E-WASTE (MANAGEMENT) RULES 2022 DETAILS IN TAMIL

TNPSC PAYILAGAM
By -
0

மின்னணுக் கழிவு (மேலாண்மை) விதிகள்:


E-WASTE (MANAGEMENT) RULES 2022 DETAILS IN TAMIL

  • மின்னணுக் கழிவு (மேலாண்மை) விதிகள், 2016-ஐ மின்னணுவியல் அமைச்சகம் விரிவாக திருத்தியமைத்து, மின்னணுக் கழிவு (மேலாண்மை) விதிகள், 2022-ஐ நவம்பர் 2022-ல் அறிவிக்கை செய்துள்ளது. இது2023 ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலில் உள்ளது. 
  • மின்னணுக் கழிவுகளால் ஏற்படக்கூடிய பாதகமான விளைவுகளிலிருந்து சுற்றுச்சூழலையும், சுகாதாரத்தையும் பாதுகாக்கும் வகையில் மின்னணுக் கழிவுகள் மேலாண்மை செய்யப்படுவதை உறுதி செய்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதே இவ்விதிகளின் நோக்கமாகும்.
  • இந்த புதிய விதிகள், மின்னணுக் கழிவுகளை சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் நிர்வகிப்பதையும், மின்னணுக் கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்கான உற்பத்தியாளர் பொறுப்புணர்வை ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன. இதன்படி உற்பத்தியாளர்கள், மறுசுழற்சி செய்பவர்கள் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தால் உருவாக்கப்பட்ட இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
  • புதிய விதிகள் முறைசாரா துறையை தொழில் செய்வதற்கு முறைசாரா துறையை முறைப்படுத்தி தொழில் செய்வதற்கு வழிவகை செய்வதுடன், சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் மின்னணு கழிவுகளை மறுசுழற்சி செய்வதையும் உறுதி செய்யும்.
  • மின்னணு கழிவு (மேலாண்மை) விதிகள், 2022-ன் படி, மின்னணு கழிவுகள், நகராட்சி திடக்கழிவுகளுடன் கலப்பது கண்டறியப்பட்டால், அவை முறையாக பிரிக்கப்பட்டு, சேகரிக்கப்பட்டு, பதிவு செய்யப்பட்ட மறுசுழற்சி அல்லது புதுப்பித்தலுக்கு அனுப்பப்படுவதை உறுதி செய்வதற்காக நகர்ப்புற, ஊரக அமைப்புகளுக்கு விதிகளின் கீழ் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
  • மின்னணுப் பொருட்களின் உற்பத்தியாளர்கள் 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டில் முறையே 70% மற்றும் 80% ஆக அதிகரிப்பு இலக்குகளுடன் 2023 ஆம் ஆண்டுக்குள் குறைந்த பட்சம் 60% மின்னணு கழிவுகள் சேகரிக்கப்பட்டு மறுசுழற்சி செய்யப் படுவதை உறுதி செய்ய வேண்டும்.

SOURCE : PIB



Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)