மலேரியா ஒழிப்பில் இந்தியாவின் முன்னேற்றம்

TNPSC PAYILAGAM
By -
0

India's Progress in Malaria Eradication
India's Progress in Malaria Elimination :

  • மலேரியா இல்லாத எதிர்காலத்தை நோக்கிய இந்தியாவின் பயணம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தின் கதையாகும். 1947-ல் சுதந்திரத்தின் போதுமலேரியா மிகவும் முக்கியமான பொது சுகாதார சவால்களில் ஒன்றாக இருந்தது. ஆண்டுதோறும் 7.5 கோடி பேர் பாதுக்காப்பட்டு 800,000 இறப்புகள் பதிவானதாக மதிப்பிடப்பட்டுள்ளது. 
  • பல ஆண்டுஇடைவிடாத முயற்சிகள் இந்த எண்ணிக்கையை 97% க்கும் அதிகமாக வெகுவாகக் குறைத்துள்ளன. பாதிப்பு வெறும் 20 லட்சமாகவும்மலேரியா இறப்புகள் 2203-ம் ஆண்டில் வெறும் 83 ஆகவும் குறைந்துள்ளன. இந்த வரலாற்று சாதனைமலேரியாவை ஒழிப்பதிலும்மக்களுக்கு பொது சுகாதாரத்தை மேம்படுத்துவதிலும் இந்தியாவின் உறுதிப்பாட்டை எடுத்துக் காட்டுகிறது.
  • உலக சுகாதார அமைப்பு (WHO)வெளியிட்ட சமீபத்திய உலக மலேரியா அறிக்கை 2024இந்தியாவின் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கொண்டாடுகிறது. 
  • 2017 - 2023- க்கு இடையில் மலேரியா பாதிப்புமலேரியா தொடர்பான இறப்புகளில் குறிப்பிடத்தக்க குறைவுஇந்தியாவின் சாதனைகளில் அடங்கும். இந்த சாதனைகள்2030-க்குள் மலேரியா இல்லாத நிலையை அடைவதற்கான இந்தியாவின் பார்வையைப் பிரதிபலிக்கின்றன.
  • 2015 முதல் 2023 வரைபல மாநிலங்கள் அதிக சுமை வகையிலிருந்து கணிசமாக குறைந்த அல்லது பூஜ்ஜிய-சுமை வகைக்கு மாறியுள்ளன. 2015-ம் ஆண்டில் 10 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் அதிக சுமை (வகை 3) என வகைப்படுத்தப்பட்டன. 
  • இவற்றில், 2023-ம் ஆண்டில் இரண்டு மாநிலங்கள் (மிசோரம்திரிபுரா) மட்டுமே வகை 3-ல் உள்ளன. அதே நேரத்தில் ஒடிசாசத்தீஸ்கர்ஜார்க்கண்ட்மேகாலயா போன்ற 4 மாநிலங்கள் பாதிப்பு எண்ணிக்கையைக் குறைத்து வகை 2-க்கு நகர்ந்துள்ளன. 
  • மேலும்மற்ற 4 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களான அந்தமான் - நிக்கோபார் தீவுகள்மத்தியப் பிரதேசம்அருணாச்சல பிரதேசம்தாத்ரா - நகர் ஹவேலி ஆகியவை 2023-ம் ஆண்டில் பாதிப்பை கணிசமாகக் குறைத்து வகை 1 க்கு நகர்ந்துள்ளன. 
  • 2015-ம் ஆண்டில் 15 மாநிலங்கள் மட்டுமே வகை 1-ல் இருந்தன. அதேசமயம் 2023-ல்24 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் உயர் / நடுத்தர சுமை வகைகளில் இருந்து குறைந்த பாதிப்பு வகையான வகை 1-க்கு முன்னேறின.
  • 2015-2023 ஆம் ஆண்டு காலகட்டத்தில் மலேரியா பாதிப்புஇறப்புகள் சுமார் 80% குறைந்துள்ளன. இந்தியாவின் வெற்றிக்கான அடித்தளம் அதன் விரிவான மற்றும் பன்முக உத்தியில் உள்ளது. 
  • 2016-ல் தொடங்கப்பட்ட மலேரியா ஒழிப்புக்கான தேசிய கட்டமைப்பு,2027 க்குள் பூஜ்ஜிய உள்நாட்டு மலேரியா பாதிப்பு நிலையை அடைவதற்கான தெளிவான பாதையை வழங்கியுள்ளது.
  • இந்தியாவின் மலேரியா ஒழிப்பு பயணத்தில் சமூக ஒருங்கிணைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. ஆயுஷ்மான் பாரத் சுகாதார திட்டத்தில் மலேரியா தடுப்புசிகிச்சை சேவைகளை சேர்த்ததன் மூலம்பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு அத்தியாவசிய சுகாதார வசதிகள் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
  • 2030-ம் ஆண்டுக்குள் மலேரியாவை ஒழிக்க வேண்டும் என்ற இலக்கில் இந்தியா உறுதியாக உள்ளது. 2027-ம் ஆண்டுக்குள் பூஜ்ஜிய உள்நாட்டு பாதிப்பு நிலையை அடைவதற்கும்மலேரியா மீண்டும் ஏற்படுவதைத் தடுப்பதை உறுதி செய்வதற்கும் அரசு உறுதிபூண்டுள்ளது.

SOURCE : PIB


Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)