முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்:
- 10 ஆண்டுகள் பிரதமராக பதவி வகித்த மன்மோகன் சிங், உடல் நலக்குறைவால் 26.12.2024 காலமானாா். அவரது மறைவையொட்டி ஏழு நாள்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, அனைத்து மத்திய, மாநில அரசு அலுவலகங்களிலும் தேசியக் கொடி அரை கம்பத்தில் பறக்க விடப்பட்டன.
- கடந்த 1932ம் ஆண்டு பிரிட்டிஷ் இந்தியாவின் மேற்கு பஞ்சாப்பில் மன்மோகன் சிங் பிறந்தார். இன்று இது பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் ஒரு பகுதியாக இருக்கிறது.
- 1971ம் ஆண்டு வர்த்தக அமைச்சகத்தின் ஆலோசராக இந்திய அரசின் பணியை தொடங்கினார் மன்மோகன். அதன் பின்னர் நிதி அமைச்சகத்தின் தலைமை பொருளாதார ஆலோசகர், ரிசர்வ் வங்கியின் ஆளுநர், திட்ட கமிஷனின் துணைத் தலைவர் ஆகிய பதவிகளை வகித்து வந்தார்.
- இதனையடுத்து வி.பி.நரசிம்மராவ் ஆட்சியில் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க மன்மோகனுக்கு நிதியமைச்சர் பதவி வழங்கப்பட்டது. 1991-1996 காலத்தில் மன்மோகன் மத்திய நிதியமைச்சராக இருந்தார். இந்த காலத்தில்தான் உலகமயம், தாராளமயம், தனியார்மயம் ஆகிய கொள்கைகளை அவர் அமல்படுத்தினார்.
- இதனையடுத்து கடந்த 2004ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி பொறுப்பேற்றபோது மன்மோகன் பிரதமராக தேர்வாகினார்.
அமோல்டு ஆராய்ச்சி மையம்:
- ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகள், கைக்கடிகாரங்கள், அணியக்கூடிய பொருட்களுக்கான அடுத்த தலைமுறை அமோல்டு தொடுதிரைகளை உருவாக்கும் நோக்குடன் புதிய ஆராய்ச்சி மையத்தை சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் தொடங்கியுள்ளது.
- தேசிய உயர் சிறப்பு மையமான ‘அமோல்டு ஆராய்ச்சி மையத்துக்கு’ மத்திய அரசின் மின்னணு, தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், டாடா சன்ஸ் நிறுவனம் ஆகியவை நிதியுதவி அளிக்கின்றன. இந்தியாவில் தொடுதிரை உற்பத்தித் தொழிலை மேம்படுத்துவதற்கான நாட்டின் முன் முயற்சிக்கு இந்த மையம் உதவிடும்.
- பஞ்சாயத்துகள் (ஷெட்யூல்ட் பகுதிகளுக்கு விரிவாக்கம்) சட்டம், 1996 (பெசா சட்டம்) பற்றிய விழிப்புணர்வைப் பரவலாக்கும் நோக்கத்துடன் ஜார்க்கண்ட் அரசின் பஞ்சாயத்து ராஜ் துறை 2024, டிசம்பர் 24 அன்று ராஞ்சியில் தேசிய பயிலரங்கிற்கு ஏற்பாடு செய்துள்ளது. பெசா சட்டம் குறித்த பயிலரங்கில் ஜார்க்கண்ட் பஞ்சாயத்து ராஜ், ஊரக வளர்ச்சி மற்றும் ஊரகப் பணிகள் துறை அமைச்சர் திருமதி தீபிகா பாண்டே சிங் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுவார்.
டிராய்-ன் புதிய இணையதளம் அறிமுகம் (https://trai.gov.in/):
- இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தனது சேவைகளை விரிவுபடுத்தும் வகையில், மேம்படுத்தப்பட்ட இணைய தளத்தை அறிமுகம் செய்துள்ளது. அதிகரித்து வரும் சமூக ஊடகங்களின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் வகையில், அனைத்து தரப்பினருக்கும் ஒழுங்கு முறைப்படுத்தப்பட்ட தகவல் பகரப்படுவதற்கு புதிய பகிர்வு அம்சங்கள் உதவிசெய்யும்.
- இந்த இணையதளம், தொலைத்தொடர்பு, ஒலிபரப்பு விதிமுறைகள், கொள்கைகள், சட்டங்கள், புள்ளிவிவரங்கள், உள்ளிட்ட பல்வேறு விரிவான தகவல்களை வழங்குகிறது. இந்தத் தரவுகளை பொதுமக்கள், ஆராய்ச்சியாளர்கள், சர்வதேச பிரதிநிதிகள் எளிதில் அணுகிப் பயன்படுத்தலாம்.
ஒடிசா சூரியசக்தி முதலீட்டாளர் மாநாடு
- புவனேஸ்வரில் கிரிட்கோ ஏற்பாடு செய்திருந்த ஒடிசா சூரியசக்தி முதலீட்டாளர்கள் மாநாட்டில் இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமையின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான திரு. பிரதீப் குமார் தாஸ் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
- 2030-ம் ஆண்டுக்குள் 10 ஜிகாவாட் திறனை அடைவதற்கான இலக்கை ஒடிசா மாநிலம் நிர்ணயித்துள்ள நிலையில், இதற்கு உதவி நல்கும் தனது உறுதிப்பாட்டை ஐ ஆர்இடிஏ (Indian Renewable Energy Development Agency Limited (IREDA)) தெரிவித்தது. சூரியசக்தி, நீர், எத்தனால், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகியவற்றை உள்ளடக்கிய ஒடிசாவின் பசுமை எரிசக்தி திட்டங்களுக்கு ஐஆர்இடிஏ ஏற்கனவே ரூ. 3,000 கோடிக்கு மேல் அனுமதி அளித்துள்ளது.
- முன்னணி சூரிய மின்சக்தி உற்பத்தியாளராகவும், சூரியசக்தி உபகரணங்கள் உற்பத்தி மையமாகவும் ஒடிசா உருவாவதற்கான வாய்ப்புகளை திரு தாஸ் எடுத்துரைத்தார்.ஐஆர்இடிஏ-ன் தேசிய பங்களிப்புகளைப் பகிர்ந்து கொண்ட அவர், இந்நிறுவனம் 2.08 லட்சம் கோடிக்கு மேல் அனுமதித்துள்ளது என்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களுக்கு 1.36 லட்சம் கோடி வழங்கியுள்ளது என்றும் கூறினார்.
OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :
FOLLOWS ON:
- Instagram : / tnpscpayilagam
- Personal Twitter: / @TNPSCPayilagam) / X(twitter.com)
- Facebook Page : / TNPSCPAYILAGAM
- Email: tnpscpayilagam@gmail.com
- Telegram: https://t.me/TNPSCPAYILAGAM
- LinkedIN: TNPSCPAYILAGAM | LinkedIn
- Pinterest : https://in.pinterest.com/tnpscpayilagam
- Youtube : https://www.youtube.com/@TNPSCPAYILAGAM
If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!..