CURRENT AFFAIRS IN TAMIL DECEMBER 2024 - (28.12.2024)

TNPSC PAYILAGAM
By -
0

 

CURRENT AFFAIRS IN TAMIL DECEMBER 2024 - (28.12.2024)

நியமனம்:

  • புகழ்பெற்ற மருத்துவ நிபுணரும் தொலைநோக்குப் பார்வை கொண்ட  தலைவருமான டாக்டர் சந்தீப் ஷா, இந்திய தர கவுன்சிலின் அங்கமான சோதனை மற்றும் அளவுத்திருத்த ஆய்வகங்களுக்கான தேசிய அங்கீகார வாரியத்தின் (National Accreditation Board for Testing and Calibration Laboratories (NABL)) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். சோதனை மற்றும் அளவுத்திருத்த சேவைகளின் தரத்தை மேம்படுத்த இந்த அமைப்பு செயல்படுகிறது. நுகர்வோர், வணிகங்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் பயன்படுத்தும் தயாரிப்புகள் மற்றும் சேவைகளில் நம்பிக்கையை  இது உறுதி செய்கிறது.
  • அகமதாபாதின் பி.ஜே மருத்துவக் கல்லூரியில் எம்.டி நோயியல் மற்றும் கிருமி இயலில் தங்கப் பதக்கம் பெற்ற டாக்டர் ஷா, நோயியல், மூலக்கூறு உயிரியல், நோயெதிர்ப்பியல் ஆகியவற்றில் விரிவான கல்வியையும், தொழில்முறை பின்னணியையும் கொண்டவர். இவர் நியூபெர்க் டயக்னாஸ்டிக்ஸில் இணை நிர்வாக இயக்குநராகவும், நியூபெர்க் சுப்ராடெக்  ஆய்வகங்களின் நிறுவனராகவும் உள்ளார். மேலும், சிறுநீரக நோய்கள் நிறுவகம் மற்றும் ஆராய்ச்சி மையத்தின்  கௌரவ இயக்குநராகவும் பணியாற்றுகிறார்.
  • டாக்டர் ஷா, பேராசிரியர் சுப்பண்ணா அய்யப்பனுக்குப் பிறகு இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.


இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி சாதனை -2023-24:

  • 2023-24 ஆம் ஆண்டில் நாடு இதுவரை இல்லாத அளவுக்கு நிலக்கரி உற்பத்தியை கண்டுள்ளது. 2023-24 ஆம் ஆண்டில் அகில இந்திய நிலக்கரி உற்பத்தி 997.826 மில்லியன் டன்னாக இருந்தது, இது 2022-23 ஆம் ஆண்டின் 893.191 மில்லியன் டன் உடன் ஒப்பிடுகையில் சுமார் 11.71% வளர்ச்சியுடன் இருந்தது. 
  • காலண்டர் ஆண்டு 2024 இல் (ஜனவரி 2024 முதல் டிசம்பர் 15, 2024 வரை), நாடு சுமார் 988.32 மில்லியன் டன்(தற்காலிக) நிலக்கரியை உற்பத்தி செய்துள்ளது. 
  • காலண்டர் ஆண்டு 2024 இல் (டிசம்பர் 15, 2024 வரை), நாடு சுமார் 963.11மில்லியன் டன் (தற்காலிக) நிலக்கரியை விநியோகித்துள்ளது, இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் சுமார் 904.61 மில்லியன் டன்(தற்காலிக) நிலக்கரியுடன் ஒப்பிடும்போது சுமார் 6.47% வளர்ச்சியாகும். 
  • 2024  காலண்டர் ஆண்டில் (டிசம்பர் 15, 2024 வரை), மின் துறைக்கான நிலக்கரி வழங்கல் 792.958 மில்லியன் டன்னாக (தற்காலிகமானது) இருந்தது. 


நிதி அமைச்சகத்தின் செலவினத் துறை:2024-ம் ஆண்டில் செயல்பாடுகள்:

  • 2024-25 நிதியாண்டில் 181.64 கோடி  பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த நிதியாண்டில் ரூ.2.23 லட்சம் கோடி பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • 2024-25-ம் நிதியாண்டில், மாநிலங்களின் நிகர கடன் உச்சவரம்பு ரூ.9.40 லட்சம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டது. மின்சாரத் துறையில் மேற்கொள்ளப்படும் சீர்திருத்த நடவடிக்கைகளுக்காக மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கூடுதலாக 0.5% நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
  • 15-வது நிதிக் குழுவின் பரிந்துரைகளின்படி, 2024-25-ம் நிதியாண்டில் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் (GSDP) வழக்கமான நிகரக் கடன் உச்சவரம்பு 3% வரை பராமரிக்க மாநிலங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
  • 2024-25-ம் ஆண்டில் மாநிலங்களின் நிகர கடன் தொகை ரூ.9,39,717 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது மாநிலங்களின் மொத்த உற்பத்தி மதிப்பில் 3% ஆகும்.


2024-ம் ஆண்டில் உணவு பதனப்படுத்தும் தொழில்கள் அமைச்சகத்தின் சாதனைகளும் முன்முயற்சிகளும்:

  • வேளாண் விளைபொருட்களின் ஏற்றுமதியில் பதனப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களின் ஏற்றுமதி 2014-15-ம் ஆண்டில் 13.7% ஆக இருந்த நிலையில், 2023-24-ம் ஆண்டில் 23.4% ஆக அதிகரித்துள்ளது.
  • தொழில்துறையில் வருடாந்திர ஆய்வு அறிக்கையின்படி,உற்பத்தித் துறையில்  2022-23-ம் ஆண்டின் 12.41% வேலைவாய்ப்புடன் உணவு பதனப்படுத்தும் துறை மிகப்பெரிய வேலைவாய்ப்பு வழங்கும் துறையாக உள்ளது.
  • ஜனவரி 2024 முதல், பிரதமரின் நுண்ணிய உணவுப் பதனப்படுத்தும்  முறைப்படுத்தல் திட்டத்தின் மானியத்துடன் கூடிய கடனுதவி யின் கீழ் மொத்தம் 46,643 கடன்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன

கரியமில வாயுவின் வெளியேற்றம்: 

  • 2005-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரையிலான காலத்தில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், கரியமில வாயுவின் வெளியேற்றம் 33% குறைந்துள்ளது. 
  • 31.10.2024-ம் தேதி நிலவரப்படி, புதைபடிமம் அல்லாத எரிபொருள் அடிப்படையிலான  எரிசக்தி வளங்களிலிருந்து ஒட்டுமொத்த மின்சார உற்பத்திக்கான நிறுவு திறன் ஒட்டுமொத்த மின் உற்பத்தி திறனில் 46.52% ஆகும். 
  • வரும் 2030-ம் ஆண்டுக்குள் கரியமில வாயு வெளியேற்றத்தின் தீவிரத்தை 45% அளவிற்கு குறைப்பதற்கும், புதைபடிம எரிபொருள் அல்லாத எரிசக்தி ஆதாரங்களிலிருந்து ஒட்டுமொத்த மின் உற்பத்திக்கான நிறுவு திறனில் 50% இலக்கை எட்ட இந்தியா நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

செமிகான் இந்தியா திட்டத்தின் கீழ் குறைக்கடத்தி உற்பத்தி 2024:

  • இந்தியாவில் குறைக்கடத்தி உற்பத்தி பிரிவை ரூ. 91,526 கோடி முதலீட்டில் அமைப்பதற்கான டாடா எலக்ட்ரானிக்ஸ் பிரைவேட் லிமிடெட்-இன் (Tata Electronics Private Limited (TEPL) )முன்மொழிவு பிப்ரவரி 2024 இல் அங்கீகரிக்கப்பட்டது.  
  • இந்தியாவில் அவுட்சோர்ஸ் செமிகண்டக்டர் அசெம்பிளி மற்றும் டெஸ்ட் (OSAT facility) வசதியை ரூ. 27,120 கோடி முதலீட்டில் அமைப்பதற்கான டாடா எலக்ட்ரானிக்ஸ் பிரைவேட் லிமிடெட்-இன் திட்டம், பிப்ரவரி 2024 இல் அங்கீகரிக்கப்பட்டது. 
  • இந்த வசதி ஒரு நாளைக்கு 48 மில்லியன் உற்பத்தி திறன் கொண்ட உள்நாட்டு குறைக்கடத்தி பேக்கேஜிங் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும். 
  • இந்தியாவில் ரூ. 7,584 கோடி முதலீட்டில் ஓ.எஸ்.ஏ.டி வசதியை அமைப்பதற்கான சி.ஜி பவர் மற்றும் இண்டஸ்ட்ரியல் சொல்யூஷன்ஸ் லிமிடெட்-இன் முன்மொழிவும் பிப்ரவரி 2024 இல் அங்கீகரிக்கப்பட்டது. 
  • இந்த வசதி அமெரிக்காவிலுள்ள ரெனேசாஸ் எலக்ட்ரானிக்ஸ் அமெரிக்கா நிறுவனம் மற்றும்  தாய்லாந்தின் ஸ்டார்ஸ் மைக்ரோ எலக்ட்ரானிக் நிறுவனம் ஆகியவற்றுடன் கூட்டு முயற்சியாக அமைக்கப்படும்.

நகர ஆட்சி மொழி அமலாக்கக் குழுவின் 16-வது கூட்டம்:

  • விசாகப்பட்டினத்தில் உள்ள எஃகு ஆலை நிறுவனமான தேசிய இஸ்பாட் நிகம் நிறுவனத்தின் (ஆர்ஐஎன்எல்) மனிதவள மேம்பாட்டு மையத்தில் உள்ள நகர ஆட்சி மொழி அமலாக்கக் குழுவின் 16-வது கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தை இந்துஸ்தான் பெட்ரோலியக் கழகத்தின் விசாகா சுத்திகரிப்பு நிலையம் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தது.
  • ஆர்ஐஎன்எல்  நிறுவனத்தின் தலைவரும் (கூடுதல் பொறுப்பு)நகர ஆட்சி மொழி அமலாக்கக் குழுவின் தலைவருமான திரு டோலிக்  ஏ.கே.சக்சேனா  காணொலி மூலம் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். 
  • கடந்த 7 ஆண்டுகளில் நகர ஆட்சி மொழி அமலாக்கக் குழுமம் ஏற்பாடு செய்திருந்த பல்வேறு நிகழ்ச்சிகளின் தொகுப்பான'இ-பிரஸ்திகரன்'  வெளியிடப்பட்டது.  
  • மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தால் தென் மண்டல அளவில் 2023-24 ஆம் ஆண்டிற்கான சிறந்த நகர ஆட்சி மொழி அமலாக்கக் குழுவாக விசாகப்பட்டினம் ஆர் ஐஎன்எல் குழு தேர்வு செய்யப்பட்டது.


OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :



FOLLOWS ON:

  • Email: tnpscpayilagam@gmail.com

 

If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!..

Post a Comment

0Comments

Post a Comment (0)