உலக பயணம் மற்றும் சுற்றுலா மேம்பாட்டு குறியீடு 2024
- உலக பொருளாதார மன்றம் வெளியிட்டுள்ள பயணம் மற்றும் சுற்றுலா மேம்பாட்டு குறியீடு 2024 (Travel and Tourism Development Index (TTDI) 2024 )அறிக்கையின்படி, 119 நாடுகளில் இந்தியா 39 வது இடத்தில் உள்ளது. 2021 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட முந்தைய குறியீட்டில், இந்தியா 54 வது இடத்தில் இருந்தது.
- சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் மருத்துவ மதிப்பு பயணத்திற்கான இந்தியாவின் அதிகாரப்பூர்வ தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் மருத்துவ பராமரிப்பு அல்லது ஆரோக்கிய சேவைகளை நாடும் எந்தவொரு சர்வதேச நோயாளியும் வருகை தருவதன் மூலம் அட்வான்டேஜ் ஹெல்த்கேர் இந்தியா (Advantage Healthcare India portal) தளத்தைப் பார்வையிடலாம்.
- நாட்டில் உள்நாட்டு சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக 2020 ஜனவரியில் சுற்றுலா அமைச்சகம் "நமது நாட்டைப் பாருங்கள்" (Dekho Apna Desh Initiative) என்ற முன்னெடுப்பைத் தொடங்கியது. இந்த முன்முயற்சியின் கீழ், இணையதளம், வினாடி வினா, உறுதிமொழி, கருத்தரங்குகள், சுற்றுலா ஊக்குவிப்பு நிகழ்வுகள், சுற்றுப்பயணங்கள், இணையதளம், சமூக ஊடகங்கள் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இவற்றின் மூலம் சுற்றுலா அமைச்சகமானது இந்தியாவில் சுற்றுலா மேம்பட வழிவகை செய்துள்ளது.
வெளிநாட்டு நேரடி முதலீடு 2000- 2024:
- 2000 முதல் 2024 வரை, மொத்த வெளிநாட்டு நேரடி முதலீடு (Foreign Direct Investment (FDI) ) 991 பில்லியன் அமெரிக்க டாலர் பதிவு செய்யப்பட்டுள்ளது, கடந்த பத்து நிதியாண்டுகளில் (2014-2024) 67% (667 பில்லியன் அமெரிக்க டாலர்) பெறப்பட்டுள்ளது.
- உற்பத்தித் துறையில் வெளிநாட்டு நேரடி முதலீடு 69% அதிகரித்து, 2004-2014 ஆம் ஆண்டில் 98 பில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து 2014-2024 ஆம் ஆண்டில் 165 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது.
- நிதியாண்டு 2024-25-ல் வெளிநாட்டு நேரடி முதலீடு வருகை (ஜூன் 2024 வரை): 2024-25 நிதியாண்டின் முதல் காலாண்டில், வெளிநாட்டு நேரடி முதலீடு 22.5 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டியது, இது 2023-24 நிதியாண்டின் முதல் காலாண்டில் 17.8 பில்லியன் அமெரிக்க டாலர்களுடன் ஒப்பிடும்போது 26% அதிகமாகும்.
அறிவுசார் சொத்துரிமை உருவாக்கம்:
- 2023-24 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட 1,03,057 காப்புரிமைகள் 2014-15 இல் வழங்கப்பட்ட காப்புரிமைகள் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது பதினேழு மடங்கு அதிகரித்துள்ளது.
- 2014-15 உடன் ஒப்பிடும்போது 2023-24 ஆம் ஆண்டில் வர்த்தக முத்திரை பதிவுகள் ஏழு மடங்கு அதிகரித்துள்ளன.
- பதிவு செய்யப்பட்ட புவிசார் குறியீடுகளின் எண்ணிக்கை 2023-24 ஆம் ஆண்டில் 635 ஆக அதிகரித்துள்ளது.
- மாணவர்கள், கல்வியாளர்கள் மற்றும் தொழில்துறையினரிடையே அறிவுசார் சொத்துரிமை விழிப்புணர்வை அதிகரிக்க தொடர் முயற்சிகள் செய்யப்படுகின்றன.
- உலகளாவிய கண்டுபிடிப்பு குறியீட்டில் (Global Innovation Index (GII)) இந்தியாவின் தரவரிசை 2024-ல் 39 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
அஞ்சல் துறை: 2024 ஆம் ஆண்டின் செயல்பாடுகள்:
- அஞ்சல் நிலைய சட்டம் 2023 என்ற புதிய அஞ்சல் சட்டத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியது. இது டிசம்பர் 24, 2023 அன்று குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றது. இந்த சட்டம் ஜூன் 18, 2024 அன்று நடைமுறைக்கு வந்தது, இது 1898-ம் ஆண்டின் இந்திய அஞ்சல் நிலைய சட்டத்தை மாற்றியது.
- பிஎம்ஏ தொழில்நுட்பம் (பார்சல் கண்காணிப்பு பயன்பாடு) அறிமுகம் நிகழ்நேர விநியோக தகவல் பகிர்வில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. மே 2019 முதல் அக்டோபர் 2024 வரை, கணக்குக்குரிய அஞ்சல் விநியோகம் 4.33 லட்சம் என்ற எண்ணிக்கையிலிருந்து, 5.35 கோடியாக வளர்ச்சியை எட்டியுள்ளது.
- இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் நடப்பு ஆண்டில் 2.68 கோடி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில் 1.56 கோடி கணக்குகள் அதாவது 59% கணக்குகள் பெண்களின் வங்கி கணக்குகள் ஆகும். இந்தியாவின் கிராமங்களில் 77% கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.
- 1.04 கோடி வாடிக்கையாளர்கள் மொபைல் பேங்கிங் சேவையைப் பெற்றுள்ளனர்.69 லட்சம் பேர் விர்ச்சுவல் டெபிட் கார்டு சேவைகளை பயன்படுத்தியுள்ளனர்.ஏஇபிஎஸ் மூலம் சுமார் 2,600 கோடி வழங்கப்பட்டுள்ளது.
- 1.56 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சுமார் 312 கோடி பரிவர்த்தனைகள் யுபிஐ மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளன.ஏறக்குறைய 3.62 கோடி ஐ.பி.பி.பீ வாடிக்கையாளர்கள் நேரடி பணப் பரிமாற்ற பலன்களைப் பெற்றுள்ளனர். 20 கோடி நேரடி பணப் பரிமாற்றம் மூலம் ரூ. 34,950 கோடி செலுத்தப்பட்டு உள்ளது.
- 1.15 கோடி ஆதார் மொபைல் அப்டேட்கள் செய்யப்பட்டுள்ளன.
உணவு மற்றும் பொது விநியோகத்துறை- 2024 ஆம் ஆண்டின் செயல்பாடுகள்:
- பிரதமரின் ஏழைகள் நலவாழ்வு உணவுத் திட்டத்தின்(கரீப் கல்யாண் அன்ன யோஜனா)கீழ் இலவச உணவு தானியங்கள் வழங்கப்பட்டன. இந்த திட்டத்தின் கீழ் இதுவரையிலான 7 கட்டங்களில் 1118 லட்சம் மெட்ரிக்டன் உணவு தானியங்கள் ஒதுக்கப்பட்டது. இதற்கான திட்டமிடப்பட்ட மொத்த நிதி ஒதுக்கீடு சுமார் ரூ.3.91 லட்சம் கோடியாகும்.
- நாட்டின் 75-வது சுதந்திர தினத்தன்று (2021 ஆகஸ்ட் 15), மக்களுக்கு ஊட்டச்சத்து கிடைக்கும் வகையில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்தார். இந்தத் திட்டம் 2024 மார்ச் மாதவாக்கில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டது. இதில் 100 சதவீதம் தானியம் விநியோகத்துகாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
- பொது விநியோகத் திட்டத்தில் சீர்திருத்தங்களை இலக்காகக் கொண்டு தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் கீழ் 100 சதவீதம் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட ரேஷன் அட்டைகள் வழங்கப்படுகின்றன. இதன் மூலம், 80 கோடி பயனாளிகளைக் கொண்ட 20.54 கோடி ரேஷன் அட்டைகளுக்கு பொது விநியோகத் திட்டத்தின் மூலம் உணவு தானியங்கள் வழங்கப்படுகின்றன.
- 99.8 சதவீதத்திற்கும் அதிகமான ரேஷன் அட்டைகள் ஆதார் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 5.43 லட்சத்தில் 5.41 லட்சம் (அதாவது 99.8 சதவீதம்) நியாயவிலைக் கடைகள் மின்னணு விற்பனையை தொடங்கியுள்ளன. உணவு தானியங்கள் விநியோகத்தின் கீழ், பயோ மெட்ரிகல் மூலம் 97 சதவீத பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
- 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டம் 4 மாநிலங்களில் தொடங்கப்பட்டது. தற்போது 36 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில், 80 கோடி பயனாளிகளுக்கு, அதாவது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் 100 சதவீதம் பேருக்கு இந்த அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
ஐஐடி மெட்ராஸ்)-2024 ஆம் ஆண்டின் செயல்பாடுகள்:
- இந்தியக் கல்வி வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில், தரவரிசையில் ‘ஒட்டுமொத்த’ பிரிவில் ஐஐடி மெட்ராஸ் தொடர்ந்து 6-வது ஆண்டாக முதலிடத்தில் இருந்து வருகிறது. 2016-ல் தரவரிசை தொடங்கப்பட்ட காலம் முதல் இதுவரை தொடர்ச்சியாக 9-வது ஆண்டாக ‘பொறியியல்’ பிரிவிலும் முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது
- கியூஎஸ் உலக பல்கலைக்கழக தரவரிசையில் (QS World University Rankings – QS WUR) கடந்த ஆண்டு 285-வது இடத்தில் இருந்த இக்கல்வி நிறுவனம், ‘QS WUR 2025’-ல் 227-வது இடத்திற்கு தனது நிலையை மேம்படுத்தியுள்ளது.
- அண்மையில் தில்லியில் நடைபெற்ற நிகழ்வில், இந்திய தொழில் கூட்டமைப்பு தொழில்துறை அறிவுசார் சொத்துரிமைக்கான விருதை (CII Industrial IP Award 2024) ஐஐடி மெட்ராஸ்-க்கு வழங்கி கவுரவித்தது.
- புத்தொழில் நிறுவனங்கள், தொழில்ஊக்குவிப்பு திட்டம் (Incubation Program), தொழில்நுட்ப வர்த்தக ஊக்குவிப்பு (Technology Business Incubator) போன்ற முன்முயற்சிகள் மூலம், ஐஐடி மெட்ராஸ் மாணவர்களிடையே தொழில்முனைவு ஆர்வத்தை வளர்த்து வருகிறது.
- இக்கல்வி நிறுவனம் 2023-24 ஆம் ஆண்டில், முன்னாள் மாணவர்கள், பெரு நிறுவனங்கள் மற்றும் தொழில்துறையினரிடமிருந்து ரூ. 513 கோடியைத் திரட்டியுள்ளது. ஐஐடி மெட்ராஸ் வரலாற்றில் முன்எப்போதும் இல்லாத அளவுக்கு இது அதிகபட்சத் தொகையாகும்.
உயிரி எரிசக்தி பிரிவின் வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கான அரசின் கொள்கைகள்:
- எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும், இந்தியாவில் நிலையான வளர்ச்சியை ஊக்குவகப்பதற்கும் சுத்தமான எரிசக்தி தீர்வுகளை கண்டறிவதற்கும் உயிரி எரிசக்தி மற்றும் கழிவு-எரிசக்தி தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் நோக்கத்துடன், தேசிய உயிரி எரிசக்தி திட்டத்தை அரசு அறிவித்துள்ளது.
- கூடுதலாக, உயிரி எரிபொருள் பிரிவின் வளர்ச்சியை விரைவுபடுத்தவும், 2025-ம் ஆண்டிற்குள் மேம்படுத்தப்பட்ட எத்தனால் கலவையை அடையவும், அரசு, 2014 முதல், எத்தனால் உற்பத்திக்கான மூலப்பொருட்களை விரிவுபடுத்துதல், கரும்பு கொள்முதல் செய்வதற்கான விலை அமைப்பு முறையை நிர்வகிப்பது உள்ளிட்ட பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. எத்தனால் கலந்த பெட்ரோல் திட்டத்தின் கீழ், எத்தனால் மீதான ஜிஎஸ்டி விகிதம் 5% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. பல்வேறு எத்தனால் வட்டி மானியத் திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
- லாபகரமான எத்தனால் உற்பத்தியை நோக்கி தரமான மக்காச்சோள உற்பத்திக்காக நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் உட்பட பல்வேறு பங்குதாரர்களுக்கு 'எத்தனால் தொழிற்சாலைகளின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் மக்காச்சோள உற்பத்தியை மேம்படுத்துதல்' திட்டம் பற்றி விளக்கப்பட்டது.
- எண்ணெய் வயல்களின் (ஒழுங்குமுறை மற்றும் மேம்பாடு) திருத்த மசோதா, 2024, எண்ணெய் மற்றும் எரிவாயுவின் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும். இறக்குமதியைச் சார்ந்திருப்பதைக் குறைக்கும் நோக்கத்துடன் அரசு இதனை அறிமுகப்படுத்தியுள்ளது. நாட்டில் பெட்ரோலிய செயல்பாடுகளை விரைவுபடுத்த தேவையான மூலதனம் மற்றும் தொழில்நுட்பத்தை கொண்டு வர ஆய்வு மற்றும் உற்பத்தி துறையில் முதலீடுகளை ஈர்ப்பது உட்பட பல்வேறு நோக்கங்களை இந்த மசோதா கொண்டுள்ளது.
- கடந்த 10 ஆண்டுகளில், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களால் பெட்ரோலில் எத்தனால் கலக்கும் நடவடிக்கை காரணமாக, தோராயமாக 557 லட்சம் மெட்ரிக் டன் கரியமில வாயு உமிழ்வைக் குறைக்க உதவியுள்ளது.
'ஸ்பர்ஷ்' ஓய்வூதிய குறை தீர்க்கும் முகாம்:
- 'SPARSH (ஸ்பர்ஷ்)' மூலம் பாதுகாப்பு ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறும் முன்னாள் படைவீரர்கள் (ராணுவம், கடற்படை, விமானப்படை) மற்றும் சார்ந்தோர்கள் தங்களது வாழ்நாள் சான்று சமர்ப்பிப்பதில் ஏற்படும் இன்னல்கள் மற்றும் ஓய்வூதியம் சார்ந்த குறைகளை நிவர்த்தி செய்ய சென்னை பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் (CDA, Chennai) அலுவலகத்தின் சார்பாக, 'SPARSH (ஸ்பர்ஷ்)' ஓய்வூதிய குறை தீர்ப்பு முகாம் 21.12.2024 அன்று காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை வேலூரில் உள்ள வி ஐ டி தொழில்நுட்பக் பல்கலையின், அண்ணா கலையரங்கில் நடைபெற உள்ளது.
- இவ்விழாவில் 50 குறை தீர்க்கும் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது. சென்னை பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர், திரு .T.ஜெயசீலன், IDAS இக்குழுக்களுக்கு தலைமையேற்று வழிநடத்துகிறார். வாழ்நாள் சான்று அளிக்க இயலாதோர் மற்றும் தவறியோர் அதனை டிஜிட்டல் முறையில் அளித்திட முகாமில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் தொடர்பான அனைத்து குறைபாடுகளுக்கும் இம்முகாமில் தீர்வு காணப்படும். ஒரு பதவி, ஒரே ஓய்வூதியம் (OROP) தொடர்பான சந்தேகங்கள் மற்றும் குறைகள் நிவர்த்தி செய்யப்படும்.
கே 9 வஜ்ரா-டி ரக பீரங்கிகள் ஒப்பந்தம்:
- லார்சன் & டூப்ரோ லிமிடெட் நிறுவனத்துடன் 155 மிமீ / 52 காலிபர் கே 9 வஜ்ரா-டி ரக பீரங்கிகள் கொள்முதல் செய்வதற்காக 7,628.70 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தில் பாதுகாப்பு அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது.
- 2024-ம் ஆண்டு டிசம்பர் 20-ம் தேதி புதுதில்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில் அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் எல் அண்ட் டி நிறுவனத்தின் பிரதிநிதிகள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
- கே9 வஜ்ரா-டி நவீன ரக பீரங்கிகளை (K9 VAJRA-T) கொள்முதல் மூலம் ராணுவத்தின் ஒட்டுமொத்த பாதுகாப்பு தயார் நிலை மேம்படும். இத்தகைய பீரங்கிகளின் பயன்பாட்டுத் திறன் அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்புப் படைகளின் திறனை அதிகரிக்கும். அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய இந்த துப்பாக்கி பூஜ்ஜியத்திற்கும் குறைவான வெப்பநிலையில் செயல்படுவதுடன், துல்லியமாகவும் நீண்ட தூரம் மற்றும் அதிக உயரத்தில் உள்ள இலக்கை தாக்கும் வல்லமையும் கொண்டதாகும்.
OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :
FOLLOWS ON:
- Instagram : / tnpscpayilagam
- Personal Twitter: / @TNPSCPayilagam) / X(twitter.com)
- Facebook Page : / TNPSCPAYILAGAM
- Email: tnpscpayilagam@gmail.com
- Telegram: https://t.me/TNPSCPAYILAGAM
- LinkedIN: TNPSCPAYILAGAM | LinkedIn
- Pinterest : https://in.pinterest.com/tnpscpayilagam
- Youtube : https://www.youtube.com/@TNPSCPAYILAGAM
If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!..