ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா:
- ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மீது நடத்தப்பட்ட ஆரம்ப சுற்று விவாதத்துக்குப் பிறகு நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் மசோதாவுக்கு ஆதரவாக 269 எம்பிக்கள் வாக்களித்தனர். எதிராக 198 எம்பிக்கள் வாக்களித்தனர்.
- நாடு முழுவதும் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களுக்கு ஒரே காலகட்டத்தில் தேர்தல் நடத்தும் நோக்கில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த திட்டம் தொடர்பாக ஆய்வு செய்ய முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்த குழு தனது அறிக்கையில், இந்த மசோதா சட்டமானால் அது நாட்டுக்கு நன்மை பயக்கும் என தெரிவித்தது. மேலும், இந்த மசோதாவை நிறைவேற்ற அரசியல் சாசனத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் குறித்தும் சுட்டிக்காட்டியது.
- அதன் பரிந்துரைகள் 2024, செப்டம்பர் 18 அன்று மத்திய அமைச்சரவையால் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இதையடுத்து, ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்காக அரசியல் சாசனத்தில் 129-வது திருத்தத்தை மேற்கொள்வதற்கான மசோதாவை மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மக்களவையில் 17.12.2024 தாக்கல் செய்தார்
- TNPSC EXAM POINT : ஒரே நாடு ஓரே தேர்தல் அறிக்கை:ராம்நாத் கோவிந்த் குழு பரிந்துரைகள்
மது மற்றும் போதைப் பழக்கத்தை தடுக்க மருந்து தேவை குறைப்புக்கான தேசிய செயல் திட்டம்:
- போதைப் பொருட்களுக்கு எதிராக தேசிய செயல்திட்டம் ( National Action Plan for Drug Demand Reduction (NAPDDR) ) உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- போதைப்பொருள் பயன்பாட்டைச் சமாளிக்க, இத்துறை தேசிய செயல் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இது மத்திய அரசின் நிதியுதவி பெறும் திட்டமாகும்.
- TNPSC EXAM POINT : NATIONAL ACTION PLAN FOR DRUG DEMAND REDUCTION DETAILS IN TAMIL
இந்திர தனுஷ் இயக்கம்
- நாட்டில் இதுவரை நடத்தப்பட்ட இந்திரதனுஷ் இயக்கத்தின் கீழ் அனைத்து கட்டங்களிலும் மொத்தம் 5.46 கோடி குழந்தைகளுக்கும், 1.32 கோடி கர்ப்பிணிப் பெண்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
- இந்திரதனுஷ் இயக்கம் தேசிய ஒருங்கிணைந்த தடுப்பூசி திட்டத்தின் கீழ் தடுப்பூசி செலுத்தப்படுவதை அதிகரித்துள்ளது. மாநிலங்களவையில் (17.12.2024 ) கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேல் இதனைத் தெரிவித்தார்
- இந்திர தனுஷ் இயக்கம் (MISSION INDRADHANUSH) என்பது ஒருங்கிணைந்த தடுப்பூசி இயக்கத்தின் கீழ் நடத்தப்படும் சிறப்பு தடுப்பூசி இயக்கமாகும்.
- கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படுவது குறைவாக உள்ள பகுதிகளில் உள்ளவர்களுக்கும்விடுபட்டவர்களுக்காகவும் இந்த இயக்கம் நடத்தப்படுகிறது. நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தில் பயன்படுத்தப்படும் 11 வகையான தடுப்பூசிகள் இத்திட்டத்தில் செலுத்தப்படுகின்றன.
தேசிய சுகாதாரக் கொள்கையின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட இலக்கு மற்றும் தற்போதைய சாதனைகள் :
தேசிய சுகாதார இயக்கம் (NATIONAL HEALTH MISSION):தேசிய சுகாதார இயக்கம் அதன் இரண்டு துணை இயக்கங்களான தேசிய ஊரக சுகாதார இயக்கம், தேசிய நகர்ப்புற சுகாதார இயக்கம் ஆகியவற்றை உள்ளடக்கியது. தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ், பொது சுகாதார வசதிகள் அனைவருக்கும் மலிவான, தரமான சேவையை வழங்கும் நோக்கில், பொது சுகாதார அமைப்பை மேம்படுத்துவதற்கு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தொழில்நுட்பம் மற்றும் நிதி ஆதரவை வழங்குகிறது.
- 2017-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை மகப்பேறு இறப்பு விகிதம், 1,00,000-க்கு 103 ஆக இருந்தது. 2018-20-ல் 1,00,000-க்கு 97 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
- குழந்தை இறப்பு விகிதம் 2018 இல் 1000 பிறப்புகளுக்கு 32 இல் இருந்து 2020 இல் 1000 பிறப்புகளுக்கு 28 ஆகக் குறைக்கப்பட்டது
- NFHS-4 இன் படி 2015-16 இல் 2.2 ஆக இருந்த மொத்த கருவுறுதல் விகிதம் NFHS-5 இன் படி 2019-21 இல் 2.0 ஆக குறைக்கப்பட்டுள்ளது
- பிரதமரின் மக்கள் சுகாதாரத் திட்டம் -PMJAY (Pradhan Mantri Jan Arogya Yojana) , பின்தங்கிய கிராமப்புற குடும்பங்களுக்கும், நகர்ப்புற தொழிலாளர் குடும்பங்களில் அடையாளம் காணப்பட்ட தொழில் வகைகளுக்கும் நிதிப் பாதுகாப்பை வழங்குகிறது.
- PMJAY (Pradhan Mantri Jan Arogya Yojana) டாஷ்போர்டின்படி, 12.12.2024 அன்று 36.16 கோடி பயனாளிகளுக்காக ஆயுஷ்மான் அட்டைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
யாசகர்கள் இல்லா இந்தூர் நகரம்:
- யாசகர்களுக்கு தானம் அளிப்போர் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்று மத்திய பிரதேசத்தின் இந்தூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
- இந்தியாவின் தூய்மையான நகரமாக மத்திய பிரதேசத்தின் இந்தூர் விளங்குகிறது. தொடர்ந்து 6-வது ஆண்டாக இந்த பெருமையை இந்தூர் பெற்றிருக்கிறது. அடுத்த கட்டமாக யாசகர்கள் இல்லாத நகரம் என்ற இலக்கை எட்ட இந்தூர் மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
- டெல்லி, பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், இந்தூர், லக்னோ, மும்பை, நாக்பூர், பாட்னா, அகமதாபாத் ஆகிய 10 நகரங்களை, யாசகர்கள் இல்லாத முன்மாதிரி நகரங்களாக மாற்ற மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இதன் ஒரு பகுதியாக இந்தூரில் யாசகம் அளிப்போர் மீது வழக்கு பதிவு செய்யும் நடவடிக்கையை தொடங்க இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிரபல தபேலா இசை மேதை ஜாகிர் உசேன் (வயது 73), உடல்நலக் குறைவால் காலமானார்:
- ஜாகிர் உசேனுக்கு கடந்த ஒரு வார காலமாக இதயம் தொடர்பாக, பிரச்னை இருந்தது. அவர், அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி 16.12.2024 காலை ஜாகிர் உசேன் காலமானார்.
- ஜாகிர் உசேன் மார்ச் 9, 1951 அன்று மும்பையில் பிறந்தார். அவரது தந்தை, உஸ்தாத் அல்லா ரக்கா, ஒரு புகழ்பெற்ற தபேலா வாத்தியக் கலைஞர்.
- 1988 ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருதும், 2002 ஆம் ஆண்டில் பத்ம பூஷன் விருதும் அவருக்கு வழங்கப்பட்டது. மேலும், 2009 ஆம் ஆண்டில் கிராமி விருதையும் வென்றார்.
OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :
FOLLOWS ON:
- Instagram : / tnpscpayilagam
- Personal Twitter: / @TNPSCPayilagam) / X(twitter.com)
- Facebook Page : / TNPSCPAYILAGAM
- Email: tnpscpayilagam@gmail.com
- Telegram: https://t.me/TNPSCPAYILAGAM
- LinkedIN: TNPSCPAYILAGAM | LinkedIn
- Pinterest : https://in.pinterest.com/tnpscpayilagam
- Youtube : https://www.youtube.com/@TNPSCPAYILAGAM
If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!..