CURRENT AFFAIRS IN TAMIL DECEMBER 2024 ( 01.12.2024 )

TNPSC PAYILAGAM
By -
0

CURRENT AFFAIRS IN TAMIL DECEMBER 2024 ( 01.12.2024 )


ஐநாவின் அமைதிக் கட்டமைக்கும் ஆணையம் இந்தியா மீண்டும் தேர்வு :

  • க்கிய நாடுகள் சபையில் 2025-2026ம் ஆண்டிற்கான அமைதியை கட்டமைக்கும் ஆணையத்திற்கு (United Nations Interim Peacekeeping Force-UNIFIL) இந்தியா மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • சமாதானத்தை கட்டமைக்கும் ஆணையம் (UNIFIL) என்பதால் மோதலால் பாதிக்கப்பட்ட நாடுகளில் சமாதான முயற்சிகளை ஆதரிக்கும் மற்றும் அரசுகளுக்கு இடையேயான ஆலோசனை அமைப்பாக செயல்படும். கடந்த 2005ம் ஆண்டு முதல் அமைதி காக்கும் ஆணையத்தின் உறுப்பினராக இந்தியா நீடித்து வருகின்றது.


பிரம்​மோஸ் ஏவுகணை ஒப்பந்தம் :

  • பிரம்​மோஸ் ஏவுகணையை வாங்க பல நாடுகள் விருப்பம் தெரி​வித்து வருகின்​றன்றன. அந்த வகையில் பிரம்​மோஸ் ஏவுகணையை வாங்க ரூ.3,100 கோடி மதிப்​பிலான ஒப்பந்​தத்​தில் பிலிப்​பைன்ஸ் கையெழுத்​திட்​டுள்​ளது. இது முதல் சர்வதேச ஒப்பந்தம் ஆகும். முதல் தொகுப்பு இந்த ஆண்டின் தொடக்​கத்​தில் பிலிப்​பைன்ஸ் வசம் ஒப்படைக்​கப்​பட்​டது.
  • இந்நிலை​யில், வியட்​நாம், இந்தோ​னேசியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) ஆகிய 3 நாடு​கள், பிரம்​மோஸ் ஏவுகணையை வாங்க ஆர்வமாக உள்ள​தாக, பிரம்​மோஸ் ஏரோஸ்​பேஸ் நிறு​வனத்​தின் இணை நிர்வாக இயக்​குநர் அலெக்​சாண்டர் மாக்​சிசேவ் ரஷ்ய செய்தி நிறு​வனத்​திடம் (டாஸ்) தெரி​வித்​துள்ளார். இந்த 3 நாடு​களுடன் பேச்சு​வார்த்தை நடைபெற்று வருவ​தாக​வும் விரை​வில் ஒப்பந்தம் கையெழுத்​தாகும் என்றும் அவர் தெரி​வித்​துள்ளார்.


கவாச் தொழில்நுட்பம் :

  • விபத்தைத் தவிர்ப்பதில் முக்கிய பங்காற்றும் கவாச் தொழில்நுட்பம் தென் மத்திய மற்றும் வடக்கு ரயில்வேயில் சுமார் 1548 கிலோமீட்டர் தொலைவுக்கு செயல்படுத்தப்பட்டுள்ளது
  • டெல்லி – மும்பை, டெல்லி – ஹவுரா மார்க்கத்தில் சுமார் 3000 கிலோ மீட்டர் ரயில் பாதையில் கவாச் தொழில் நுட்பத்தை செயல்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது என்று மாநிலங்களவையில் திமுக எம்.பி. கனிமொழி என்.வி.என்.சோமு எழுப்பிய கேள்விக்கு, ரயில்வேத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதிலளித்துள்ளார்.


அக்னி வாரியர் 2024 :

  • மராட்டிய மாநிலம் தேவ்லாலியில், இந்தியா மற்றும் சிங்கப்பூர் ராணுவ படைகள் இணைந்து 'அக்னி வாரியர் 2024 ' என்ற பெயரில் 13-வது கூட்டு ராணுவ பயிற்சியை மேற்கொண்டன. கடந்த 28-ந்தேதி தொடங்கிய இந்த கூட்டு ராணுவ பயிற்சி, (30.11.2024) நிறைவு பெற்றது. இந்த நிறைவு விழாவில் இரு நாட்டு ராணுவ படைகளின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
  • இந்த கூட்டு ராணுவ பயிற்சி மராட்டியத்தின் தேவ்லாலியில் உள்ள பீல்ட் பைரிங் ரேஞ்ச்ஸில் இந்தியா மற்றும் சிங்கப்பூர் ராணுவ படையினரால் கூட்டு ராணுவ பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து நவம்பர் 28 முதல் நவம்பர் 30 வரை நடத்தப்பட்ட மூன்று நாள் பயிற்சியில், சிங்கப்பூர் ஆயுதப் படையின் 182 வீரர்களும், பீரங்கி படையைச் சேர்ந்த 114 வீரர்களைக் கொண்ட இந்திய ராணுவக் குழுவும் பங்கேற்றதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.


உலக எய்ட்ஸ் தினம் 2024 : World AIDS Day 2024 :

  • 1988 முதல் ஆண்டுதோறும் டிசம்பர் 1 ஆம் தேதி அனுசரிக்கப்படும் உலக எய்ட்ஸ் தினம், ஹெச்.ஐ.வி / எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் பெருந்தொற்றுக்கு எதிரான ஒற்றுமையை நிரூபிப்பதற்கும் மக்களை ஒன்றிணைப்பதற்கான உலகளாவிய தளமாக செயல்படுகிறது. 
  • மிக முக்கியமான சர்வதேச சுகாதார அனுசரிப்புகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்ட இந்த நாள், விழிப்புணர்வை பரப்புவது மட்டுமல்லாமல், எய்ட்ஸ் நோயால் உயிர் இழந்தவர்களை நினைவுகூர்கிறது மற்றும் சுகாதார சேவைகளுக்கான விரிவாக்கப்பட்ட அணுகல் போன்ற மைல்கற்களைக் கொண்டாடுகிறது. 
  • உலக எய்ட்ஸ் தினம் 2024 கருப்பொருள்: "உரிமையின் பாதையில் செல்லுங்கள்: என் உடல்நலம், என் உரிமை!” (“Take the rights path: My health, my right!”)
  • இந்தியாவில் 2.5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் ஹெச்.ஐ.வியுடன் வாழ்ந்து வருவதை இந்தியா ஹெச்.ஐ.வி மதிப்பீடுகள் 2023 அறிக்கை எடுத்துக்காட்டுகிறது. இருந்தபோதிலும், நாடு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது, வயது வந்தோருக்கான ஹெச்.ஐ.வி பாதிப்பு 0.2% ஆகவும், வருடாந்திர புதிய ஹெச்.ஐ.வி நோய்த்தொற்றுகள் 66,400 ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது, இது 2010 முதல் 44% குறைவு. உலகளாவிய குறைப்பு விகிதத்தை விட இந்தியா 39% சிறப்பாக செயல்பட்டுள்ளது.


OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN GOOGLE DRIVE :


FOLLOWS ON:

  • Email: tnpscpayilagam@gmail.com

 

If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!..




Post a Comment

0Comments

Post a Comment (0)