50-வது நிறுவன தினம்:
- இந்திய அஞ்சல், தொலைத்தொடர்பு கணக்குகள் - நிதிச் சேவை அமைப்பு (IP&TAFS-The Indian Posts & Telecommunications Accounts and Finance Service) தனது 50-வது நிறுவன தினத்தை புதுதில்லியில் (14.12.2024) கொண்டாடியது.
- குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர் தலைமை விருந்தினராக இதில் பங்கேற்றார். மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் திரு ஜோதிராதித்ய எம். சிந்தியா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
- TNPSC EXAM GK NOTES : IP-TAFS DETAILS IN TAMIL
பொதுத்துறை வங்கிகள் ரூ.1.41 லட்சம் கோடி நிகர லாபம் ஈட்டியது. மொத்த வாராக்கடன் விகிதம் 3.12% ஆகக் குறைந்தது:
- மொத்த வாராக் கடன் விகிதம் , செப்டம்பர் 2024-ல் 3.12% ஆகக் குறைந்தது. தொடர்ச்சியான வேகத்தை வெளிப்படுத்தும் வகையில், 2024-25-ம் ஆண்டின் முதல் பாதியில் ரூ.85,5206,000 கோடி நிகர லாபம் பதிவு செய்துள்ளது.
- கடந்த மூன்று ஆண்டுகளில் மொத்தம் ரூ.61,964 கோடி ஈவுத்தொகையை செலுத்தியுள்ளன.
- பொதுத்துறை வங்கிகளின் மேம்பட்ட வலிமையின் மற்றொரு குறிகாட்டி அவற்றின் மூலதன சொத்து விகிதம் ஆகும். இது செப்டம்பர் 2024-ல், 15.43% ஆக உயர்ந்தது.
- 54 கோடி ஜன் தன் கணக்குகள் மற்றும் பல்வேறு முதன்மை நிதி உள்ளடக்கத் திட்டங்களின் (பிரதமரின் முத்ரா, ஸ்டாண்ட்-அப் இந்தியா, பிரதமரின் ஸ்வநிதி , பிரதமரின் விஸ்வகர்மா) 54 கோடிக்கும் அதிகமான பிணையற்ற கடன்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன.
- வங்கி கிளைகளின் எண்ணிக்கை மார்ச் 2014-ல் 1,17,990 ஆக இருந்து செப்டம்பர் 2024 இல் 1,60,501 ஆக அதிகரித்துள்ளது; இதில் 1,00,686 கிளைகள் கிராமப்புற, சிறு நகர்ப்புற பகுதிகளில் உள்ளன.
- கிசான் கிரெடிட் கார்டு திட்டம் விவசாயிகளுக்கு குறுகிய கால பயிர் கடன்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. செப்டம்பர் 2024 நிலவரப்படி மொத்த செயல்பாட்டு கேசிசி கணக்குகள் 7.71 கோடியாக இருந்தன, மொத்தம் ரூ .9.88 லட்சம் கோடி நிலுவையில் உள்ளது.
- 2004-2014 காலகட்டத்தில் பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகளின் மொத்த முன்பணம் ரூ.8.5 லட்சம் கோடியிலிருந்து ரூ.61 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது, இது மார்ச் 2024-ல் ரூ.175 லட்சம் கோடியாக கணிசமாக அதிகரித்துள்ளது.
பிணையில்லா விவசாயக் கடன்:
- விவசாயத் துறைக்கு ஆதரவளிப்பதற்கும், அதிகரித்து வரும் இடுபொருள் செலவுகளைச் சமாளிப்பதற்குமான ஒரு நடவடிக்கையாக, இந்திய ரிசர்வ் வங்கி, பிணையில்லாத விவசாயக் கடன்களுக்கான (Collateral-Free Agricultural Loan) உச்சவரம்பை அதிகரிப்பதாக அறிவித்துள்ளது.
- கடன் வாங்குபவருக்கு தற்போதுள்ள ரூ 1.60 லட்சம் கடன் வரம்பு ரூ 2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஜனவரி 1, 2025 முதல், நாடு முழுவதும் உள்ள வங்கிகள் பின்வரும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகின்றன:
- கடன் வாங்குபவருக்கு ரூ 2 லட்சம் வரையிலான கடன்கள் உட்பட விவசாயக் கடன்களுக்கான பிணை பாதுகாப்பு தேவைகளை தள்ளுபடி செய்ய வேண்டும்.
- விவசாய சமூகத்திற்கு சரியான நேரத்தில் நிதி உதவியை உறுதி செய்ய திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை விரைவாக செயல்படுத்தவும்.
- வங்கிகள் இந்த மாற்றங்களுக்கு பரவலான விளம்பரத்தை வழங்க அறிவுறுத்தப்பட்டு, விவசாயிகள் மற்றும் அவர்களின் செயல்பாட்டு பகுதியின் பங்குதாரர்களிடையே அதிகபட்ச விழிப்புணர்வையும் உறுதிப்படுத்துகிறது.
தேசிய எரிசக்தி பாதுகாப்பு தினம்-NATIONAL ENERGY CONSERVATION DAY:
- எரிசக்தியை பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், எரிசக்தி சிக்கனத்தில் நாட்டின் சாதனைகளை வெளிப்படுத்துவதற்காகவும் ஆண்டுதோறும் டிசம்பர் 14-ம் தேதி தேசிய எரிசக்தி பாதுகாப்பு தினம் கொண்டாடப்படுகிறது.
தலைமைச் செயலாளர்களின் நான்காவது தேசிய மாநாடு
- தில்லியில் 15.12.2024 நடைபெற்ற தலைமைச் செயலாளர்களின் 4-வது தேசிய மாநாட்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார். மூன்று நாள் மாநாடு 2024 டிசம்பர் 13 முதல் 15 வரை தில்லியில் நடைபெற்றது.
- மக்களுக்கு ஆதரவான செயல்திறன் மிக்க நல்ல ஆளுமை நமது பணியின் மையமாக உள்ளது என்றும், இதன் மூலம் வளர்ந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நாம் அடைய முடியும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
- 'தொழில்முனைவு, வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாடு – மக்கள்தொகை பங்கீட்டை மேம்படுத்துதல்' என்ற தலைப்பில் இந்த மாநாட்டில் கலந்துரையாடல்கள் நிகழ்ந்தன.
ஜல்வாஹக்' திட்டம்:
- தேசிய நீர்வழிகள் 1 (கங்கை நதி), தேசிய நீர்வழிகள் 2 (பிரம்மபுத்திரா நதி), தேசிய நீர்வழிகள் 16 (பராக் நதி) வழியாக நீண்ட தூர சரக்குகளின் போக்குவரத்தை ஊக்குவிக்கும் சரக்கு மேம்பாட்டுக்கான 'ஜல்வஹக்' என்ற முக்கிய கொள்கையை மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் 15.12.2024 வெளியிட்டார்.
- TNPSC EXAM KEY POINTS : JALVAHAK SCHEME DETAILS IN TAMIL
OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN GOOGLE DRIVE :
FOLLOWS ON:
- Instagram : / tnpscpayilagam
- Personal Twitter: / @TNPSCPayilagam) / X(twitter.com)
- Facebook Page : / TNPSCPAYILAGAM
- Email: tnpscpayilagam@gmail.com
- Telegram: https://t.me/TNPSCPAYILAGAM
- LinkedIN: TNPSCPAYILAGAM | LinkedIn
- Pinterest : https://in.pinterest.com/tnpscpayilagam
- Youtube : https://www.youtube.com/@TNPSCPAYILAGAM
If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!..