பாலசோரில் டாப்ளர் ரேடார் நிலையம்:
- டாப்ளர் வானிலை ரேடார்கள் (Doppler Weather Radars(DWRs)) நெட்வொர்க்கானது முக்கியமாக இடியுடன் கூடிய மழை மற்றும் கனமழையைக் கண்காணிக்கவும், 3 மணி நேரம் வரை சரியான நேரத்தில் எச்சரிக்கைகளை வழங்கவும் பயன்படுத்தப்படுகிறது.
- 6 முதல் 12 மணி நேரத்திற்கு முன்பே மழை மற்றும் இடியுடன் கூடிய மழையை கணிப்பதற்காக இந்தக் கட்டமைப்பு வானிலை முன்கணிப்பு மாதிரிகளில் (Numerical Weather Prediction (NWP)), குறிப்பாக நவ்காஸ்ட் மாதிரிகளில் செயல்படுத்தப்படுகிறது. இந்த டி.டபிள்யூ.ஆர்களின் உதவியுடன் தகுந்த முன்னெச்சரிக்கைகள் வழங்கப்படுகின்றன.
- பாலசோரில் உள்ள டி.டபிள்யூ.ஆர் கட்டிடத்தை மாநில அரசு 2025 மார்ச் மாதத்திற்குள் ஒப்படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கட்டிடம் இந்திய வானிலை ஆராய்ச்சி துறையிடம் ஒப்படைக்கப்பட்ட பிறகு, டி.டபிள்யூ.ஆர் பாலசோரின் நிறுவல் மற்றும் இயக்கம் நிறைவடையும்.
- ஒடிசா மாநிலத்தில் (பாலசோர், சம்பல்பூர் மற்றும் புவனேஸ்வரில்) மூன்று டி.டபிள்யூ.ஆர் திட்டமிடப்பட்டுள்ளது.
- தற்போது, நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் 39 டாப்ளர் வானிலை ரேடார்கள் (டி.டபிள்யூ.ஆர்) நிறுவப்பட்டுள்ளன. 2026-ம் ஆண்டுக்குள் மேலும் 87 மையங்களை நிறுவ திட்டமிடப்பட்டது.
SOURCE : PIB