உலகின் முதலாவது "மனிதக் கரு மூளையின்" 3D உயர் தெளிவுத்திறன் படங்கள்:
- சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்), மனிதக் கரு மூளையின் மிக விரிவான 3டி உயர் தெளிவுத்திறன் கொண்ட படங்களை வெளியிட்ட உலகின் முதலாவது ஆராய்ச்சி நிறுவனமாகும்.
- ஐஐடி மெட்ராஸ்-ல் உள்ள சுதா கோபாலகிருஷ்ணன் மூளை மையத்தின் இந்த முன்னோடிப் பணியின் மூலம், மூளை வரைபடமாக்கும் தொழில்நுட்பத்தின் எல்லைகளைக் கடந்து, இந்தியாவை மூளை வரைபடமாக்கும் அறிவியலின் உலகளாவிய மையமாகத் திகழச் செய்துள்ளது.
- உலகெங்கும் உள்ள அனைத்து ஆராய்ச்சியாளர்களுக்கும் இலவசமாகக் கிடைக்கும் வகையில், இதன் தரவுத் தொகுப்பான ‘தரணி’யை (DHARANI) ஓபன் சோர்ஸ் முறையில் பின்வரும் இணைப்பில் காணலாம் (https://brainportal.humanbrain.in/publicview/index.html)
- மனிதக்கரு மூளை பற்றி பொதுவில் அணுகக்கூடிய மிகப்பெரிய டிஜிட்டல் தரவுத்தொகுப்புதான் பரணி. 2020-2022 ஆண்டுகளில் கோவிட் தொற்றுக் காலத்தில் இந்தியாவிற்கான தனிப்பயனாக்கப்பட்ட தொழில்நுட்பத் தளத்துடன் இது உருவாக்கப்பட்டது.
- ஆலன் பிரைன் அட்லஸ்-க்கு செலவிடப்பட்ட தொகையுடன் ஒப்பிடுகையில் பத்தில் ஒரு பங்குதான் செலவிடப்பட்டுள்ளது. எனவே, ஆலன் பிரைன் இன்ஸ்டிடியூட் உடன் ஐஐடி மெட்ராஸ் இணைந்து செயல்பட்டு, அமெரிக்காவுடன் மனித மூளை வரைபட அட்டவணையில் இந்தியா இணைகிறது. அங்கு மனித மூளையை உருவாக்கும் கட்டமைப்புகள் பற்றி கிடைக்கக்கூடிய அறிவை மனிதகுலத்திற்கு இலவசமாகக் கிடைக்கக்கூடிய அட்லஸ்களை வழங்க பெரிய தொகை முதலீடு செய்யப்படுகிறது
- உலகிலேயே முதன்முறையாக சுதா கோபாலகிருஷ்ணன் மூளை மையத்தால் உருவாக்கப்பட்ட அதிநவீன மூளை வரைபடமாக்கும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, 5,132 மூளைப் பிரிவுகள் டிஜிட்டல் முறையில் பெறப்பட்டுள்ளன. இந்தப் பணியால் நரம்பியல் துறை மேம்படுத்தப்படுவதுடன், மூளையைப் பாதிக்கும் உடல்நிலைக்கான சிகிச்சையின் வளர்ச்சிக்கும் வழிவகுக்கும்.
- இத்தகைய மேம்பட்ட மனித நரம்பியல் தரவுகள் இந்தியாவில் தயாரிக்கப்படுவது இதுவே முதன்முறையாகும்.
- அறிவியல், தொழில்நுட்பம், கணினி மற்றும் மருத்துவம் ஆகிய துறைகளில் பெரிய அளவிலான பல்துறை முயற்சியை ஆற்றுவதற்கும், மனித மூளையை செல்லுலார் அளவில் வரைபடமாக்குவதற்கும் 2022 இல் சுதா கோபாலகிருஷ்ணன் மூளை மையம், அதிநவீன வசதிகளுடன் தொடங்கப்பட்டது.
- நூறாண்டுகள் பழமை வாய்ந்த நரம்பியல் அறிவியல் இதழான ஜர்னல் ஆஃப் கம்பேரிட்டிவ் நியூராலஜி (Journal of Comparative Neurology), இந்த ஆராய்ச்சியின் கண்டுபிடிப்புகளை சிறப்பு இதழாக வெளியிட்டது. இதழ் முழுவதும் ஐஐடி மெட்ராஸின் ஆராய்ச்சியைப் பற்றி மட்டுமே இடம்பெற்றிருப்பதால் உண்மையிலேயே தனித்துவமிக்கதாகும்.
SOORCE : PIB