CURRENT AFFAIRS IN TAMIL DECEMBER 2024 - (29.12.2024- 30.12.2024)

TNPSC PAYILAGAM
By -
0
CURRENT AFFAIRS IN TAMIL DECEMBER 2024 - (29.12.2024- 30.12.2024)


உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தென் ஆப்பிரிக்க அணி தகுதி பெற்றுள்ளது:
  • செஞ்சுரியனில் பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 
  • இதையடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முதல் அணியாக தென் ஆப்பிரிக்க அணி முன்னேறியுள்ளது.

சத்ரபதி சிவாஜி சிலை:

  • இந்தியா-சீனா எல்லையில் 14,300 அடி மலைச் சிகரத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி சிலையை இந்திய ராணுவம் நிறுவியுள்ளது.
  • கிழக்கு லடாக் செக்டாரில் சீனாவை ஒட்டியுள்ள எல்லை கட்டுப்பாட்டு கோட்டு (எல்ஏசி) பகுதியில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலை நிறுவப்பட்டுள்ளது.
  • எல்லையில் ஏற்பட்ட பதற்றத்தை தணிக்க இந்தியாவும், சீனாவும் டெம்சோக் மற்றும் டெப்சாங் பகுதிகளிலிருந்து படையை வாபஸ் பெற்ற சில வாரங்களுக்குப் பிறகு எல்லையில் சத்ரபதி சிவாஜி சிலை திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் 2024:

  • 2024 ஃபிடே மகளிர் உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் (FIDE Women’s World Rapid Championship 2024) தொடரானது அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்றது. இதில் மகளிருக்கான சாம்பியன்ஷிப்புக்கான இறுதிப்போட்டியில் இந்தியாவின் கோனேரு ஹம்பி, இந்தோனேசியாவை சேர்ந்த ஐரீன் சுகந்தரை எதிர்கொண்டு விளையாடினார்.
  • பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் சிறப்பாக செயல்பட்ட இந்தியாவின் கோனேரு ஹம்பி 8.5 புள்ளிகளுடன் உலக சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றார்.
  • 37 வயதான கோனேரு ஹம்பி பரபரப்பான இறுதிப்போட்டியில் 11 சுற்றுகளில் 8.5 புள்ளிகளை பெற்றதன் மூலம், இந்தோனேசியாவின் ஐரீன் சுகந்தரை தோற்கடித்தார். உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் இவர் பட்டம் வெல்வது இது இரண்டாவது முறையாகும்.

ரயில்வே அமைச்சகத்தின் 2024-ம் ஆண்டு முக்கிய செயல்பாடுகளும் சாதனைகளும் :

  • இந்திய ரயில்வே 2024 ஆம் ஆண்டில் 6,450 கிலோ மீட்டர் முழுமையான பாதை புதுப்பித்தலை மேற்கொண்டது.
  • இந்திய ரயில்வே 2024 ஆம் ஆண்டில் 3,210 கிலோ மீட்டரை மின்சாரமயமாக்கியது.
  • புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன் 2,014 மெகாவாட்டை எட்டியது.
  • 136 வந்தே பாரத் ரயில்கள், முதல் நமோ பாரத் ரேபிட் ரயில் ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டன.
  • உச்ச பட்ச பயண காலங்களில் 21,513 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.
  • இந்திய ரயில்வே 2024 ஆம் ஆண்டில் 1,473 மெட்ரிக் டன் சரக்குகளை ஏற்றி, 3.86% வளர்ச்சியை அடைந்தது.
  • அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டத்தின் கீழ் 1,337 நிலையங்களில் 1,198 நிலையங்களில் பணிகள் தொடங்கப்பட்டன
  • கவச் பாதுகாப்பு தொழில்நுட்பத்துடன் கூடிய 10,000 என்ஜின்கள் பொருத்தப்பட்டு 9000 தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
  • 80 நிலையங்கள், 78 கட்டமைப்புகள் உட்பட இந்திய ரயில்வேயின் பாரம்பரிய தளங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டன.
  • 7200 கி.மீ நீளமுள்ள ரயில் பாதையில் பிரிவு வேகம், மணிக்கு 110 கிலோ மீட்டராக உயர்த்தப்பட்டுள்ளது.
  • சரக்கு முனையங்களை அமைப்பதில் தொழில்துறையினரின் முதலீட்டை அதிகரிப்பதற்காக, 'கதி சக்தி மல்டி-மாடல் கார்கோ டெர்மினல்கள் (GCT) நாடு முழுவதும் உருவாக்கப்பட்டு வருகின்றன.


OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :



FOLLOWS ON:

  • Email: tnpscpayilagam@gmail.com

 

If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!..

Post a Comment

0Comments

Post a Comment (0)