நாட்டின் முதலாவது நதிகள் இணைப்புத் திட்டம்:
- முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் 100-வது பிறந்த நாளை முன்னிட்டு, பிரதமர் திரு நரேந்திர மோடி மத்தியப் பிரதேச மாநிலம் கஜுராஹோவில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்ததுடன், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்
- தேசிய தொலைநோக்குத் திட்டத்தின் கீழ், நாட்டின் முதலாவது நதிகள் இணைப்புத் திட்டமான கென்-பெட்வா நதிகளை இணைக்கும் தேசியத் திட்டத்துக்கும் (KEN- BETWA RIVER LINKING NATIONAL PROJECT)பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.
- இந்தத் திட்டம் மத்தியப் பிரதேசத்திலும் உத்தரப்பிரதேசத்திலும் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு நீர்ப்பாசன வசதியை வழங்குவதுடன், லட்சக்கணக்கான விவசாயக் குடும்பங்களுக்கும் பயனளிக்கும்.
- இந்த திட்டம் பிராந்திய மக்களுக்கு குடிநீர் வசதிகளையும் வழங்கும். இதனுடன், நீர்மின் திட்டங்கள் 100 மெகாவாட்டுக்கும் அதிகமான பசுமை ஆற்றலை வழங்கும். இந்த திட்டம் பல வேலை வாய்ப்புகளை உருவாக்குவதோடு கிராமப்புற பொருளாதாரத்தை வலுப்படுத்தும்.
தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர்:
- தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி வி. ராமசுப்பிரமணியனை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
- திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் 1958-ம் ஆண்டு ஜூன் 30-ம் தேதி பிறந்த வி.ராமசுப்பிரமணியன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக பதவி வகித்தார். அதன்பிறகு தெலங்கானா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு, அங்கிருந்து இமாச்சல பிரதேச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி வகித்தார். அங்கிருந்து உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட வி. ராமசுப்பிரமணியன், கடந்த ஆண்டு ஜூனில் பணி ஓய்வு பெற்றார்.
- இந்நிலையில் ஓய்வு பெற்ற நீதிபதி வி. ராமசுப்பிரமணியனை தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
ஓம்காரேஷ்வர் மிதக்கும் சூரிய மின்சக்தி திட்டம்:
- எரிசக்தி தன்னிறைவு, பசுமை எரிசக்தியை ஊக்குவிப்பதற்கான உறுதிப்பாட்டிற்கு ஏற்ப, மத்தியப் பிரதேச மாநிலம் கந்த்வா மாவட்டத்தில் உள்ள ஓம்காரேஷ்வரில் நிறுவப்பட்டுள்ள ஓம்காரேஷ்வர் மிதக்கும் சூரிய மின்சக்தி திட்டத்தைப் பிரதமர் தொடங்கி வைத்தார்.
- இந்த திட்டம் கார்பன் உமிழ்வைக் குறைப்பதுடன் 2070-ம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ஜிய கார்பன் உமிழ்வு என்ற அரசின் இலக்குக்குப் பங்களிக்கும். இது நீர் ஆவியாதலைக் குறைப்பதன் மூலம் நீர் பாதுகாப்பிற்கும் உதவும்.
- TNPSC EXAM KEY POINT : OMKARESHWAR FLOATING SOLAR PROJECT DETAILS IN TAMIL
அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலை.யின் தமிழ் ஆய்வு இருக்கைக்கு மேலும் ரூ.1.5 கோடி வழங்கல்:
- அமெரிக்காவில் உள்ள ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு மற்றும் தமிழ்மொழி ஆராய்ச்சிக்காக தமிழ் இருக்கை நிறுவ, தமிழக அரசு இதுவரை ரூ.3 கோடியே 44 லட்சம் வழங்கியுள்ள து. இந்நிலையில், தற்போது மேலும் ரூ.1.5 கோடி வழங்கியிருக்கிறது.
இந்தியா- இலங்கை கடற்படை பயிற்சி
- இந்தியா- இலங்கை இடையே இருதரப்பு கடற்படை பயிற்சி விசாகப்பட்டினத்தில் டிசம்பர் 17-ம் தேதி தொடங்கி 20ம் தேதி வரை நடைபெற்றது. கிழக்கு கடற்படை தலைமையின் கீழ் இரண்டு கட்டங்களாக இந்தப் பயிற்சி நடத்தப்பட்டது .
- TNPSC EXAM KEY NOTES : SLINEX 24 DETAILS IN TAMIL (SRI LANKA - INDIA NAVAL EXERCISE )
PRSI- 46-வது அகில இந்திய தேசிய மாநாடு 2024:
- பப்ளிக் ரிலேஷன்ஸ் சொசைட்டி ஆஃப் இந்தியா (பிஆர்எஸ்ஐ) அமைப்பின் 46-வது அகில இந்திய தேசிய மாநாடு சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்ப்பூரில் டிச. 20 முதல் 22 வரை நடைபெற்றது. இந்த மாநாட்டை அம்மாநிலத்தின் துணை முதல்வர் விஜய் சர்மா தொடங்கி வைத்தார்.
- இந்த மாநாட்டில் பல்வேறு துறைகளில் சிறப்பாக சேவையாற்றிய தனிநபர்களுக்கும், நிறுவனங்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. இதில், தமிழகம் மட்டும் 9 விருதுகளை தட்டிச் சென்றுள்ளது.
- குறிப்பாக, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி) தென் மண்டலப் பிரிவு, நெய்வேலி லிக்னைட் நிறுவனம் (என்எல்சி) பொதுத் துறை நிறுவனங்கள் விருதுகளை வென்றன.
- மிகச் சிறந்த முறையில் நிகழ்ச்சிகளை நடத்தியதற்காக பிஆர்எஸ்ஐ-யின் சென்னைப் பிரிவுக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது.
- மக்கள் தொடர்புத் துறையில் நீண்ட காலமாக சிறப்பாக பணியாற்றியதற்காக பிரிசம் பி.ஆர். நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் மேலாண் இயக்குநர் சத்யன் பட்டுக்கு பி.ஆர்.எஸ்.ஐ. லீடர்ஷிப் விருது வழங்கப்பட்டது.
- தமிழகத்துக்கு அதிக விருது: அப்போலோ மருத்துவமனை, கோரமண்டல் இண்டஸ்ட்ரீஸ், கேட்டலிஸ்ட் பி.ஆர். உள்ளிட்ட நிறுவனங்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.
- மக்கள் தொடர்புத் துறையில் டெல்லி, மகாராஷ்டிராவைத்தொடர்ந்து தமிழகமும் இம்முறை அதிக எண்ணிக்கையில் விருதுகளை தட்டிச் சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
62-வது தேசிய ரோலர் ஸ்கேட்டிங் போட்டி 2024:
- தேசிய ரோலர் ஸ்கேட்டிங் சங்கம் சார்பில் பெங்களூருவில் நடைபெற்ற 62-வது தேசிய ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் பங்கேற்ற தமிழக சிறுமி ஆதிரை, 7 முதல் 9 வயது பிரிவினருக்கான ஸ்கேட் போர்ட் பிரிவில் 3-ம் இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
- சென்னை ஓஎம்ஆர் சாலையில் அமைந்துள்ள சிஷ்யா பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வரும் ஆதிரை, பயிற்சியாளர் விஜய் டாமினிக்கிடம் பயிற்சி பெற்று வருகிறார்.
பிரதமரின் தேசிய பாலகர் விரு 2024:
- குடியரசுத் தலைவர் மாளிகையின் கலாச்சார மையத்தில் (டிசம்பர் 26, 2024) நடைபெற்ற விழாவில், குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு, ஏழு பிரிவுகளில் 17 குழந்தைகளுக்கு அவர்களின் மகத்தான சாதனைகளுக்காக பிரதமரின் தேசிய பாலகர் விருதை வழங்கினார்.
- கலை, கலாச்சாரம், துணிச்சல், கண்டுபிடிப்பு, அறிவியல், தொழில்நுட்பம், சமூக சேவை, விளையாட்டு, சுற்றுச்சூழல் ஆகிய ஏழு பிரிவுகளில் சிறப்பான சாதனைகளைப் புரிந்த குழந்தைகளுக்கு மத்திய அரசு பிரதமரின் ராஷ்டிரிய பால் புரஸ்கார் விருதை வழங்குகிறது. இந்த ஆண்டு 14 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 17 குழந்தைகள் (7 சிறுவர்கள், 10 சிறுமிகள்) இந்த விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். விருது பெறும் ஒவ்வொருவருக்கும் பதக்கம், சான்றிதழ், பாராட்டுப்பத்திரம் வழங்கப்படும்.
- சீக்கியர்களின் 10-வது குரு கோவிந்த் சிங்கின் இளையமகன்கள் ஜோராவர் சிங், பாபாஃபதே சிங்கின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் 26-ம் தேதி வீர பாலகர் தினம் கொண்டாடப்படுகிறது.
- TNPSC EXAM KEY NOTES : VEER BAL DIWAS 2024 DETAILS IN TAMIL
ஆந்திர மாநில எரிசக்தி சேமிப்பு விருது 2024:
- விசாகப்பட்டினம் எஃகு ஆலையின் வர்த்தக நிறுவனமான ராஷ்டிரிய இஸ்பட் நிகாம் லிமிடெட் (RINL), இரும்பு, எஃகு பிரிவில் எரிசக்தி சேமிப்புக்கான அதன் குறிப்பிடத்தக்க முயற்சிகளுக்காக மாநில எரிசக்தி பாதுகாப்பு விருது 2024(AP State Energy Conservation Award-2024) போட்டிகளில் (ஆந்திரப் பிரதேச மாநில எரிசக்தி பாதுகாப்பு இயக்கத்தால் நடத்தப்பட்டது) மதிப்புமிக்க "தங்க விருதை" வென்றுள்ளது.
சிறந்த தகவல் தொடர்புக்கான 8 தேசிய விருதுகளை வென்றது செயில் நிறுவனம்:
- ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா நிறுவனத்துக்கு (செயில்-SAIL) இந்திய மக்கள் தொடர்பியல் சங்கம் எட்டு தேசிய விருதுகளை வழங்கியுள்ளது.
- அந்த சங்கத்தின் தேசிய விருதுகள் 2024 டிசம்பர் 20-22, ஆகிய தேதிகளில் ராய்ப்பூரில் நடைபெற்ற 46-வது அகில இந்திய மக்கள் தொடர்பியல் மாநாட்டில் வழங்கப்பட்டன. செயில் நிறுவனம் பல்வேறு பிரிவுகளில் அங்கீகரிக்கப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டன.
- மின்-செய்திமடல், பெருநிறுவனப் படம் (ஆங்கிலம்), செயில் கௌரவ தின கொண்டாட்டத்திற்கான சிறந்த தகவல் தொடர்பு இயக்கங்கள் (உள்ளகத்தில் இருப்போர்), செயில் செய்திகளுக்கான உள் இதழியல் நடைமுறைகள், சிறந்த மக்கள் தொடர்பு திட்டம், பசுமை எஃகு ஊக்குவிப்புக்கான இயக்கத்தில் சமூக ஊடகங்களின் சிறந்த பயன்பாடு, போன்றவற்றுக்காக இந்த விருதுகள் வழங்கப்பட்டன.
நல்லாட்சி தினம் :
- முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பிறந்த நாளான டிசம்பர் 25-ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் நல்லாட்சி தினமாக கொண்டாடப்பட்டு அந்த உணர்வை இந்த மாற்றம் பிரதிபலிக்கிறது.
- இந்த தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, அரசு ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 19 முதல் 25 வரை நல்லாட்சி வாரத்தைக் (சுஷாசன் சப்தா) கொண்டாடுகிறது. இது வெளிப்படையான, பயனுள்ள, பொறுப்புக்கூறல் நிர்வாகத்திற்கான அதன் உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறது. ஒரு வார கால கொண்டாட்டங்கள் நல்லாட்சி என்ற கருத்தை மாவட்டங்களிலிருந்து கிராமங்களுக்கு பரப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ள. ஆட்சி வெளிப்படையானது, பயனுள்ளது, பொறுப்புணர்வுடன் இருப்பதை இது உறுதி செய்கிறது. பல்வேறு நடவடிக்கைகள் மூலம், அரசு நல்ல நிர்வாகத்தை வழங்குவதற்கான அதன் உறுதிப்பாட்டை நிரூபிக்கிறது.
நல் ஆளுகை நடைபயணம்:
- முன்னாள் பிரதமர் திரு அடல் பிஹாரி வாஜ்பாயின் 100-வது பிறந்த நாளைக் குறிக்கும் வகையில், மத்திய இளைஞர் நலன், விளையாட்டு, தொழிலாளர், வேலைவாய்ப்பு அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா தலைமையில் குஜராத்தின் வாட்நகரில் 2024 டிசம்பர் 24, அன்று 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு 'நல் ஆளுகை நடைபயணத்திற்கு' ஏற்பாடு செய்யப்பட்டது.
- குஜராத் மாநில அமைச்சர்களும் முக்கிய பிரமுகர்களும், மைபாரத் தன்னார்வலர்களும் இந்த நடைப்பயணத்தில் பங்கேற்றனர்.
ராஷ்ட்ரபர்வ் இணையதளம், கைபேசி செயலி:
- முன்னாள் பிரதமர் திரு அடல் பிஹாரி வாஜ்பாயின் பிறந்த நாளை நினைவுகூரும் 'நல்லாட்சி தினத்தை' முன்னிட்டு 2024 டிசம்பர் 25 பாதுகாப்புத் துறைச் செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங், மொபைல் செயலியுடன் ராஷ்டிரபர்வ் (Rashtraparv)/என்ற இணையதளத்தைத் தொடங்கி வைத்தார்.
- TNPSC EXAM KEY NOTES : RASHTRAPARV WEBSITE & MOBILE APP DETAILS IN TAMIL
3-வது பெரிய புத்தொழில் மையமாக இந்தியா:
- உலகளவில் மிகவும் துடிப்பான புத்தொழில் சூழல் அமைப்புகளில் ஒன்றாக இந்தியா உருவெடுத்துள்ளது. 3-வது பெரிய புத்தொழில் மையமாக இந்தியா தனது இடத்தைப் பெற்றுள்ளது.
- இந்தியாவில் 73,000 க்கும் மேற்பட்ட புத்தொழில் நிறுவனங்களில் குறைந்தது ஒரு பெண் இயக்குநர் உள்ளார். அவை ஸ்டார்ட்அப் இந்தியா முன்முயற்சியின் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இது அரசால் ஆதரிக்கப்படும் 1,57,066 புத்தொழில் நிறுவனங்களில் கிட்டத்தட்ட பாதியாகும்.
- 2016-ல் தொடங்கப்பட்ட ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம் இந்த முயற்சியில் மைல்கல்லாக அமைந்துள்ளது. 2024 டிசம்பர் 25 நிலவரப்படி, 157,066 புத்தொழில் நிறுவனங்கள், தொழில் - உள்நாட்டு வர்த்தகத்தை மேம்பாட்டுத் துறையால் (டிபிஐஐடி - DPIIT) அங்கீகரிக்கப்பட்டுள்ளன. 759,303 பயனர்கள் தளத்தில் பதிவு செய்துள்ளனர்.
- புத்தொழில்கள் நாடு முழுவதும் 1.6 மில்லியனுக்கும் அதிகமான வேலைகளை உருவாக்கியுள்ளன.
சம்ரித் (SAMRIDH) என்பது மென்பொருள் தயாரிப்புகளுக்கான தேசிய கொள்கை - 2019-ன் கீழ் புத்தொழில் நிறுவனங்களின் செயல்பாடுகளை முடுக்கிவிடுவதற்கான மின்னணுவியல் துறையின் முதன்மைத் திட்டமாகும். ஆகஸ்ட் 2021-ல் தொடங்கப்பட்ட சம்ரித் திட்டம், 4 வருட காலப்பகுதியில் ரூ. 99 கோடி செலவில் 300 மென்பொருள் தயாரிப்பு புத்தொழில் நிறுவனங்களை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தயாரிப்புகளை சந்தைக்கு ஏற்றதாக மாற்றுதல், வணிகத் திட்டம், முதலீட்டாளர் இணைப்பு, சர்வதேச விரிவாக்கம், அமைச்சகத்தின் மூலம் ரூ.40 லட்சம் வரை நிதியுதவி போன்ற சேவைகளை வழங்கி சம்ரித் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தை மின்னணுவியல் அமைச்சகத்தின் புத்தொழில் மைய டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் செயல்படுத்துகிறது.300 புத்தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவு அளிக்கும் இலக்கை அடைவதன் ஒரு பகுதியாக 125 புத்தொழில் நிறுவனங்களைத் தேர்ந்தெடுத்து ஆதரிப்பது மத்திய அரசின் 100 நாள் செயல்திட்டத்தின் ஒரு பகுதியாகும்.