இலவச திட்டங்கள் -ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கை :
- ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: விவசாயக் கடன் தள்ளுபடி, விவசாயம் மற்றும் குடும்பங்களுக்கு இலவச மின்சாரம், பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு உதவித்தொகை மற்றும் இலவச போக்குவரத்து அறிவிப்பு என பல மாநிலங்கள் இலவச சலுகைகளை வாரி வழங்குவது பல்வேறு எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால், சமூக நலத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு செய்வது பாதிக்கப்பட்டுள்ளது.
- மேலும், உள்கட்டமைப்புக்கு பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்பதுடன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதும் கணிசமாக குறைந்துள்ளது. 2018-19 முதல், மாநிலங்கள் வழங்கும் மானியங்கள் நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட் அளவை விட 2.5 மடங்கு அதிகரித்து ரூ.4.7 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இவ்வாறு ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
ஜிஎஸ்டி கவுன்சிலின் 55-வது கூட்டம் 2024:
- ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மரில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 55-வது கூட்டம் 21.12.2024 நடந்தது. இதில் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, கோவா, ஹரியானா, ஜம்மு காஷ்மீர், மேகாலயா, ஒடிசா மாநில முதல்வர்கள், தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு உட்பட பல்வேறு மாநில நிதி அமைச்சர்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:
- செறிவூட்டப்பட்ட அரிசி மீதான வரி 18-ல் இருந்து 5% ஆக குறைக்கப்படும். ஜீன் தெரபிக்கு முழு வரிவிலக்கு அளிக்கப்படும்.
- பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் மூலம் விற்கப்படும் பழைய மின்சார மற்றும் சிறிய வகை (1,200 சிசிக்கு உட்பட்ட) பெட்ரோல், டீசல் உள்ளிட்ட கார்களுக்கான வரி 12-ல் இருந்து 18 சதவீதமாக உயர்த்தப்படும்.
- 50% பிளை ஆஷ் மூலம் தயாரிக்கப்பட்ட ஏசிசி பிளாக் குகளுக்கான வரி 18-ல் இருந்து 12% ஆக குறைக்கப்படும்.
- பாதுகாப்பு துறையில் தரை யில் இருந்து தொலைதூர வான் இலக்கை தாக்கும் ஏவுகணை அமைப்புக்கான உப கரணம், மென்பொருளுக்கு வரி விலக்கு அளிக்கப்படும்.
நீல்கிரி, சூரத் போர்க்கப்பல் கடற்படையிடம் ஒப்படைப்பு:
- கடற்படை பயன்பாட்டுக்காக பி17ஏ கிளாஸ் (Yard 12651 (Nilgiri) -Stealth Frigate ) மற்றும் பி15பி கிளாஸ் (Yard 12707 (Surat)-Stealth Guided Missile Destroyer) கப்பல்கள் தயாரிக்க மும்பையில் உள்ள மசகான் டாக்ஸ் ஷிப் பில்டர்ஸ் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது.
- இந்த இரு கப்பல்களின் வடிவமைப்பை இந்திய கடற்படையின் போர்க்கப்பல் வடிவமைப்பு பிரிவு உருவாக்கி கொடுத்தது. அதன்படி போர்க்கப்பல் மேற்பார்வை குழு கண்காணிப்பில், உலகத்தரத்துக்கு இணயைாக இந்த 2 போர்க்கப்பல்களும் உருவாக்கப்பட்டுள்ளன.
- சூரத் போர்க்கப்பலில் இருந்து பிரம்மோஸ் மற்றும் பராக்-8 ரக வான் பாதுகாப்பு ஏவுகணைகளை ஏவமுடியும். மேலும், உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட நீர்மூழ்கி கப்பல் ஆயுதங்களும், சென்சார்கள் இதில் உள்ளன. கப்பலின் அடிப் பகுதியில் சோனார் ஹம்சா என்ஜி, டார்பிடோ ஏவுகணைகளை ஏவும் ட்யூப் லாஞ்சர், ஏஎஸ்டபிள்யூ ராக்கெட் லாஞ்சர் ஆகியைவை இந்த கப்பலில் உள்ளன.
குவைத்தின் உயரிய விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது:
- பிரதமர் மோடி இப்போது குவைத் நாட்டிற்குச் சுற்றுப் பயணம் சென்றுள்ளார். கடந்த 43 ஆண்டுகளில் இந்திய பிரதமர் ஒருவர் குவைத் நாட்டிற்குச் செல்வது இதுவே முதல்முறையாகும்.
- இதற்கிடையே சிறப்புமிக்க அரசுமுறை பயணத்தின் போது, குவைத்தின் அமீர் ஷேக் மெஷல் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல் சபாவினால், பிரதமர் நரேந்திர மோடிக்கு குவைத்தின் உயரிய சிவிலியன் கௌரவமான தி ஆர்டர் ஆஃப் முபாரக் அல் கபீர் வழங்கப்பட்டது.
- பிரதமர் நரேந்திர மோடிபெறும் 20வது சர்வதேச விருது இதுவாகும்
இந்திய வன நிலை அறிக்கை 2023:
- மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றத் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் (21.12.2024) டேராடூனில் உள்ள வன ஆராய்ச்சி நிறுவனத்தில் 'இந்திய வன நிலை அறிக்கை 2023-ஐ (ISFR 2023) வெளியிட்டார்.
- நாட்டின் மொத்த வனம் மற்றும் மர அடர்த்திப் பரப்பு 8,27,357 சதுர கிலோ மீட்டராக உள்ளது என்றும், இது நாட்டின் புவியியல் பரப்பளவில் 25.17 சதவீதம் என்றும் வெளியிடப்பட்ட இந்திய வன நிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- TNPSC EXAM KEY POINTS : INDIA STATE OF FOREST REPORT 2023 DETAILS IN TAMIL
ஐ.நா.வின் உயர்ந்த சுற்றுச்சூழல் விருது 2024 :
- மேற்கு மலைத் தொடரைப் பாதுகாக்க வேண்டும் என அறிவியல்பூர்வமாக அறிக்கையை முன்வைத்த சூழலியலாளர் மாதவ் காட்கிலுக்கு, ஐ.நா.வின் உயர்ந்த சுற்றுச்சூழல் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
- ‘சாம்பியன்ஸ் ஆஃப் தி எர்த்’ என்றழைக்கப்படும் இந்த விருது மேற்கு மலைத் தொடர் குறித்த விரிவான ஆய்வை முன்வைத்த குழுவிற்கு அவர் தலைமை வகித்ததற் காக அறிவிக்கப்பட்டுள்ளது.
- மேற்கு மலைத் தொடர் யுனெஸ்கோவின் உலக மரபு இயற்கைத் தலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலக உயிர்ப்பன்மை செழிப்பிடங்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது. மேற்கு மலைத் தொடர் சூழலியல் நிபுணர் குழுவின் தலைவராக மாதவ் காட்கில் செயல்பட்டிருந்தார்.
டிங்கா டிங்கா’ -வைரஸ் :
- உகாண்டாவில் உள்ள புண்டிபுக்யோ மாவட்டத்தில் சுமார் 300-க்கும் அதிகமானவர்கள் `டிங்கா டிங்கா’ என அவர்கள் நாட்டில் குறிப்பிடப்படும் மர்ம வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்தித்தாள்கள் தெரிவிக்கின்றன.
- இந்த வைரஸ், பெரும்பாலும் பெண்கள் மற்றும் சிறுமிகளை குறிவைத்து தாக்குகிறது. அதிகப்படியான உடல் நடுக்கம் மற்றும் காய்ச்சல் போன்ற சிக்கல்கள் இவற்றின் முதன்மையான அறிகுறிகளாக உள்ளன. இது உடல் இயக்கத்தையும் கடுமையாக பாதிக்கிறது எனவும் கண்டறியப்பட்டுள்ளது.
- இந்த டிங்கா டிங்கா வைரஸ் ஏற்படுவது எப்படி என்பது குறித்து அறிவியல் விஞ்ஞானிகளும், மருத்துவ நிபுணர்களும் ஆய்வு நடத்தி வருகின்றனர். ஆனால் இந்த நோய் வருவது எப்படி என்பது குறித்து இதுவரை அறியமுடியவில்லை. இதுதொடர்பான ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இது ஒருவகையான பரவும் வகையிலான வைரஸ் என்று டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.
உலக தியான தினம் :
- இந்தியா உள்ளிட்ட நாடுகள் முன்மொழிந்த தீர்மானத்தை ஏற்று, டிசம்பர் 21ம் தேதியை சர்வதேச தியான தினமாக அனுசரிக்க, ஐ.நா., பொது சபை ஒருமனதாக ஒப்புதல் அளித்தது.
- இந்தாண்டு முதல் உலக தியான தினம் கடைபிடிக்கப்படுகிறது.
- கடந்த 2014ல், இந்தியாவின் முயற்சியைஏற்று, ஜூன் 21ம் தேதியை சர்வதேச யோகா தினமாக அனுசரிக்கும் அறிவிப்பை ஐ.நா., வெளியிட்டது. இந்நிலையில், டிசம்பர் 21ம் தேதி, சர்வதேச தியான தினமாக அனுசரிக்கக் கோரி, ஐ.நா., பொது சபையில் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. இந்தியா, இலங்கை, நேபாளம், மெக்சிகோ உள்ளிட்ட நாடுகள் இதற்கான தீர்மானத்தை தாக்கல் செய்தன.
OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :
FOLLOWS ON:
- Instagram : / tnpscpayilagam
- Personal Twitter: / @TNPSCPayilagam) / X(twitter.com)
- Facebook Page : / TNPSCPAYILAGAM
- Email: tnpscpayilagam@gmail.com
- Telegram: https://t.me/TNPSCPAYILAGAM
- LinkedIN: TNPSCPAYILAGAM | LinkedIn
- Pinterest : https://in.pinterest.com/tnpscpayilagam
- Youtube : https://www.youtube.com/@TNPSCPAYILAGAM
If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!..