CURRENT AFFAIRS IN TAMIL DECEMBER 2024 ( 08.12.2024 )

TNPSC PAYILAGAM
By -
0
CURRENT AFFAIRS IN TAMIL DECEMBER 2024 ( 08.12.2024 )


தேசிய பஞ்சாயத்து விருது 2024:

  • 2024-ஆம் ஆண்டின் தேசிய பஞ்சாயத்து விருதை (National Panchayat Awards 2024) மகாராஷ்டிர மாநிலம், லட்டூா் மாவட்டத்தில் உள்ள உடி புத்ரூக் கிராமம், வென்றது.
  • கிராம பஞ்சாயத்து சாா்பில் கட்டப்பட்ட கடைகளை குறைந்த கட்டணத்தில் வாடகைக்கு கொடுப்பது; சுய உதவிக் குழுக்கள் மற்றும் திறன் பயிற்சிகள் மூலம் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது; குடிசைத்தொழில்களில் பெண்களுக்கு சுயவேலைவாய்ப்பைக் கண்டறிவது ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. 
  • பாதுகாப்பை உறுதி செய்ய கிராமத்தில் 35 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் அனைத்து வசதிகளுடன் கூடி கணினி மையமும் அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட கவுன்சில் மற்றும் பஞ்சாயத்து குழுக்களால் மேற்கொள்ளப்படும் இந்த முயற்சியின் கீழ் தாழ்த்தப்பட்ட சமூக மக்கள் மற்றும் ஏழைகளின் பொருளாதார நிலை மேம்பட்டுள்ளது.
  • இந்த முயற்சிகளை அங்கீகரித்த மத்திய அரசு, வறுமையில்லா வாழ்வாதார கிராமமாக உடி புத்ரூக்கை அறிவித்து, தேசிய பஞ்சாயத்து விருது வழங்கவுள்ளது.சிய பஞ்சாயத்து விருதுகள் 2024-க்கான விருது வழங்கும் விழா 11 டிசம்பர் 2024 அன்று புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நடைபெறும், அங்கு  குடியரசுத் தலைவர் திருமதி. திரௌபதி முர்மு விருதுகளை வழங்குவார்.


மெகா எண்ணெய் பனை தோட்ட இயக்கம், 2024:

  • மெகா எண்ணெய் பனை தோட்ட இயக்கம், 2024 (The Mega Oil Palm Plantation Drive, 2024)ஜூலை 15 முதல் செப்டம்பர் 30 வரை ஏற்பாடு செய்யப்பட்டது. 17,000 ஹெக்டேர் பரப்பளவில் சுமார் 25 லட்சம் நடவுப்பொருட்கள் 15,755 விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன. 
  • அரசு திட்டத்தின் கீழ் எண்ணெய் பனை வளர்ப்பு பொருத்தமான வேளாண் காலநிலை நிலைமைகளைக் கொண்ட சாத்தியமான பகுதிகளில் மட்டுமே ஊக்குவிக்கப்படுகிறது. 
  • இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் - இந்திய எண்ணெய் பனை ஆராய்ச்சி நிறுவனத்தின் கூற்றுப்படி, எண்ணெய் பனை சாகுபடி நிலத்தடி நீர் இருப்பை மோசமாக பாதிக்காது. மேலும் வாழை, கரும்பு மற்றும் நெல் போன்ற பயிர்களுடன் ஒப்பிடும்போது குறைந்த நீரே தேவைப்படுகிறது. 
  • மேலும், நீரை உகந்த முறையில் பயன்படுத்துவதை உறுதி செய்வதற்காக எண்ணெய் பனை நடவுடன் சொட்டு நீர் பாசனத்தையும் அரசு ஊக்குவித்து வருகிறது. மேலும், எண்ணெய் பனை இலைகள் மற்றும் காலி பழக் குலைகள் வடிவில் அதிக உயிர்ப்பொருளை உற்பத்தி செய்வதால் மண் வளம் பாதிக்கப்படுவதில்லை, இதனால் மண் வளத்தை மீண்டும் பெற உதவுகிறது.


இந்தியா- ரஷ்யா இடைய ராணுவ ஒத்துழைப்பு குறித்த கூட்டம் 2024:

  • இந்தியா- ரஷ்யா இடைய ராணுவ ஒத்துழைப்பு குறித்த கூட்டம் மாஸ்கோவில் வரும் 10-ம் தேதி நடைபெறுகிறது. இதில் அமைச்சர் ராஜ்நாத் சிங், ரஷ்யா பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆண்ட்ரே பெலாஸ்சோவ் கலந்து கொள்கின்றனர். 
  • அப்போது இந்தியாவுக்கு ஒப்பந்தப்படி ராணுவத் தளவாடங்களை விநியோகிப்பதில் தாமதம் ஏற்படுவது குறித்து கேள்வி எழுப்ப ராஜ்நாத் சிங் திட்டமிட்டுள்ளார். இந்த கூட்டத்தில் இருநாட்டு ராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.
  • ரஷ்யாவிடமிருந்து எஸ்-400 வான் பாதுகாப்பு ஏவுகணைகளை வாங்க இந்தியா கடந்த 2018-ம் ஆண்டு ரூ.40,000 கோடி மதிப்பில் ஒப்பந்தம் செய்தது.இந்தியாவுக்கு, ரஷ்யா இதுவரை 3 எஸ்-400 ஏவுகணை படைப்பிரிவுகளை மட்டும் விநியோகித்துள்ளது. 
  • இதேபோல் ரஷ்யாவிடமிருந்து எஸ்எஸ்என் ரக அணுசக்தி நீர்மூழ்கி கப்பலை 10 ஆண்டு காலம் குத்தகைக்கு எடுக்க இந்தியா கடந்த 2019-ம் ஆண்டு ஒப்பந்தம் செய்தது. இதன் விநியோகமும் 2028-ம் ஆண்டுவரை தாமதம் ஆகும் என கூறப்படுகிறது. 

இந்திரா காந்தி அமைதிப் பரிசு 2024:

  • இந்திரா காந்தி அமைதிப் பரிசுக்கு முன்னாள் சிலி நாட்டின் அதிபர் மைக்கேல் பேச்லெட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • டெல்லியில் உள்ள இந்திரா காந்தி நினைவு அறக்கட்டளை இதை அறிவித்துள்ளாது. முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகரும், முன்னாள் வெளியுறவுத்துறை செயலருமான சிவசங்கர் மேனன் தலைமையிலான குழு, விருதுக்குரிய நபரின் பெயரை தேர்வு செய்து அறிவித்துள்ளது.
  • மனித உரிமை, அமைதி, சமத்துவம் ஆகிய துறைகளில் முன்னாள் சில அதிபர் மைக்கேல் பேச்லெட் ஆற்றிய பங்களிப்புக்காக இந்த விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் ஐ.நா. சபையின் முதல் பெண் இயக்குநர், மனித உரிமைகளுக்கான ஐ.நா. சபையின் உயர் தூதர், சிலி நாட்டின் அதிபராக 2 முறை பணியாற்றியது போன்ற பணிகளுக்காகவும் அவர் இந்த விருதைப் பெறுகிறார்.
  • ரூ.25 லட்சம் ரொக்கம், பாராட்டுப்பத்திரம் ஆகியவை அடங்கியது இந்த விருது. 1986-ம் ஆண்டு முதல் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பெயரால் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.

கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்ற தலித் அல்லாத மனைவியின் குழந்தைக்கு எஸ்சி சாதி சான்றிதழ்:

  • தலித் கணவரிடமிருந்து விவாகரத்து கோரும் நிலையில், தலித் அல்லாத அவரின் மனைவியின் பராமரிப்பில் வளரும் அவர்களது குழந்தைகளுக்கு எஸ்சி சாதிச் சான்றிதழை வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி இந்த உத்தரவை நீதிபதிகள் பிறப்பித்துள்ளனர்.
  • குழந்தைகளின் படிப்பு வேலைவாய்ப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு 142 சட்டப் பிரிவின் கீழ் உச்ச நீதிமன்றத்துக்கு உள்ள சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.
  • மேலும், குழந்தைகள் வளரும் வரை அவர்களது படிப்பு உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் அவரது தந்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்தனர்.


டிசம்பர் 8 -சார்க் பட்டய தினம் / SAARC Charter Day:

  • சார்க் பட்டய தினம் ஆண்டுதோறும் டிசம்பர் 8 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது , இது தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு சங்கத்தின் (SAARC-South Asian Association for Regional Cooperation) வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது .
  • இந்த நாள் டாக்காவில் நடைபெற்ற முதல் சார்க் மாநாட்டின் போது 1985 இல் சார்க் சாசனத்தில் கையெழுத்திட்டதை நினைவுகூருகிறது . இந்த ஆண்டு, பிராந்திய குழு அதன் 39 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது, இது தெற்காசிய நாடுகளின் ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர முன்னேற்றத்திற்கான நீடித்த அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது.
  • சார்க்கின் முதன்மை நோக்கங்கள் பொருளாதாரம், சமூகம், கலாச்சாரம், தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் துறைகள் உட்பட பல்வேறு களங்களில் செயலில் ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர உதவியை மேம்படுத்துவதை மையமாகக் கொண்டுள்ளன.


டிசம்பர் 8 - போதி தினம்

  • ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 8 அன்று, போதி தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது, பொதுவாக பல்வேறு பெயர்களில். கௌதம புத்தரையும் அவரது பிரசங்கங்களையும் கௌரவிக்கும் வகையில், இது பொதுவாக சந்திர நாட்காட்டியின் 12வது மாதத்தின் எட்டாவது நாளில் நிகழ்கிறது.


OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN GOOGLE DRIVE :


FOLLOWS ON:

  • Email: tnpscpayilagam@gmail.com

 

If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!..




Post a Comment

0Comments

Post a Comment (0)