங்கள்  உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.


மருத்துவ மதிப்பு பயணத்திற்கான இந்தியாவின் அதிகாரப்பூர்வ தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது:

  • ஆயுஷ் மருத்துவ முறையின் கீழ் சிகிச்சை பெறுவதற்காக இந்தியாவுக்கு வருகை தரும் வெளிநாட்டினருக்கு ஆயுஷ் விசா என்ற தனி பிரிவை அரசு 2023 ஜூலை 27  அன்று அறிமுகப்படுத்தியுள்ளது. 
  • ஆயுஷ் விசா நான்கு துணை வகைகளின் கீழ் கிடைக்கிறது: (i) ஆயுஷ் விசா (AY-1), (ii) ஆயுஷ் உதவியாளர் விசா (AY2), (iii) இ-ஆயுஷ் விசா மற்றும் (iv) இ-ஆயுஷ் உதவியாளர் விசா. ஆயுஷ் விசா ஆயுஷ் அமைப்புகள் மூலம் சிகிச்சை பெறுவதை ஒரே நோக்கமாகக் கொண்டு இந்தியாவுக்கு வரும் ஒரு வெளிநாட்டவருக்கு வழங்கப்படுகிறது. 
  • 04.12.2024 வரை மொத்தம் 123 வழக்கமான ஆயுஷ் விசா, 221 இ-ஆயுஷ் விசா மற்றும் 17 இ-ஆயுஷ் உதவியாளர் விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன.
  • சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் மருத்துவ மதிப்பு பயணத்திற்கான இந்தியாவின் அதிகாரப்பூர்வ தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் மருத்துவ பராமரிப்பு அல்லது ஆரோக்கிய சேவைகளை நாடும் எந்தவொரு சர்வதேச நோயாளியும் வருகை தருவதன் மூலம் அட்வான்டேஜ் ஹெல்த்கேர் இந்தியா (Advantage Healthcare India portalதளத்தைப் பார்வையிடலாம் www.healinindia.gov.in.


உணவு பதனப்படுத்துதல் துறையில்  மொத்த அந்நிய நேரடி முதலீடு குறித்த விவரங்கள் :

  • 2019-20-ம் ஆண்டில் 904.7 மில்லியன் டாலர் அளவிற்கும், 2020-21-ம் ஆண்டில் 393.41 மில்லியன் டாலர் அளவிற்கும், 2021-22 -ம் ஆண்டில் 709.72 மில்லியன் டாலர் அளவிற்கும், 2022-23-ம் ஆண்டில் 895.34 மில்லியன் டாலர் அளவிற்கும், 2023-24-ம் ஆண்டில் 608.31 மில்லியன் டாலர் அளவிற்கும் அந்நிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
  • உணவு பதனப்படுத்துதல் தொழில்கள் அமைச்சகம் மிகப்பெரும் உணவுப் பூங்கா திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இது பிரதமரின் வேளாண் மேம்பாட்டு  திட்டத்தின் கீழ் ஒரு அம்சமாகும். பண்ணை முதல் சந்தை வரை மதிப்புச் சங்கிலியில் உணவு பதனப்படுத்துதல் துறைக்கு நவீன உள்கட்டமைப்பை உருவாக்க இது பயன்படுகிறது.
  • நாட்டில் 25 மாநிலங்களில், பிரதமரின் வேளாண் மேம்பாட்டு திட்டத்தின் மிகப்பெரிய உணவுப் பூங்கா திட்டத்தின் கீழ் 41 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.  இதில் தமிழ்நாட்டில் ஒரு திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதும் உள்ளடங்கும்.

சர்வதேச எல்லையில் வேலியிடுதல்:

  • மேகாலயாவில் உள்ள இந்திய-பங்களாதேஷ் எல்லையின் மொத்த நீளம் 443 கி.மீ ஆகும். இதில்  367.155 கி.மீ நீளமானது சர்வதேச எல்லை வேலியால் அடைக்கப்பட்டுள்ளது. 
  • 19.759 கி.மீ தூரத்திற்கு வேலி  அமைக்கும்   பணி தற்போது நடைபெற்று   வருகிறது.  
  • நடப்பு நிதியாண்டில் (நிதியாண்டு 2024-25), இந்தியா-பங்களாதேஷ் வேலி பணிகளுக்கான பட்ஜெட் ஒதுக்கீடு ரூ.299.58 கோடி ஆகும் . இதில்
  • ரூ 19.54 கோடி மேகாலயாவுக்கான நிர்வாக முகமைகளுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது.


மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்திற்கான கைபேசி செயலி:

  • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்திற்கான கைபேசி செயலியில் (JANMANREGA Mobile App) தங்களது குறைகளை பதிவு செய்ய ஏதுவாக "உங்களது குறைகளை தெரிவியுங்கள்" என்ற புதிய விருப்பத்தேர்வும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


249 மாவட்டங்கள் மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் பணியாளர் இல்லாத மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன:

  • 766 மாவட்டங்களில், 249 மாவட்டங்கள் கையால் மனித கழிவுகளை அகற்றும் பணியாளர் இல்லாத மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டு, இதற்கான சான்றிதழை இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளன.
  • கையால் கழிவுகளை அகற்றும் தொழிலாளர்களை பணியமர்த்துதல் தடை செய்தல் மற்றும் அவர்களின் மறுவாழ்வு சட்டம் 2013-ன்படி,(Prohibition of Employment as Manual Scavengers and their Rehabilitation Act, 2013 (MS Act, 2013)) 06.12.2013 முதல் கையால் கழிவுகளை அகற்றும் பணி நாட்டில் தடை செய்யப்பட்ட தொழிலாக உள்ளது. 
  • மேற்கண்ட தேதியிலிருந்து எந்த ஒரு நபரோ அல்லது முகமையோ கையால் கழிவுகளை அகற்றும் பணியில் எந்த ஒரு நபரையும் பணியமர்த்தவோ அல்லது பணியமர்த்தவோ கூடாது. 
  • எம்.எஸ். சட்டம், 2013-ன் விதிமுறைகளை மீறி  எந்தவொரு நபரையும் அல்லது முகமையையும் கையால் கழிவுகளை அகற்றும் பணியில்  ஈடுபடுத்தினால், அவர்களுக்கு 2 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது ரூ. ஒரு லட்சம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.
  • நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளில் கையால் கழிவுகளை அகற்றுவோர் மற்றும் சுகாதாரமற்ற கழிப்பறைகள் குறித்த விவரங்கள் ஏதேனும் இருப்பின், அவற்றைப் பதிவு செய்ய ஒரு கைபேசி செயலி மற்றும் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. 





OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN GOOGLE DRIVE :


FOLLOWS ON:

  • Email: tnpscpayilagam@gmail.com

 

If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!..




Post a Comment

0Comments

Post a Comment (0)