ஜல்வாஹக்' திட்டம்:
- தேசிய நீர்வழிகள் 1 (கங்கை நதி), தேசிய நீர்வழிகள் 2 (பிரம்மபுத்திரா நதி), தேசிய நீர்வழிகள் 16 (பராக் நதி) வழியாக நீண்ட தூர சரக்குகளின் போக்குவரத்தை ஊக்குவிக்கும் சரக்கு மேம்பாட்டுக்கான 'ஜல்வஹக்' என்ற முக்கிய கொள்கையை மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் 15.12.2024 வெளியிட்டார்.
- NW 1 (கங்கை நதி), NW 2 (பிரம்மபுத்ரா நதி) மற்றும் NW 16 (பராக் நதி) வழியாக இந்திய பங்களாதேஷ் நெறிமுறை (IBP) வழியே நீர்வழிகள் வழியாக சரக்குகளை கொண்டு செல்லும்போது ஏற்படும் மொத்த இயக்கச் செலவில் 35% வரை 'ஜல்வஹக்' திட்டம் ஏற்படும் செலவை குறைக்கும்.
- ஜல்வாஹக் திட்டம் நீண்ட தூர சரக்குகளை ஊக்குவிப்பதுடன், நேர்மறையான பொருளாதார மதிப்பு முன்மொழிவுடன் நீர்வழிகள் வழியாக சரக்குகளின் இயக்கத்தை ஆராய வர்த்தக நலன்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்குகிறது.
- மேலும், கொல்கத்தாவிலிருந்து தொடங்கும் வழக்கமான அட்டவணைப்படுத்தப்பட்ட சரக்கு சேவை, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சரக்குகளை கொண்டு சென்று வழங்குவதை உறுதி செய்யும்.
- இது ஒரு திறமையான, சிக்கனமான மற்றும் சுற்றுச்சூழலுக்கு பொறுப்பான போக்குவரத்து முறையில் சரக்குகளை வழக்கமான இயக்கத்திற்கு தேசிய நீர்வழிகள் தயாராக உள்ளது என்ற நம்பிக்கையை நமது பயனர்களிடையே உருவாக்கும்.
SOURCE : PIB