CURRENT AFFAIRS IN TAMIL DECEMBER 2024 ( 09.12.2024 )

TNPSC PAYILAGAM
By -
0

CURRENT AFFAIRS IN TAMIL DECEMBER 2024 ( 09.12.2024 )



மதுரை டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை ரத்து செய்ய  தனித் தீர்மானம்

  • மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் நாயக்கர்பட்டி கிராமத்தில் இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை உடனடியாக ரத்து செய்திடவும், மாநில அரசின் அனுமதியின்றி எந்த சுரங்க உரிமத்தையும் வழங்கக்கூடாது என்று மத்திய அரசை வலியுறுத்தியும் தமிழக சட்டப்பேரவையில் அரசின் தனித் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.


100% கார்பன் உமிழ்வு இல்லாத சரக்குப் போக்குவரத்து:

  • சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்), 2050-ம் ஆண்டில் ‘100% கார்பன் உமிழ்வு இல்லாத சரக்குப் போக்குவரத்து’ என்ற இலக்கை எட்டுவதற்கான மிக முக்கிய முன்முயற்சியைத் தொடங்கியுள்ளது.
  • இந்தியாவின் வாகனப் போக்குவரத்தில் 5 சதவீத அளவுக்கு மட்டுமே சரக்கு லாரிகள் உள்ள நிலையில், சுமார் 65 சதவீத டீசல் பயன்படுத்தப்படுகிறது. கணிசமான அளவு காற்றுமாசுக்கும், எரிபொருள் நுகர்வு செலவுகளுக்கும் இது வழிவகுக்கிறது. எனவே மின்சார சரக்கு லாரிகள் போன்ற கார்பன் உமிழ்வு இல்லாத சரக்குப் போக்குவரத்தை விரைவுபடுத்துவது அவசியம்.
  • ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சிப் பூங்காவில்  (9 டிசம்பர் 2024) நடைபெற்ற ‘கார்பன் உமிழ்வு இல்லாத சரக்குப் போக்குவரத்துக்கு மாற்றுதல்’ நிகழ்வில், ஐஐடி மெட்ராஸ்-ல் உள்ள கார்பன் உமிழ்வு இல்லாத சரக்குப் போக்குவரத்துக்கான உயர் சிறப்பு மையம்  இரண்டு பெரிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • 1. Project Driver Rating Application (DRA): An AI-driven mobile app to assess truck driving behaviour on safety and energy efficiency
  • 2. Project Outreach: Generate awareness about Zero Emission Trucking (ZETs) among the truck drivers and operators


மகளிர் வாழ்​வாதார நலத்​திட்​டங்களை தெரிந்​து ​கொள்​வதற்கான உதவி எண்ணை, தமிழக அரசு அறிவித்​துள்ளது:

  • தமிழக அரசின் சார்​பில் தமிழ்​நாடு மகளிர் மேம்​பாட்டு நிறு​வனத்​தின்​கீழ் தமிழ்​நாடு ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்​வாதார இயக்​ககங்கள் மற்றும் வாழ்ந்து காட்டு​வோம் திட்டம் மூலம் பல்வேறு நலத்​திட்​டங்கள் மகளிருக்காக செயல்​படுத்​தப்​பட்டு வருகின்றன. அதில் பால்வள மையம், மாதவிடாய் சுகாதார மேலாண்மை மன்றங்கள், அறிவுசார் மையங்கள் மூலம் அளிக்​கப்​படும் பயிற்சிகள், சமுதாய பண்ணைப் பள்ளி​கள், சமுதாய திறன் பள்ளிகள் மூலம் வழங்​கப்​படும் பயிற்சிகள் குறிப்​பிடத்​தக்கவை.
  • பொது அலுவலக வேலை நாட்​களில் காலை 9.30 முதல் மாலை 6.30 மணி வரையில் 155330 என்ற எண்ணை தொடர்பு ​கொண்டு ஆலோசனைகளை பெற்றுக்​கொள்​ளலாம்​.


ராஜஸ்தான் உலக முதலீட்டு உச்சிமாநாடு 2024:

  • ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ஜெய்ப்பூர் கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி 09.12.2024 "எழுச்சி பெறும் ராஜஸ்தான் உலக முதலீட்டு உச்சிமாநாடு 2024" மற்றும் ராஜஸ்தான் உலகளாவிய வர்த்தகக் கண்காட்சியை  தொடங்கி வைத்தார்.
  • இந்த ஆண்டு டிசம்பர் 9 முதல் 11 வரை நடைபெறவுள்ள முதலீட்டு உச்சிமாநாட்டின் கருப்பொருள் 'நிறைவு, பொறுப்பு, தயார்நிலை' என்பதாகும். நீர் பாதுகாப்பு, நீடித்த சுரங்கம், நீடித்த நிதி, அனைவரையும் உள்ளடக்கிய சுற்றுலா, வேளாண் வணிக கண்டுபிடிப்புகள் மற்றும் பெண்கள் தலைமையிலான புத்தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட கருப்பொருள்கள் குறித்து 12 துறை சார்ந்த கருப்பொருள் அமர்வுகளை இந்த உச்சிமாநாடு நடத்தும்.
  • 'வாழக்கூடிய நகரங்களுக்கான நீர் மேலாண்மை', 'தொழில்களின் பன்முகத்தன்மை- உற்பத்தி மற்றும் அதற்கு அப்பால்' மற்றும் 'வர்த்தகம் மற்றும் சுற்றுலா' போன்ற கருப்பொருள்களில் பங்கேற்கும் நாடுகளுடன் எட்டு அமர்வுகளும் இந்த உச்சிமாநாட்டின் போது நடைபெறும்.

ஆசிய-பசிபிக் காது கேளாதோர் விளையாட்டுப் போட்டி 2024

  • மலேசியாவில் நடந்த 10 வது ஆசிய-பசிபிக் காது கேளாதோர் விளையாட்டுப் போட்டிகளில் 55 பதக்கங்களை வென்று கோலாலம்பூரில் இருந்து வெற்றிகரமாக திரும்பிய இந்திய அணிக்கு மத்திய இளைஞர் நலன், விளையாட்டு, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா  வாழ்த்து தெரிவித்தார்.
  • தடகளத்தில் 6 பதக்கங்கள் (5 தங்கம், 12 வெள்ளி, 11 வெண்கலம்), பேட்மிண்டனில் 6 பதக்கங்கள் (3 வெள்ளி, 3 வெண்கலம்), சதுரங்கத்தில் 3 பதக்கங்கள் (1 வெள்ளி, 2 வெண்கலம்), ஜூடோவில் 7 பதக்கங்கள் (2 தங்கம், 5 வெண்கலம்), டேபிள் டென்னிஸில் 3 பதக்கங்கள் (1 வெள்ளி, 2 வெண்கலம்), மல்யுத்தத்தில் 8 பதக்கங்கள் (1 தங்கம், 1 வெள்ளி, 6 வெண்கலம்) வென்றுள்ளனர்.
  • 42 ஆடவர், 26 மகளிர் உட்பட 68 பேர் கொண்ட இந்திய அணி, இதுவரை இல்லாத வகையில், 8 தங்கம், 18 வெள்ளி மற்றும் 29 வெண்கலப் பதக்கங்களைக் கைப்பற்றி போட்டியில் பங்கேற்ற 21 நாடுகளில் ஐந்தாவது இடத்தைப் பிடித்தது. 
  • இது 1984-ம் ஆண்டிலிருந்து நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இப்போட்டியில் அவர்களின் சிறந்த செயல்திறனாகும். முன்னதாக, 2015-ம் ஆண்டு தைவானில் நடந்த போட்டியில் இந்திய அணி 5 பதக்கங்களை (2 தங்கம், 3 வெள்ளி) வென்று, 23 நாடுகளில் ஒன்பதாவது இடத்தைப் பிடித்தது. ஹாங்காங்கில் ஏற்பட்ட அரசியல் அமைதியின்மை காரணமாக 2019 போட்டி ரத்து செய்யப்பட்டது.


மனித உரிமைகள் தினம் /  HUMAN RIGHTS DAY -2024

  • 1950-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் டிசம்பர் 10-ம் தேதி கடைப்பிடிக்கப்படும் இந்த குறிப்பிடத்தக்க நாள், 1948-ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையால் உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனத்தை ஏற்றுக்கொண்டதை நினைவுகூருகிறது. 
  • ஒவ்வொரு தனிநபரும் உரிமைகளுடன் பிறக்கிறார் என்பதை மனித உரிமைகள் தினம் வலுவாக நினைவூட்டுகிறது . 
  • இந்த ஆண்டின் கருப்பொருள் - "எங்கள் உரிமைகள், எங்கள் எதிர்காலம், இப்போதே” ("Our Rights, Our Future, Right Now") என்பதாகும். 

OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN GOOGLE DRIVE :


FOLLOWS ON:

  • Email: tnpscpayilagam@gmail.com

 

If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!..




Post a Comment

0Comments

Post a Comment (0)