HOMI BHABHA CHAIR SCHEME DETAILS IN TAMIL

TNPSC PAYILAGAM
By -
0

HOMI BHABHA CHAIR SCHEME DETAILS IN TAMIL


ஹோமி பாபா இருக்கை உருவாக்கத் திட்டம்:

  • அணுசக்தித் துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்வதற்காக சிறந்த தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் ஈடுபட்டுள்ள ஓய்வு பெற்ற விஞ்ஞானிகள் / பொறியாளர்கள் உள்ளிட்ட தலைசிறந்த நிபுணர்களுக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில், அணுசக்தித் துறையில் பணியாற்றும் பேராசிரியர்களுக்கான ஹோமி பாபா இருக்கை உருவாக்கத் திட்டம்  செயல்படுத்தப்பட உள்ளது.
  • ஹோமி பாபா இருக்கை உருவாக்கத் திட்டத்தின் கீழ் பதவிக்காலம் ஒன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை தேர்வுக் குழுவின் விருப்பப்படி உள்ளது.
  • இத்திட்டத்தின் கீழ், விருது பெறும் ஒவ்வொருவருக்கும் மாதம் ரூ.2,00,000/- மதிப்பூதியம் வழங்கப்படும் (மதிப்பூதியம் மற்றும் ஓய்வூதியம் கடைசியாக பெற்ற ஊதியத்தை விட அதிகமாக இருந்தால், ஓய்வு பெறுவதற்கு முன்பு கடைசியாக பெற்ற ஊதியத்திற்கு மதிப்பூதியம் கட்டுப்படுத்தப்படும்).
  • செயலக உதவி, தொலைபேசிக் கட்டணங்கள் மற்றும் எழுதுபொருட்கள் போன்ற செலவினங்களை ஈடுகட்ட ஆண்டொன்றுக்கு ரூ.76,000/- வீதம் எதிர்பாரா செலவின மானியமாக வழங்கப்படுகிறது.


SOURCE : PIB



Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)