வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட்:
- விண்வெளி ஆய்வு மையத் திட்டத்தின் முன்னோட்டமாக ஸ்பேடெக்ஸ் விண்கலன்கள் பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் மூலமாக வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
- எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு பாரதிய அந்தரிக் ஷா ஸ்டேஷன் எனும் இந்திய ஆய்வு மையத்தை 2035-ம் ஆண்டுக்குள் விண்வெளியில் நிறுவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. அதற்கான முன்தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒருபகுதியாக ஸ்பேடெக்ஸ் திட்டம் (SPADEX–Space Docking Experiment) எனும் திட்டத்தின் கீழ் விண்ணில் விண்கலன்களை ஒருங்கிணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
- TNPSC KEY POINT NOTES: ஸ்பேஸ் டாக்கிங் எக்ஸ்பெரிமென்ட்" (ஸ்பேடெக்ஸ்-SpaDeX)
டிரினிடாட் மற்றும் டொபாகோ -அவசரநிலை பிரகடனம்:
- தென் அமெரிக்கக் கண்டத்தில் இரு தீவுகளைக் கொண்ட நாடு டிரினிடாட் மற்றும் டொபாகோ குடியரசு. இத்தீவுகளில் ஆரம்பத்தில், அமெரிக்கப் பழங்குடியினர் வசித்தனர். ஐரோப்பியர்களின் ஆதிக்கத்துக்குள் இந்த நாடு வந்தபோது, இங்கு வேலை செய்வதற்காக ஆப்பிரிக்க, சீன, போர்த்துக்கீசிய, இந்திய நாடுகளில் இருந்து மக்கள் கொண்டுவரப்பட்டனர்.
- ஒரு குட்டி தீவு தேசத்தில் கிரிமினல்களின் அட்டூழியத்தால் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
- அந்நாட்டுப் பிரதமர் கேத் ரொவ்ளி வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாட்டில் பொதுமக்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் கிரிமினல் நிகழ்வுகள் அதிகரித்துள்ளது. தேசிய பாதுகாப்பு கவுன்சிலுக்கு டிரினிடாட் மற்றும் டொபாகோ காவல்துறை அளித்த அறிவுரையின் பேரில் பொது அவசர நிலை பிரகடனம் செய்யப்படுகிறது. அடுத்த இரண்டு நாட்களுக்கு காவல்துறையினர் நாடு முழுவதும் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வாரண்ட் இல்லாமல் கூட கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை கைது செய்வர்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நாட்டின் அட்டர்னி ஜெனரல் ஸ்டூவர்ட் யங் வெளியிட்ட அறிக்கையில், டிசம்பர் மாதத்தில் மட்டும் நாட்டில் 61 கொலைச் சம்பவங்கள் நடந்துள்ளன. ஆண்டு முழுவதும் 623 கொலைகள் நடந்துள்ளது. இது 2022-ல் 599 ஆகவும், 2023-ல் 577 ஆகவும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
உலகின் அதிவேக ரயில்:
- மணிக்கு 450 கி.மீ. வேகத்தில் பயணிக்கும் வகையிலான உலகின் அதிவேக ரயிலை சீனா அறிமுகம் செய்துள்ளது.
- இந்த வகை ரயில்களுக்கு மேம்படுத்தப்பட்ட ‘சிஆா்450’ புல்லட் ரயில் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புல்லட் ரயிலானது நவீன தொழில்நுட்பங்களுடன் மிகச் சிறந்த முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனால் நகரங்களுக்கு இடையிலான பயண நேரம் வெகுவாக குறையும் என சீனா தெரிவித்துள்ளது.
- சீனாவில் தற்போது மணிக்கு 350 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் அதிவேக சிஆர்400 புல்லட் ரயில் இயங்கி வருகிறது. இதைத் தொடர்ந்து இந்த ரயிலானது மணிக்கு 450 கிலோமீட்டர் வேகத்தில் பயணித்து சாதனை புரிந்துள்ளது.
- சீன நாட்டிலுள்ள முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் 47,000 கிலோமீட்டர் தூரத்துக்கு அதிவேக ரயில் தண்டவாளங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :
FOLLOWS ON:
- Instagram : / tnpscpayilagam
- Personal Twitter: / @TNPSCPayilagam) / X(twitter.com)
- Facebook Page : / TNPSCPAYILAGAM
- Email: tnpscpayilagam@gmail.com
- Telegram: https://t.me/TNPSCPAYILAGAM
- LinkedIN: TNPSCPAYILAGAM | LinkedIn
- Pinterest : https://in.pinterest.com/tnpscpayilagam
- Youtube : https://www.youtube.com/@TNPSCPAYILAGAM
If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!..