CURRENT AFFAIRS IN TAMIL DECEMBER 2024 ( 12.12.2024 )

TNPSC PAYILAGAM
By -
0


                                  CURRENT AFFAIRS IN TAMIL DECEMBER 2024 ( 12.12.2024 )



அபத்சகாயேஸ்வரர் கோயில் பாரம்பரிய மறுசீரமைப்புக்கான யுனெஸ்கோ விருதை(UNESCO Award for Heritage Restoration) வென்றுள்ளது:

  • தஞ்சாவூர் மாவட்டம். கும்பகோணம் வட்டம், துக்காச்சி ஆபத்சகாயேஸ்வரர் கோயில் 1,300 ஆண்டுகள் தொன்மையானது. இந்தக் கோயிலுக்கு இறுதியாக எப்போது கும்பாபிஷேகம் நடைபெற்றது என்றே அறியப்படாத நிலையில், முதல்வரின் வழிகாட்டுதலின்படி ரூ.5 கோடியில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, 2023-ல் வெகுவிமரிசையாக கும்பாபிஷேகம் நடைபெற்றது.
  • ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் பண்பாட்டு நிறுவனம் (யுனெஸ்கோ) தொன்மை மாறாமல் புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்தி பாதுகாத்தமைக்காக கும்பகோணம் துக்காச்சி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலை 2024-ம் ஆண்டுக்கான சிறப்பு விருதுக்கு தேர்வு செய்துள்ளது . இந்நிலையில், அபத்சகாயேஸ்வரர் கோயில் பாரம்பரிய மறுசீரமைப்புக்கான யுனெஸ்கோ விருதை(UNESCO Award for Heritage Restoration) வென்றுள்ளது.


வைக்கம் விருது 2024:

  • இந்த ஆண்டுக்கான வைக்கம் விருது கர்நாடகாவைச் சேர்ந்த புகழ்பெற்ற எழுத்தாளர் தேவநூர மஹாதேவாவுக்கு 12.12.2024 கேரளாவில் உள்ள வைக்கத்தில் வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
  • இதுகுறி்த்து, தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு: சட்டப்பேரவையில் கடந்தாண்டு மார்ச் 30-ம் தேதி எல்லை கடந்து சென்று சமூக நீதிக்காக வைக்கத்தில் போராடிய தந்தை பெரியாரை நினைவுகூரும் வகையில், பிற மாநிலங்களில் ஒடுக்கப்பட்டவர்கள் நலனுக்காகப் பாடுபட்டு, குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் ஆளுமைகள் அல்லது நிறுவனங்கள் கவுரவிக்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி ஆண்டுதோறும் சமூகநீதி நாளான செப். 17-ம் தேதி வைக்கம் விருது தமிழக அரசால் வழங்கப்படும். இதனை பேரவையில் 110- விதியின்கீழ் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
  • அந்த அறிவிப்புக்கிணங்க, 2024-ம் ஆண்டுக்கான “வைக்கம் விருது” கர்நாடக மாநிலம், மைசூருவைச் சேர்ந்த புகழ்பெற்ற எழுத்தாளர் தேவநூர மஹாதேவாவுக்கு வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. தேவநூர மஹாதேவா ஒரு சிறந்த எழுத்தாளர் மற்றும் சமூக ஆர்வலர். மக்களின் மொழியியல் உரிமைகளின் மீதான நிலைப்பாட்டில் அதிக ஈடுபாடு கொண்டவர். மேலும், சாதி அடிப்படையிலான பாகுபாடு மற்றும் அடக்குமுறைகளுக்கு எதிராகச் செயல்பட்டவர். இவர் ஒன்றிய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ மற்றும் சாகித்ய அகாதெமி விருது போன்ற பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.


IndiaAI Future Skills தளம்:

  • செயற்கை நுண்ணறிவு (AI) கல்வி மற்றும் திறன்களை ஜனநாயகமயமாக்கும் திட்டமான IndiaAI Future Skills தளத்தில் 8.6 லட்சம் பேர் சேர்ந்துள்ளதாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார்.
  • இந்தியாவில் செயற்கை நுண்ணறிவை உருவாக்குதல் மற்றும் இந்தியாவிற்கான செயற்கை நுண்ணறிவை உருவாக்குதல் ஆகிய நோக்கங்களை மேம்படுத்தும் வகையில், பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை, மார்ச் 2024 ன்று ரூ.10,371.92 கோடி பட்ஜெட் செலவில் விரிவான தேசிய அளவிலான இந்தியாஏஐ பணிக்கு ஒப்புதல் அளித்துள்ளது.


அதிக செல்வத்தை உருவாக்கும் பங்குகளின் பட்டியல் :

  • அதிக செல்வத்தை உருவாக்கும் பங்குகளின் பட்டியலில் முதல் 10 இடங்களில் முகேஷ் அம்பானியின் தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் உள்ளது என மோதிலால் ஓஸ்வால் பைனான்சியல் சர்வீசஸ் தெரிவித்துள்ளது
  • முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்- இந்நிறுவனம், ரூ.11,17,800 கோடி செல்வத்தை உருவாக்கி முதலிடம் வகிக்கிறது.
  • மென்பொருள் தயாரிப்பு நிறுவனமான டிசிஎஸ் ரூ.8,31,200 கோடியுடன் இரண்டாவது இடத்திலும், 
  •  ரூ.5,44,900 கோடியுடன் பார்தி ஏர்டெல் முன்றாவது இடத்திலும் உள்ளன.
  • தனியார் துறையைச் சேர்ந்த ஐசிசிஐ வங்கி ரூ.5,10,900 கோடியுடன்  4-வது இடத்திலும்
  • பொதுத் துறை வங்கியான எஸ்பிஐ ரூ.4,17,600 கோடியுடன் 5-வது இடத்திலும்
  • இன்போசிஸ் ரூ.3,89,300 கோடியுடன் 6-வது இடத்திலும், 
  • எல் அண்ட் டி ரூ.3,53,000 கோடியுடன் 7-வது இடத்திலும் 
  • ரூ.3.40,800 கோடியுடன் அதானி எண்டர்பிரைசஸ் இந்த பட்டியலில் 8-வது இடத்திலும், 
  • டாடா மோட்டார்ஸ் ரூ.3,15,400 கோடியுடன் 9-வது இடத்திலும், 
  • ஹெச்சிஎல் டெக்னாலஜீஸ் ரூ.3,15,000 கோடியுடன் 10-வது இடத்திலும் உள்ளன.


தமிழ்நாடு கனிம நில வரி மசோதா 2024:

  • தமிழகத்தில் கனிமங்களைக் கொண்டுள்ள நிலங்களுக்கு வரி விதிப்பது தொடர்பான சட்ட மசோதா சட்டப்பேரவையில் 10.12.2024 நிறைவேற்றப்பட்டது.
  • சட்டப்பேரவையில் நேற்று தமிழகத்தில் கனிமங்களை கொண்டுள்ள நிலங்களுக்கு நிலவரி விதிப்பது தொடர்பான சட்ட மசோதாவை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிமுகம் செய்தார். 


மகளிருக்கான 20-வது ஆசிய ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் 2024:

  • மகளிருக்கான 20-வது ஆசிய ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் டெல்லியில் நடைபெற்று வந்தது.
  • இதன் இறுதிப் போட்டியில் 16 முறை சாம்பியன் பட்டம் வென்ற கொரியாவுடன் நேற்று ஜப்பான் பலப்பரீட்சை நடத்தியது. 
  • இந்த ஆட்டத்தில் ஜப்பான் 25 – 24 என்ற கணக்கில் கொரியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. ஜப்பான் பட்டம் வெல்வது இது 2-வது முறையாகும். அந்த அணி 2004-ம் ஆண்டும் கோப்பையை வென்றிருந்தது.
  • இந்த தொடரில் இந்திய அணி 6-வது இடம் பிடித்தது.


ட்ரோனம் துப்பாக்கி:

  • பிஎஸ்எப் எனப்படும் எல்லையோரப் பாதுகாப்பு படையின் 60-வது நிறுவன நாள் விழா, ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நடைபெற்றது. மொத்தம், 2.65 லட்சம் வீரர்கள் உள்ள இந்த படைப் பிரிவு, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்துடனான எல்லையில் பாதுகாப்பு, கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளது.
  • உள்நாட்டில் தயாரான லேசர் தொழில்நுட்பத்துடன் கூடிய துப்பாக்கிகள் 55 சதவீத ட்ரோன்களை அழிக்கும் வல்லமை வாய்ந்தவை என்று நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.


தமிழகம் சுகாதாரத்துறை திட்டங்களில் முன்னணியில் உள்ளதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்:

  • வேலூரில் நறுவீ மருத்துவமனை மற்றும் ‘தி இந்து’ இணைந்து நடத்திய ‘ஆரோக்கியமான இந்தியா, மகிழ்ச்சியான இந்தியா’ என்ற நிகழ்வை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்து பேசும்போது, 
  • ‘‘தமிழக சுகாதார துறையின் முதன்மை திட்டங்களில் மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டம் முக்கியமானதாக உள்ளது. 
  • இந்த திட்டம் 2024-ம் ஆண்டுக்கான ஐக்கிய நாடுகளுக்கு இடையேயான பணிக்குழு விருதினை சமீபத்தில் பெற்றுள்ளது. இந்த திட்டம் சுமார் 2 கோடி மக்களின் வாழ்வில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 
  • நாட்டிலேயே சுகாதாரம் உள்ளிட்ட 13 முக்கிய துறைகளில் தமிழகம் முன்னணியில் இருப்பதாக நிதி ஆயோக் தனது அறிக்கையில் கூறியுள்ளது என்றார்.


நியமனம் :

  • தமிழ்நாடு இயல், இசை நாடக மன்றத்தின் தலைவராக வாகை சந்திரசேகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • 1955-ல் தமிழ்நாடு சங்கீத நாடக சபை என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ளது.
  • இதற்கு 1973-ல் தமிழ்நாடு இயல், இசை நாடக மன்றம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


கட்டமைப்பு பொறியியல் மாநாடு 2024: Structural Engineering Convention (SEC-2024)

  • திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகத்தின் (என்ஐடி-டி) கட்டுமானப் பொறியியல் துறை, வரும் 12-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை, 14வது கட்டமைப்பு பொறியியல் மாநாட்டுக்கு (எஸ்இசி-2024) ஏற்பாடு செய்துள்ளது. 


இந்தியாவின் முதல் சைகை மொழி தொலைக்காட்சி:

  • இந்தியாவில், அனைவரையும் உள்ளடக்கும் கல்வி முறையை ஊக்குவிக்கும் நோக்கில் முதன்முறையாக சைகை மொழிக்கென ஓர் ஒளிவழி (தொலைக்காட்சி) தொடங்கப்பட்டுள்ளது.


போதைப்பொருள் மருந்துகள் ஆணையம் :

  • போதைப்பொருள் தடுப்பு ஆணையத்தின் (Commission on Narcotic Drugs (CND))  68வது அமர்வின் தலைமையாக இந்தியா தேர்வு செய்யப்பட்டுள்ளது.
  • போதைப்பொருள் மருந்துகள் ஆணையம் ( CND ) ஐக்கிய நாடுகளின் பொருளாதாரம் மற்றும் சமூக கவுன்சிலின் (ECOSOC) செயல்பாட்டுக் கமிஷன்களில் ஒன்றாகும் , மேலும் இது ஐக்கிய நாடுகளின் அமைப்பில் உள்ள மத்திய மருந்துக் கொள்கையை உருவாக்கும் அமைப்பாகும் .


ஆபரேஷன் திரை நீக்கு :
  • ஆபரேஷன் திரை நீக்கு தமிழகத்தில் இணையவழி குற்றங்களை தடுக்க  தொடங்கப்பட்டுள்ளது.

Bauma Conexpo 2024:
  • பாமா கோனெக்ஸ்போ இந்தியா 2024 வர்த்தக கண்காட்சி கிரேட்டர் நொய்டாவில் உள்ள இந்தியா எக்ஸ்போ சென்டரில் 12.12.2024 துவங்குகிறது .

இந்திய கடல்சார் பாரம்பரிய மாநாடு 2024:

  • துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகம், இந்தியாவின் விரிவான கடல்சார் வரலாற்றையும் அதன் கலாச்சார முக்கியத்துவத்தையும் கொண்டாடுவதை நோக்கமாகக் கொண்ட தொடக்க இந்திய கடல்சார் பாரம்பரிய மாநாட்டை (IMHC) டிசம்பர் 11-12, 2024 அன்று புது தில்லியில் உள்ள யஷோபூமி கன்வென்ஷன் சென்டரில் நடத்துகிறது.


ஐஐடி ரோபார் புதிய புளூடூத் அமைப்பை அறிமுகப்படுத்துகிறது:

  • இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (IIT) ரோபார் ( IIT Ropar) இல் iHub – AWaDH (விவசாயம் மற்றும் நீர் தொழில்நுட்ப மேம்பாட்டு மையம்) , அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை (DST) மூலம் இடைநிலை சைபர்-பிசிகல் சிஸ்டம்ஸ் (NM-ICPS) தேசிய இயக்கத்தின் கீழ் , ₹110 கோடி நிதியுதவியுடன் தனது அதிநவீன வசதியை புளூடூத் சிஸ்டத்தை (AWaDH இன் புளூடூத் லோ எனர்ஜி கேட்வே மற்றும் நோட் சிஸ்டம்) தொடங்குவதாக அறிவித்துள்ளது 
  • இந்த முதல்-வகையான செலவு குறைந்த அமைப்பு, புளூடூத்-செயல்படுத்தப்பட்ட சென்சார்களை கிளவுட் இயங்குதளங்களுடன் இணைக்கிறது, தடையற்ற தரவு பரிமாற்றம், நிகழ்நேர சுற்றுச்சூழல் கண்காணிப்பு மற்றும் விவசாயம், தளவாடங்கள் மற்றும் பல்வேறு துறைகளில் மேம்பட்ட பகுப்பாய்வுகளை செயல்படுத்துகிறது.


OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN GOOGLE DRIVE :


FOLLOWS ON:

  • Email: tnpscpayilagam@gmail.com

 

If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!..






Post a Comment

0Comments

Post a Comment (0)