CURRENT AFFAIRS IN TAMIL DECEMBER 2024 ( 18.12.2024 )

TNPSC PAYILAGAM
By -
0

CURRENT AFFAIRS IN TAMIL DECEMBER 2024 ( 18.12.2024 )




பாரத்மாலா பரியோஜனா திட்டம்:

  • நாட்டில் போக்குவரத்துச் செலவைக் குறைக்கவும், இணைப்பை மேம்படுத்தவும் 34,800 கிலோமீட்டர் தூரத்தை உள்ளடக்கிய பாரத்மாலா பரியோஜனா திட்டத்திற்கு (BHARATMALA PARIYOJANA) 2017-ல் மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. 
  • 31.10.2024 நிலவரப்படி, மொத்தம் 26,425 கிலோ மீட்டர் நீளமுள்ள திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில் 18,714 கிலோ மீட்டர் திட்டங்கள் பல்வேறு மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளன.
  • பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் 30.11.2024 வரை ரூ.4.72 லட்சம் கோடி செலவிடப்பட்டுள்ளது.
  • துறைமுகம், கடலோர இணைப்புச் சாலைகள் பிரிவின் கீழ் 189 கிலோமீட்டர் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், ஒடிசா, மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு கடலோர மாநிலங்களில் உள்ள பெரிய, சிறு துறைமுகங்களுக்கு இணைப்பை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. 
  • தமிழ்நாட்டில்  1476 கிலோ மீட்டர் நீளத்திற்கான  திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு அதில் 1185 கிலோ மீட்டர் நீளத்திற்கு கட்டுமான திட்டங்கள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவில் சாலை விபத்துகள்- குறித்த வருடாந்திர அறிக்கை:

  • மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் பதில் அளித்துள்ள மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி, நாட்டில் சாலை விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன. 2021ம் ஆண்டு 4,12,432 சாலை விபத்துக்கள் நிகழ்ந்த நிலையில், இது 2022ம் ஆண்டு 4,61,312 ஆக அதிகரித்துள்ளது.
  • சாலை விபத்துக்களில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. 2022ல் தமிழகத்தில் அதிகபட்சமாக 64,105 சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ளன. 
  • மத்தியப் பிரதேசத்தில் 54,432 சாலை விபத்துக்களும், உத்தரப்பிரதேசத்தில் 41,746 சாலை விபத்துக்களும், 
  • கேரளாவில் 43,910 சாலை விபத்துக்களும், கர்நாடகாவில் 39,762 சாலை விபத்துக்களும் நடந்துள்ளன. 
  • மகாராஷ்டிராவில் 33,383, தெலங்கானாவில் 21,619, ஆந்திரப் பிரதேசத்தில் 21,249, குஜராத்தில் 15,751 சாலை விபத்துக்கள் நேரிட்டுள்ளன.


 6-வது உலக கேரம் போட்டி 2024:

  • அமெரிக்காவில் நடைபெற்ற 6-வது உலக கேரம் போட்டியில் தனிநபர், இரட்டையர் பிரிவு மற்றும் குழு போட்டியில் தலா ஒரு தங்க பதக்கம் வென்ற எம்.காசிமாவுக்கு சிறப்பு ஊக்க தொகையாக ரூ.1.00 கோடியும், 
  • இரட்டையர் பிரிவு மற்றும் குழு போட்டியில் தலா ஒரு தங்க பதக்கம் வென்ற வி.மித்ரா அவர்களுக்கு சிறப்பு ஊக்க தொகையாக ரூ.50.00 லட்சமும், 
  • குழு போட்டியில் ஒரு தங்கம் மற்றும் இரட்டையர் பிரிவில் ஒரு வெள்ளி பதக்கம் வென்ற கே.நாகஜோதிக்கு சிறப்பு ஊக்க தொகையாக ரூ.50.00 லட்சமும் என சிறப்பு உயரிய ஊக்க தொகையாக மொத்தம் ரூ. 2.00 கோடிக்கான காசோலைகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  (18.12.2024) வழங்கினார்.

ஓய்வு:

  • இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
  • இதுவரை, 38 வயதான அஸ்வின் 106 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார், 537 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
  • அவர், 8 முறை ஒரே போட்டியில் 10 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். சிறப்பாக பேட்டிங் செய்பவராகவும் அஸ்வின் விளங்கினார். ஆறு முறை சதம் அடித்துள்ள அஸ்வின், 14 முறை அரை சதம் அடித்துள்ளார்.


OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :


FOLLOWS ON:

  • Email: tnpscpayilagam@gmail.com

 

If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!..

Post a Comment

0Comments

Post a Comment (0)